Saturday, December 22, 2012

"குமரி "



கிளாஸ்ல உக்காந்திருக்க பிடிக்காம வாத்தி கிட்ட “பாத்ரூம்” போறேன்னு பொய் சொல்லிட்டு வெளியே வந்திட்டேன் .ஸ்கூல் முழுக்க சுத்தினேன் ,எதிர்பட்ட வாத்திங்க கேக்கும்போது ‘அந்த கிளாசுக்கு போக சொன்னாரு’ ‘எங்க வாத்தி அத வாங்க சொன்னாரு.. இத வாங்கியார சொன்னாரு’ன்னு பொய் சொல்லிட்டு மதியம் வரைக்கும் வெளியவே இருந்தேன். சாப்பாட்டு பெல் அடிச்சதும் கணேசன் வந்தான் “ஏண்டா குமாரு இப்படி கிளாசுக்கு வராம இருந்திட்ட, நல்லா நடத்தினாரு வாத்தி, இன்னைக்கு தூக்கமே வரலடா கிளாஸ்ல, நல்ல மார்க் வாங்குவ இப்படி கிளாசுக்கு வராம இருந்தா… என்னடா பண்ணபோற...சாயந்திரம் நான் உங்க வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட சொல்லறேன், நீ இப்போ எல்லாம் சரியாய் கிளாசுக்கு வரதில்லைன்னு!”
“வேணாம்டா, கணேசு வேணாம், சொல்லாதடா அம்மா அடிக்கும்டா என்ன, அதுக்கு நான் படிக்கணும், பெரிய ஆளா வரணும்னு ரொம்ப ஆசைடா”. “அப்போ நீ ஒழுங்க கிளாசுல இருக்கணும்….நான் அம்மாகிட்ட சொல்லல” என்றான் கணேசு. “ம்”என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட்டு
பெண் பிள்ளைக சாப்பிட்டுகொண்டிருப்பதையே பார்த்துகொண்டிருந்தேன். முதுகில தட்டி, “குமாரு அங்கன என்ன பாக்குற ஏற்கனவே கணக்கு வாத்தி அடிச்சத மறந்திட்டியா..டேய் குமாரு வா சாப்பிட்டு கிளாசுக்கு போவோம்” என்று சொல்லி இழுத்துகொண்டு போனான் சாப்பிட.
மதிய வகுப்பில் எனக்கு பிடித்த ஆசிரியை கிளாஸ் எடுத்தாங்க , அவங்க சொல்லித்தரது மட்டும் இல்லாம அவங்க சடை அவங்க வைத்துகொண்டிருந்த ஒற்றை ரோஜா ,இதையும் சேர்த்து கவனித்ததில பாடம் சூப்பெரா மண்டைக்குள்ள போய்டிச்சி..எப்படி சொல்றது அம்மா கிட்ட?, அம்மா எப்படி இத புரிஞ்சிக்கும் எனக்கு பயமாவே இருந்தது, “என்னடா யோசிச்சிட்டே வர, குமாரு.. இப்போவெல்லாம் நீ சரியாய் இல்லடா”, “கணேசு என்ன சொல்ற நீ!” “ஒண்ணுமில்ல டா குமாரு
..அங்க பாரு உங்க அம்மா தூக்க முடியாம தூக்கிட்டு வருது பாரு ,போய் வாங்குடா” என கத்தினான். நான் ஓடிப்போய் அம்மாவிடம் வாங்கிய கூடையை இடுப்பில் வைத்துகொண்டு நடக்க, அம்மா என்னை ஒரு மாதிரி பார்த்துகொண்டே கணேசிடம் பேசினாள், “இந்த வருஷம் முடிச்சிட்டு டவுனுல நீ படிக்க போறியாமே ,நம்ம குமாருவையும் நீ படிக்கிற இடத்தில சேர்க்கணும் ,உங்க அப்பா வீட்ல காலையில எத்தன மணிக்கு இருப்பாரு கணேசு?” என அம்மா கேட்க “ஏழு மணிக்கு அத்த” ன்னு சொல்லிட்டு அவங்க சந்தில திரும்பிட்டான்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா கூடையை வாங்கி வெச்சிட்டு, “இரு குமாரு கொப்பிய குடிச்சிசிட்டு டியூஷனுக்கு போகலாம்”னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே,நான் கண்ணாடிய பார்த்து நெற்றில வந்த வியர்வையை தொடைத்துகொண்டே கண்ணை அங்கும் இங்கும் உருட்டி,அரும்பு மீசையை மறைத்து பார்த்து கொண்டிருந்ததை பார்த்த அம்மா வந்து கண்ணாடியை பிடுங்கினாள், “என்னதான் நினசிட்டிருக்க குமாரு? நீ செய்யறது சரி இல்ல, எப்போ பாரு கண்ணாடி பாக்கிற,புடவையை எடுத்து சுத்திகிற”னு அம்மா சத்தம்போட, “அம்மா டியூஷனுக்கு கிளம்பறேன்”னு போய்ட்டேன்.
டியூஷன் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே வாசல்ல அம்மா உக்காந்துட்டு இருந்திச்சி , அம்மா கிட்ட போயி மடில தலை வச்சி படுத்துகிட்டேன் ,அம்மா என்னோட நெத்தில கை வெச்சி “உனக்கு என்ன ஆச்சி ஏன் இப்படி நடந்துக்கிர”னு கேட்டு மெல்ல தலைய வருடி கொடுத்திச்சி.அம்மா கை மேல பட்டவுடனே எனக்கு அழுகைவந்திடிச்சி “அழாதே குமாரு முத அம்மா கிட்ட பேசு”னு சொல்லவும், அம்மா கைய பிடிச்சி உள்ள கூட்டிட்டு போயிட்டு அம்மா கால் விழுந்தேன், “அம்மா எனக்கு இப்படி வாழ பிடிக்கல அம்மா ,என் மனசு சொல்லுது என்னை பொம்பளைன்னு, அத மறுத்து இப்படி பொய்யான வாழ பிடிக்கல,நான் என்ன செய்யம்மா”னு கதற...என்னை தன்னுள் அணைத்த அம்மா, “அவரு வந்தா என்ன சொல்லுவேன்”னு சொல்லி அழ ,அம்மாவின் பிடியிலிருந்து விலகி மெல்ல அம்மாவை அணைத்த நான் “அம்மா நீ சொல்றதுபோல நான் உன்னைய நல்லா கவனிச்சிக்கிறேன்,இன்னும் படிக்கிறேன் ,ஆனா இந்த எண்ணத்தை மட்டும் என்னால மாத்திக்க முடியல”னு சொல்லவும்,அம்மா என்னையவே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணில் நீரோடு,அம்மாவை பார்த்துக்கொண்டே உறங்கிபோனேன் நான்.
திடிரென்று சத்தம், கேட்டு விழிக்க ,அம்மாவை போட்டு அப்பா அடித்து கொண்டிருந்தார், “உன்னாலதான் இப்படி ஒத்த பிள்ளைய வளர்க்க நாதியில்லாத நாயி நீ செத்து தொலையேன்”னு அப்பா சொன்னது என் காதில் கேட்க, ஒருமுடிவுடன் இருக்கக் கண்ணை மூடிக் கொண்டேன்.
“மேடம் நீங்க கேட்ட இடம் வந்திடிச்சி னு சொல்லவும் ,கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டு விழித்தேன் ,டிரைவரிடம் கொஞ்சம் முன்ன போங்க அப்படியே அந்த கடைசி தெருவுக்கு முன்னால நிறுத்திகோங்க .கார் நிறுத்தவும் சிண்டும்,பெரிசுகளும் என காரை சுற்றி ,இன்னும் அப்படியேதான் இருக்கு ,அதே டீக்கடை ,அதே பள்ளிக்கூடம்,அதே தெரு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது எங்க ஊரு "கல்லுகுட்டை"
எதோ நடிகை போல இருகாங்க ? யாரு யாரு இவங்க னு பேசிக்கிற சத்தம் மட்டும் கேட்க, மாற்றத்துடன் நான் 15 வருடம் கழித்து அம்மாவை சந்திக்க "குமாரியாய் " ,குமரியாய் நடந்து கொண்டிருக்க ,என்னோட படித்த கணேசு என்னை பார்த்தபடி பால் எடுத்துகொண்டு போனான்.இன்னும் அப்படியே அவன் குடும்ப தொழிலை மறக்காமல் .
வாசலில் அம்மா! கயித்து கட்டிலில் அப்பா! வயோதிகம் அவரை அதிகம் தின்றுகொண்டிருந்தது. அம்மா என் கண்ணுக்கு அப்படியே இருந்தாள். “இங்க குமாரோட அம்மா நீங்கதானே”னு சொல்லிக் கேட்கவும் , “நீங்க யாரு?... எதுக்கு கேக்கறீங்க?” னு கேட்டபடி பக்கத்தில வந்த அம்மா "குமாரு!... வா!..” என்று சத்தமில்லாமல் என்னைக் கூப்பிட்டு, “ஏங்க இங்க வந்து யாரு வந்திருக்கான்னு பாருங்க”னு அப்பாவிடம் சொல்லிவிட்டு உள்ளே போனாள் அம்மா. கண்ணைச் சுருக்கிவைத்து என்னைக் கிட்டத்தில வந்து பார்த்த அப்பா “குமாரு…வந்திட்டியா!” என சொல்லிக் கட்டிக்கொண்டார். பட்டவேதனைகளும் வலிகளும் மறந்தது அப்பாவின் இறுக்கத்தில்……..!

Wednesday, December 5, 2012

காதலிக்கப்பட்டவன்



காதலிக்கப்பட்டவன்


காதலிக்கப்பட்டவன்

இதயத்தில் நான் மட்டுமே ...

எதோ புரிதலில் என்று

நினைக்கும்முன்,

உன் உயிர் என்றாய்..

ஏதும் சொல்ல நினைக்கும்

முன், என் வார்த்தைகளை,

உன் நினைவினாலே

நிறுத்தினாய், உண்மை..

இது என்று...விழிகளில்

பேசிய நேரம் போக,

கைபேசியும் போதவில்லை

என் வாழ்வு முழுதும்

போதாது உன்னுடன் பேச,

என்று சொன்ன நீ, பேசாமல்

உன் வாழ்வினில் இருகின்றாய் ..

உன்னுடனான என் புரிதல்,

எனக்கு புரியும் முன்

என்னுடனான உன் வாழ்வு

இன்று உன் வாழ்வாகி போனது .

விலக்கப்பட்டதால்

விலகித்தான்

போனேன் ....

விளங்காமல் தான்

நிற்கிறேன்

உன் நினைவுகளால்

நிரம்பிய என் வாழ்வில் ...

Thursday, November 1, 2012

நிசப்தத்தின் ஓசை




நிசப்தமான இரவு நேரம் ,நாய் ஒன்று தூரத்தில் ஊளையிட்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு விழித்தேன்,மெல்ல எழுந்து வாக்கிங் ஸ்டிக்கோடு ஹாலுக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைவதாக இல்லை,ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து பருகினேன் ,அங்கிருக்கும் கடிகாரம் 1மணியை காட்டியது, மெல்ல படுக்கையறைக்கு வந்தேன் ,அந்த சத்தம் குறைய மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

இருள்மூடிய காலைவேளை, பனியின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தேன், தூக்கம் என்னை மீண்டும் தழுவிக்கொண்டது. நேரம் ஓடியது. “நித்தீ! கார்த்தீ!” என்று குரல்கொடுத்தபடி நடைபயிற்சிக்குக் கிளம்பினேன். “கிளம்பிட்டீங்களா..?” என்று குரல் கொடுக்க, வந்தார்கள் என்னிரு செல்வங்களும்!

நான் எப்போதும் அணியும் அதே வெள்ளைநிற சட்டை, அவர்களும் அதே நிறத்தில்! எனக்கும் முன்னதாய் இருவரும் சின்ன துள்ளலுடன் ஓட்டத்தை துவங்கினர். இராணுவம் தந்த, கண்டிப்பு ஆனால் மிடுக்கான, வழக்கமான, வேகநடையில் நான் நடக்க, எதிரில் வந்த பக்கத்து வீட்டுக்காரர் சின்னப் புன்னகையுடன் “வணக்கம் சார்!” எனக்கூறி கடந்து போனார், நான் நடையை மிதமாக்கி என் செல்லங்களைப் பார்க்க warm-up செய்து கொண்டிருந்தார்கள்.

‘டிங்…டாங்கென்று’ காலிங்பெல் அடிக்க, சட்டெனத் திரும்பி பொத்தென விழுந்தேன் படுக்கையிலிருந்து! ‘அப்பப்பா…எப்போதும் அதே கனவு, பிள்ளைகளின் நினைவாகவே!’. சிரித்துக்கொண்டே எழுந்தேன் வாக்கிங் ஸ்டிக்கோடு. மெதுவாகப்போய்க் கதவைத் திறக்க, வேலைக்காரப் பெண் மல்லிகா நின்றிருந்தாள்.

நகர்ந்து நான் வழிவிட, ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று பரபரவெனத் தன் வேலையைத் தொடங்கினாள்.வளவளாவென்று பேசி அரைகுறை வேலை செய்பவர்களைப் போலல்ல அவள், ஒன்றுவிடாமல் எல்லா வேலைகளையும் பேசாமல் செய்து முடிக்கும் விதம்! அவளுக்கு என்னைக் கண்டால் பயம் என்பதைவிட, என் கண்டிப்பைக் கண்டு பயம், என் வீட்டார் போலவே.

என் காலைக் கடைமையில் ஒன்றான நடைபயிற்சி செய்யத் துவங்கினேன். நான் முன்னோக்கி நடந்தாலும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. செல்லம்மாவுடன் இணைந்திருந்த அந்த நாட்கள், என் கண்டிப்பில் அவளும், பிள்ளைகளும் வாழ்ந்தது, அவர்களோடு நான் கடந்த நாட்கள் என அனைத்தையும் பெருமையுடன் அசைபோட்டது மனம்.

நித்தியா அமெரிக்காவிலும், கார்த்தி கனடாவிலும் செட்டில் ஆகி விட்டனர். நான் மட்டும் அவளின்றி இங்கு அவளுடைய பிரம்மாண்ட எண்ணங்களால் உருவான வீட்டில் தனித்து! ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்’ என்ற வார்த்தைகளை மல்லிகா அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்னைக் கண்டதும் அமைதியாவாள். .

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். கொஞ்சம் அதிகமாக நடந்துவிட்டேனா என யோசித்துக் கொண்டே நிமிர, மல்லிகா வெளியே கிளம்ப ரெடியாக நின்று கொண்டிருந்தாள். “ஐயா, வேலைய முடிச்சுட்டேன் சமையல் செய்து, சாப்பாட்டு டேபிளில் வச்சுருக்கேன், அப்றம்.. நீங்க நாளை வர சொல்லியதாக டாக்டரிடம் சொல்லிட்டேன் பால் பாக்கட்டை ஃபிரிட்ஜில் வைக்கனும் அதான் பாக்கி” எனக்கூறி எடுக்க வெளிவாசலுக்கு போனாள். மனதை என்னமோ செய்தது, உடல் வியர்த்தது படபடப்பும் கூடியது.
காற்றோட்டத்தில் போய் கொஞ்சம் நின்றால் இதமாயிருக்கும் என்று மெல்ல வெளியே வந்து தோட்டத்தில் இருந்த அந்த அழகான ஜெர்மன் கிரில் பெஞ்சில் அமர்ந்தேன்.

அவளுக்குப் பிடித்த அந்த தோட்டத்தில் அவளுக்குப் பிடித்த அந்த பெஞ்சில் அமரும்போது அவளுடன் இருப்பதாகவே ஒரு நினைவு எனக்கு.

''பெண்மையின்றி… மண்ணில்…. இன்பம் ஏதடா
கண்ணைமூடி…. கனவில்… வாழும் மானிடா "


என்ற பாடல் சில்லென குளிர் காற்றாய் இதமாக வருட, என்னையே நான் பார்த்துக்கொண்டேன், இவ்வளவு வயதாகி விட்டதா எனக்கு! என்னையே கேட்டுக் கொண்டேன்.

இப்படிக் கேட்கும்போதெல்லாம், செல்லம்மா, “நீங்கள் எப்போதும் இளமைதான்” என்பாள். புது தெம்புடன் எழுந்தபோது..பால் பாக்கெட்டை கையில் எடுத்துகொண்டு உள்ளேவந்த மல்லிகா உடனே வெளியே ஓடினாள்.

‘என்ன ஆச்சு அவளுக்கு’ என்று ஆச்சர்யப்பட்ட என் கண்ணில் , வாடியிருந்த ரோஜாச்செடி பட்டது ‘இப்படி வாடியிருக்கிறதே , நேற்று தானே தண்ணீர் விட்டேன்’ எனக்குள் பேசிக் கொண்டே, செடி முழுக்க குளிரும்படி தண்ணீர்ப் பாய்ச்சினேன் .

மல்லிகா வீட்டினுள் போவதும் வெளியே வருவதுமாய் இருந்தாள். ஏன் யார்யாரோ வருகிறார்கள்.. யாரவர்கள்? இந்தக் காலை வேளையில் என்னைத்தேடி, எதற்கு? போய்க்கேட்போம்.. என்று வீட்டினுள் போக, ஓ, பக்கத்து வீட்டுக்காரர்! என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் மட்டும் சொல்லும் வேறெதும் பேசசாத அவர் ஆச்சர்யமாய் இன்று என்னைத்தேடி வீட்டுக்கே வந்திருக்கார்? யோசித்துக்கொண்டே, “வணக்கம் , உக்காருங்கள் இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.

ஆனால் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை, எதோ கஷ்டத்தில் வந்திருக்கிறார் போல என்று நினைத்து கொண்டே ஹாலுக்கு மீண்டும்வர, அவர் என்னுடைய தொலைபேசியை அனுமதியின்றி எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது எனக்குக் கோபமூட்டியது. ஓ! இதென்ன..உள்ளே இரண்டு போலீஸ்காரர்கள்? அவர்களை இவர் ஏன் வெளியே அழைத்து போய் பேசுகிறார்?
வெளியில்போய் அவர்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்டது. "சார் இந்தவீட்டில் வேலை செய்யும் மல்லிகாதான் முதலில் பார்த்தாங்க, அவங்க வரும் போது மில்ட்ரிக்காரர் நெஞ்சில் கை வைத்தபடி விழுந்துகிடந்திருக்கிறார்..பார்த்துட்டு பயந்துபோய் என்னை வந்து கூப்பிட்டதும் , நான் வந்து பார்த்தேன் நான் பாக்கும்போது மூச்சு இல்லை, அவருக்கு இங்கு யாருமில்லை..பிள்ளைங்க வெளிநாட்ல இருக்காங்க அதான் உடனே உங்களுக்கு தகவல் கொடுத்தேன்’ எனக் கூற..‘ஹெலோ நான் தான் இங்கு இருக்கிறேனே’ எனக் கூறியதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

என்ன நடக்குதிங்கேன்னு என் அறைக்கு போய் பார்க்க, அய்யோ அங்கு கிடப்பது யார் நானா? .அப்போ இங்கிருக்கும் நான் ? எப்படி? அப்போ நான் இறந்து விட்டேனா? அய்யோ நான் பார்ப்பது என் உடலையா..? அய்யோ.. என் செல்வங்களா.. உங்களைத் தவிக்கவிட்டு இறந்தேனா” என்றெண்ணியபோது ..

“அவர் யாரிடமும் பேசமாட்டார் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, அவரோட பிள்ளைகள் நம்பரும் தெரியாதே!” என்ன்றவர் சொல்ல.. மல்லிகா என் டைரியை நீட்டினாள். அதிலிருந்து நம்பர் எடுத்து டயல் செய்தார் கார்த்திக்கிற்கு.. கிடைக்கவில்லை… நித்திக்குப் பேசினார் “ஹலோ. நான் சென்னையிலிருந்து உங்க பக்கத்து வீட்டுக்காரர் பேசரேங்க.. ஸாரி சார்..இங்க உங்கப்பா தவறிட்டார்..” என்று நடந்ததை கூறிக்கொண்டிருந்தவரின் முகம் அதிர்ச்சியில் மாற ...

“என்னப்பா.. என்ன சொல்றாங்க அவங்க, என்ற போலீஸ்காரரிடம் “சார் அவங்க மகள் ‘அப்படியா போய்ட்டாரா.. காலத்துக்கும் ரூல்ஸ்பேசியே எங்களை ஏதையுமே அனுபவிக்கவிடலை இப்போ இங்கேயுமா? எங்களால இப்ப அங்க வரமுடியாதுங்க இதமாதிரி செத்துட்டவங்களுக்கு கார்பரெஷன் ரூல்ஸ் படி என்ன செய்னுமோ அதை செஞ்சுட்டு எவ்ளோன்னு மெசேஜ் குடுங்க உங்களுக்கு அனுப்பிடரோம்’ ன்னு சொல்லிப் போனை வெச்சிட்டாங்க சார்!”

“ஐய்யோ என் செல்வமா..என் பிள்ளையா இப்படி” என நான் கண்ணீர் விட்டுக் கதறிக்கதறி அழ, வந்துட்டீங்களா” என்றபடி வழிந்தோடிய கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்தாள் செல்லம்மாள்!


Friday, October 19, 2012

காதல்.....மரத்திற்கும் .... மனம் ..............




உன் போர்வை குடைக்கு..
உள்ளே நான் வருடங்கள் ...பல

காத்திருந்தும் பல வசந்தங்கள்
வந்து வந்து போயிருந்தும் ...

எண்ணிலடங்கா காதல்கள்
கண்டிருந்தும் ...

உன்னை தேடி நான்
என்னை தேடி நீ
அலைந்திருந்தும்.....

இலையுதிர் காலத்தில்
மட்டுமே உன்னை
முழுமையாய் நான் காண

நமக்குள்ளும் காதல் ...
நாட்கள் பல ஆயினும்
ஆணி வேராய்.....

இந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கிடக்கிறது..

Wednesday, October 17, 2012

சாலையோரத்தில் ................



வாழ்வியல் இன்று
சாலையோரத்தில்

வீதிதான் எனை
அணைத்தது ...விதிதான்
வாழ்வை தந்தது..

வாழ்வு பொய்த்து
போனது ..நீ
இல்லாமல் ...

இறந்தும் என்னருகில் நீ
இருந்தும் தொலைவில்
என் பிள்ளைகள்...

என்னை தொலைத்த
சந்தோசத்தில்....
இருந்தும்
உங்களை வாழ்த்த
மட்டுமே செய்கிறேன் ..

பொட்டில்லை
பூவில்லை
கையணி இல்லை
காதணி இல்லை

சுருக்கு பை....
சில்லறையோடு வயிற்றின்
இறுக்கத்தில்.....
ஆனாலும் இந்த வயிற்று
பாட்டிற்கு

சாலையோரத்தில்
வண்ணங்கள் நிறைந்த
பூக்களோடு நான் ...
வண்ணமில்லா
வாழ்வை எதிர்கொள்ள ..

"மதுரை "




வெகுநாட்கள் கழித்து அன்றுதான் நிம்மதியான உறக்கம் எனக்கு .. அதைக் கெடுத்த சத்தம் கேட்டு விழித்தேன்.. தாரணி! என் தங்கை..ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

நீளமான தலைமுடியை படிய வாரி அழகாய் ஒருசிறு ஒற்றைரோஜாவைக் காதோரம் செருகியபடி .. “ ண்ணா இப்ப ஓகே வா, ஒகே வா…” என்று கேட்டு கொண்டே இருந்தவளைப் பார்த்து.. “ம்.. நல்லா இருக்கும்மா..கிளம்பிட்டியா கொஞ்சம் இரேன் நானும் வரேன்..” என்று சொல்லிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கிளம்ப ஆரம்பித்தேன்.

"ம்...கலையான முகம் தான் உனக்கு...நல்ல உயரம் தான் நீ..’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தலையை வாரி, அப்படியும் இப்படியும் கண்ணாடியில் பார்த்து கொண்டே சட்டையை இன் செய்து கிளம்பினேன்.

" டேய்...மதுரை.. போதும் டா உன் அலங்காரம்! யாரவது கண்ணு வைக்க போறாங்க’ என்று முகமெல்லாம் சிரிப்பாக, கைகளால் திருஷ்டி கழித்தாள் அம்மா!
“வைக்கட்டும்…வைக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை எடுத்து தங்கையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஏரிக்கரையின் எதிர் காற்றில் வேகமாகப் பறந்தேன்!

“ஏன் தாரு! உன்னோட அந்த ஃப்ரெண்ட்,அதான்,அந்த சுந்தரி இன்னும் இங்கதான் இருக்காளா” என்று பட்டும் படாமலும் கேட்டேன். “இல்லண்ணா” என்ற தாருவின் ஒற்றைச்சொல் பதில் எனக்குள் ஏனோ அதிக ஏமாற்றமே தந்தது.
பேருந்து நிறுத்தத்தில் தாருவை இறக்கிவிட்டு தயாராய் இருந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறியதும்
அவளது கையசைப்புக்கு தலையாட்டிவிட்டு, சைக்கிளை பக்கத்திலிருந்த வீட்டின் ஓரம் நிறுத்தி வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு வணக்கம் சொல்லி, சுந்தரியைப் பற்றிய எண்ண அலைகளை மனதுக்குள் ஓடவிட அதேநேரம் என்னுடைய பேருந்தும்
வர, தாவி ஏறியதும் “மனிதன் மாறவில்லை….
..ஓஹொஹோ…ஹோஹஹோ” என்று பலமாய் பாடல் ஒலித்தது...பிடிக்கிறதோ பிடிக்கலையோ கேட்டே ஆகவேண்டும்!

அந்த பாட்டுச் சத்தத்தையும் மீறிய ஒரு சிரிப்பு என் காதினில் ஒலிக்க, மெல்ல அது வந்த திசை நோக்கிப் பார்த்தபோது, கலர் கலராய் தாவணிகள்! அந்த கலைக் கல்லூரியின் மாணவிகள் !

“ஏய்! மலர்.. சும்மாயிரு.. போதும் டி சிரிச்சது ..பல்லு கில்லு சுளிக்கிகப்போவுது....” என்ற ஒரு கண்டிப்புக் குரல் ...அதையும் மீறி அவள் கலகலவென சிரித்தாள். அடுத்த நிறுத்தத்தில் அந்த மலரும் அவளின் தோழியும் இறங்கிச் சென்றனர்.

"நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா" என்ற வரிகளுடன் பேருந்து கிளம்பியது.. ‘என்னது இது, இதுவரையில் ஒலித்தபாடல் ஏதும் ஏன் என்காதில் கேட்காமல்போனது’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நேற்றே வந்து மருத்துவமனை இருக்கும் இடம் தெரிந்து கொண்டதால் இன்று வசதியாக இருந்தது எனக்கு , அடுத்த நிறுத்தம் நான் இறங்கவேண்டியது. கண் மருத்துவமனையின் ஸ்பெஷல் நிறுத்தம் அது. அதற்கு முன்னரே எழுந்து படிக்கட்டை அடைந்தேன்.
பேருந்தின் வேகத்தில் என்னை தீண்டிய காற்றை ரசித்து கொண்டிருக்கையிலேயே இறங்குமிடம் வர காற்றின் சுகம் தடைபட்ட வருத்தம் வந்தது!

வேறிடத்திலிருந்து மாற்றலாகி வந்த எனக்கு அன்றுதான் முதல்நாள்."சுந்தரி நீயும்
சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோனம்…ஓஹோ…ஹோஹோ..” என்னைக் கேட்காமலே உள் மனம் பாட்டுபாடியது!

பூத்துக்குலுங்கிய மரங்களுக்கிடையே... இதமானதொரு காலை வெய்யிலில் 5 நிமிடம் நடந்ததும் எங்கள் மருத்துவமனை!

உள்ளே நுழையும்போதே "அஞ்சு வரேன்னாளே..இன்னும் காணலையே..
எப்படி போறது .. இந்த கண்ணு வேற கூசித்தொலையுதே.. என்ற வயதான அம்மாவின் குரல் காதுகளில் ஒலிக்க, தயங்கி நின்ற என்னை, “தம்பி..கொஞ்சம் அந்த வாசல்வரை கூட்டிட்டு போய் விடுங்களேன்” என்றபோது, "ஒரு நிமிஷம் பாட்டி.. இங்கேயே இருங்கள் தோ வரேன்” ன்னு சொல்லி வேகமாய் உள்ளே சென்று கைவிரல் பதிந்து ....நேரம் பதிந்து வேகமாய் வந்தபோது, பாட்டி அங்கயே நின்று கொண்டிருந்தார்.

அவரது கையைப் பற்றி நடந்துகொண்டே “யாரும் கூட வரலியா பாட்டி ஏன் தனியா வந்தீங்க” என்று கேட்க
“என் பேத்தி வரேன்னு சொல்லிருந்தா தம்பி ஆனா காணலை அவ வந்தா பத்திரமாக அழைச்சுட்டு போவா ..ஏன் வரலைன்னு தெரிலியே” என்றார்.

“சரி! நீங்க எங்கே போகணும்?” ன்னு கேட்டதை காதில் வாங்கிகொள்ளாது தன் பேத்தி வராததையே சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பாட்டி .

பேருந்து நிறுத்தம் வரை போய், “பாட்டி நீங்க எங்கே போகணும்” னு சொல்லுங்க” என நான் கேட்டுக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடை பெஞ்சில் உட்காரவைக்க,
கையை வேகமாய் உதறி மெளனமாய் உட்கார்ந்த பாட்டியை அதிசயமாய் பார்த்தேன்.

‘பாட்டி ஏனிப்படி நடந்துகிறாங்க! வந்த முதல்நாளே இப்படியா! என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை!’ என்று நொந்துகொண்டே டீகடைக்காரிடம் “அண்ணே, இந்த பாட்டிகூட யாரவது வந்ததைப் பார்த்தீங்களா நீங்க” என்றேன்.அவர் “யாரைச் சொல்றீங்க தம்பி” என்றதும், திரும்பிப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தால்..
யாருமில்லை அங்கு பெஞ்ச் காலியாக இருந்தது !!
படபடப்புடன் சாலையை நோக்க சாலையை நோக்க வெளிச்சம் கண்ணை கூசியது ………..

விதியத்து............



உன்னை தேடி ஓடி ஓடி ...
வாடி வதங்கிய கால்கள் ...
உன்னை காணாமல் ...
உன்னை சுமந்த
என் வயிறு...வதங்கி போய்
உணவு உண்ணாமல்
சுருங்கி கிடக்க ....

உன்னை காண என்
விழிகள் ஏங்கி, வைத்த
விழி மாறாமல் வழி பார்த்து
ஏங்கி கிடக்க ..

வருவோரை ..
போவோரை ....
பார்த்து கண் பூத்து போய் ..

இதோ வருகிறேன் என்று
நீ விட்டு சென்ற
இடத்திலே நான் ...
விதியத்து..

துயரம் ...




என் முகம் முழுதும்
ஓடும் சாலைகள்
நீ வருவாய் என
காத்திருக்கிறது ..

என் தலை முழுதும்
முடிகள்..ஆனாலும்
உன் சிந்தனைகளால்
நரைத்து போய்...

என் விரல்களில் நீ
அணிவித்த மோதிரம்
இளமையாய் ...
இருக்கமாய் இன்னும் ..

உனக்கு பிடித்த என்
மூக்குத்தி
எனக்குள்ளே
பொதிந்து போய்...

என் விழி முழுதும்
உன்னை தொலைத்த
துயரம்

Monday, October 1, 2012

"அப்பா" எனும் மானுடம்!






ஜானு………என் ஜானு…...கடலைப்பார்த்ததும் அவளின் நினைவு தான் எனக்கு.

மாலை மயங்கும் நேரம் பேத்திகள்மீனுவும் வீணாவும், என் கையை பிடித்து கொண்டே
ஆடி ஓடி வந்தனர் ."தாத்தா கொஞ்சம் அலையில கால் வைக்கிறோம் , அம்மா கிட்ட சொல்லாதீங்க" என்று சொல்லிட்டு வேகமாக ஓடி... கடல் அலையில் விழுந்து புரண்டனர் .எனதுநினைவுகள் ஜானுவை நோக்கி செல்ல .. நேரம் போனதே தெரியவில்லை சட்டென்று வீணு முகத்தில் அடித்த தண்ணீர் என்னை நினைவுக்கு கொண்டுவர .."என்னம்மா போகலாமா" எனக் கேட்க .."இல்லை தாத்தா இன்னும கொஞ்சம் நேரம்"என்று சொல்லி பட்டம் வாங்க ஓடினாள்.

கூட்டம் அதிகமில்லை என்றாலும் வந்தவர்கள் அனைவரும்தத்தம் குடும்பத்தினரோடு எல்லோர் கையிலும் பட்டம் ,அதைக் கடற்காற்றில் அலைய விட்டு விளையாடி கொண்டிருந்தனர். அலைகளின் சீற்றம் அதிகமாகி கொண்டே இருந்தது அலைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததில் இருட்டவும் ஆரம்பித்திருந்தது..மருமகள் ஏதும் சொல்லிவிடுவாளோ எனும் யோசனையோடு திரும்பிப்பார்த்தேன். அவர்கள்விளையாட்டு முடிவதாய் தெரியவில்லை ..

"நேரமாகிறது கண்ணுங்களா ,வாங்க வீட்டிற்கு போகலாம்"னு சொல்லி கொண்டே அவர்களின் அருகாமையில் சென்றேன் ..பட்டத்தை விட்டு விட்டு ,பந்து தட்டி விளையாடி கொண்டிருந்தார்கள் ..அவர்களின் கைப்பிடித்திழுக்க "இருங்க தாத்தா வருகிறோம்" என்று சொல்லிவிட்டு ,கொஞ்சம் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியிடம் பந்தை கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வந்தார்கள் ..என் கைபிடித்து ஆடிக்கொண்டே வந்தார்கள் சாலை முழுதும் ,"தாத்தா வேகமாக வாங்க ,வாங்க" என சொல்லி கொண்டே மீனு ஓடினாள்,வீணா என் கைபிடித்து வந்தாள் மெதுவாக ..அழகான சாலை இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்த அந்த புற நகரில் கடற்கரைக்கு எதிரேயுள்ள அழகான வீடு என் மகனுடையது .

வீட்டினுள் நுழையும் போதே மருமகள்மலர் "கைகால்களைக் கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் " என்று முணுமுணுத்துகொண்டே போனாள் ..பிள்ளைகளை இழுத்து கொண்டே, "படிக்கவேண்டாமா? நேரத்துடன் வருவதில்லையா, இருங்கள் அப்பா வரட்டும்.. சொல்கிறேன் என்று கோபமாய் கத்திக்கொண்டே குழந்தைகளை அடித்தாள். அழுது கொண்டே அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர் . நேராக பூஜை அறை சென்று வணங்கி விட்டு புத்தக பைகளுடன் மாடிக்கு சென்றனர்.. அடித்து கொண்டிருந்த தொலை பேசியை எடுத்து "ம்.சொல்லுங்க" என்று குரல் குழைவானதில் எதிர்புரத்தில் பேசுவது என்மகன் என்பது தெரிந்தது .

எழுந்து வெளியே சென்று அமர்ந்தேன் . அந்த இருட்டினில் குளிர் காற்றினில் அலைகளின் மொழி எனக்குள் பேசியது.. ஒருமுறையாவது கடலை பார்க்க வேண்டும்.அலையினில் கால் நனைக்க வேண்டும் என்ற அவளின் ஆசையைநிறைவேற்றவே இல்லை நான். ஜானு.. ஜானு ..என்னை தேடி வந்தவள்..
எனக்காகவே வாழ்ந்தவள் ,எனை ஒரு துளி நேரமேனும் பிரியாதவள் .அப்படியே எழுந்து வாசல் கதவின் அருகே நின்று அலையின் சத்தத்தை
ரசிக்க என் காதில்"என்னை விட்டு ஓடி போக முடியுமா ,நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ".என என் ஜானு பாடும் குரல் காதில் ஒலித்தது...
அவளின் நினைவுகளோடு அப்படியே கடலை நோக்கி நடந்தேன்..

என் மகன் மோகன்பிறந்த முதல் பிரசவத்திலேயே தன்நினைவற்றுப்போக அன்றிலிருந்து எனக்கு அவளே முதல் குழந்தையானாள் ..நினைக்க நினைக்க கடல்அலை போல அவளின் நினைவுகள் என் நெஞ்சில் அல்லாடியது ..என்ன மாயம் செய்தாளோ... என் வாழ்வில்... ஓடி விட்ட எங்கள் 46 ஆண்டுகால வாழ்கையைத் திரும்பி பார்க்கையில்... மோகன் வளர்ந்து காதல் திருமணம் செய்து ..அப்பப்பா ஆண்டுகள் ஓடியும் அவளின் மரணத்தன்று மட்டுமே எனை வந்து பார்க்க முடிந்தது அவனால் ..பதினாறாம் நாள் காரியம் முடித்து என்னை அவனோடு அழைத்து வந்து விட்டான் ... அன்றிலிருந்து அவனுக்கு பிரச்சனைகள் தான்.

அழகான நிலவொளியில் கடற்கரை மணலில் அப்படியே சாய்ந்தேன்..கண்களை மூட அருகினில் என் ஜானு..பாடுங்களேன் ன்னு கேட்க "சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி .............."

கதிரவனின் ஒளி அழுத்தம் இல்லாமல் ஒளிர , மெல்ல வெளியே வந்தாள் மலர்.... தேனீர் கோப்பையுடன்,'என்ன சொல்வேன் இவரிடம்' என்று யோசித்து கொண்டே நடந்துகொண்டிருந்தாள் .சத்தமில்லாமல் வாசலில் கார் வந்து நின்று மோகன் இறங்கியதும் "அப்பா வந்துட்டாங்க" என்று சத்தமிட்டபடி குழந்தைகள் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டார்கள் .

மலர் எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தாள் . "அப்பா... அப்பா..."என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த மோகன், வீடு) நிசப்தமாயிருக்க "அப்பா எங்கே?" என்ற கேள்விக்கு அவனின் முகத்தைப்பார்ப்பதை தவிர்த்தபடியே "உங்க கிட்ட பேசும்போது இங்கேதாங்க இருந்தார்... அப்புரம் எங்க போனார் ன்னு தெரியலையே" என்றவள் கூற.. "என்ன சொல்ற... காணோம்னா... எனக்கு சொல்லியிருக்கலாம் இல்ல...அய்யோ அவருக்குஇங்கு யாரையுமே தெரியாதே, கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே இல்லையே ,அங்கேயிருந்தால் அம்மா நினைவில் பாதிக்கப்படுவார் ன்னு நான் தானே அழைத்து வந்தேன்... இப்ப..எங்க போனாங்களோ..என்ன ஆச்சோன்னு தெரியலையே" என்று அரற்றிக் கொண்டிருந்தபோது வேலையாள் ரங்கன் பதட்டமாய் ஓடி வந்து.."அய்யா... அய்யா.." வார்த்தைகள் தடுமாறி வாய் குளரி வந்த திசையில் கைகாட்ட.... வேகமாக ஓடிய மோகன் கூடிநின்ற கூட்டத்தை தள்ளிவிட்டு பார்த்தபோது மணலில் "ஜானு" என்றெழுதியநிலையில் அவனது அப்பா தலைசாய்ந்தபடி கிடந்தார்.

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......பகுதி - 3





வேகமாக வந்தவன் எங்களை கடந்து ரயில் நிலையத்திற்குள்

சென்றான்...ரயில் பாதை கடந்து சென்றோம்.வேர்க்கடலை

விற்பவர் எங்களை நோக்கி வந்து

கேட்கும் முன்பே கொடுத்து விட்டார்..இரண்டு பொட்டலத்தை,

வாங்கி கொண்டு நேரத்தை பார்த்து கொண்டே நிலையத்தின்

நடுவிற்கு வந்து காத்திருந்தோம் "செங்கல்பட்டு ரயிலுக்காக "

அந்த புல்லெட்காரன் என் தோழியிடம் வந்து ஒரு சிறு பேப்பரை

கொடுத்து விட்டுசென்று விட்டான் ..அது ஒரு தொலை பேசி எண்,

சுந்தரி எதற்கடி என்னிடம் தந்தான் ..

புரியவில்லையே..என கேட்டு கொண்டே இருந்தாள்,என்னிடம்

தந்து விட்டாள் அந்த சீட்டை ...

ரயில் வந்ததும் ஏறிக்கொண்டோம் எங்களின் விருப்பமான பெட்டியில் ...

எற்கனவே எங்களுக்கு அங்கு இருக்கை பிடிக்கப்பட்டு இருந்தது..

செங்கல்பட்டு ரயில் அதனால் ,இனி வரும் நிலையங்களில் கூட்டம்

அதிகமாகும்..

எங்கள் பெட்டியில் மட்டும் நாங்களும் எங்களை "சின்னப்புள்ளைங்க "

என்று கூறும்சில பெரிய அக்காக்களும்..

ஆரம்பித்தாள் எப்போதும் போல சுந்தரி பாடுவதை .பெரிய

அக்காக்கள் கேட்பதைத்தான் அவள் முதலில்

பாடவேண்டும்.அவங்க தானே எங்களுக்கு இருக்கை பிடித்து

கொண்டு வருகிறார்கள் ,

ஆனால் .இன்று நான் கேட்ட பாடல் "அடி ஆத்தாடி இள மனசொன்னு

ரெக்கை கட்டி பறக்குது சரிதானா ?

என்ற பாடல்..சுந்தரி என்னை ஒரு முறை தன் பார்வையால்

எனக்குள் தேடினாள்..

பாடு பாடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு

ரசித்து கொண்டிருந்தேன் ..

அவள் பாடி முடிக்க முடிக்க மேலும் இன்னும் ஒரு முறை

என நாலு முறை அவளை பாட சொல்ல

"பக்கத்தில் அமர்ந்திருக்கும் "மாலை முரசு பத்திரிகையில் பணி

புரியும் தங்கம் அக்கா ..

என்னம்மா இந்த பாட்டு இப்படி ரசிக்கிற என கேட்க அப்போதுதான்

கண் விழித்தேன்...ஒண்ணுமில்ல அக்கா ,என சொல்லி

பார்க்க சுந்தரி ,இறங்க தயாரானாள் தாம்பரத்தில் ...

ரயில் நின்றதும் இறங்கி அவளை வழி அனுப்பி மீண்டும் ரயில்

உள்ளே நான் என்னுள்ளே அவனின் நினைவுகள்...

சுகமாக ஓடி கொண்டிருக்க "யம்மா வழி விடும்மா " என காட்டு

கத்தல் கத்தி கொண்டே அந்த கீரைக்காரி இறங்கினாள்.

அவளின் பிழைப்பே இந்த ரயில் தான் ...காலையில் அவளை பார்த்தால்

மங்களகரமாக அம்மன் போல இருப்பாள்..ஆனால் வாயிலிருந்து

வரும் அந்த புகையிலையின்

வாசம் குடலை புரட்டும்...ஆனால் நல்லவள் ,குடிகாரனுக்கு

பொண்டாட்டி.பிள்ளைகளை

படிக்க வைக்கணும் என்பதற்காகவே நாளெல்லாம் உழைப்பவள் ....

அவளுக்கு நான் என்றால் இஷ்டம் ..

நானும் இறங்கினேன் ..என்னோட அண்ணா எனக்காக காத்திருந்தார்

ரயில் நிலைய வாசலில் ...வேகமாக நடந்து

அண்ணாவின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன் ..அண்ணா எது பேசாமல்

மிதிக்க ஆரம்பித்தார் சைக்கிளின் வேகம் கூடியது

என்னோட நினைவுகளும் வேகமாக ஓடிகொண்டிருந்தது..எதிர்காற்றில்

வேகத்தை கூடி அண்ணா செல்ல ..அண்ணா கொஞ்சம் நிறுத்து அண்ணா

என சொல்லி கீழிறங்கினேன் வீடு வரை தள்ளி கொண்டே போகலாம்

என சொல்லி நடக்க ஆரம்பித்தோம்..அண்ணா பேசாமல் நடந்தார் ..

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அண்ணா எனை பார்த்து யாருக்காவது

நம்ம வீட்டு விலாசம் கொடுத்தியா மா .

இல்லையே அண்ணா ..அப்பாவுக்கு நண்பர்களை வீடு வரை கொண்டு

வருவது இஷ்டமில்லாத விஷயம் ,

அதிலும் உன் பெயர் போட்டு வாழ்த்து அட்டை வந்திருக்கு

என சொல்ல ,அதிர்ந்தேன் நான் ..

பயம் கூடியது யாராக இருக்கும் யாருக்கும் தரவில்லையே நான்..

அப்பா என்ன சொல்ல போகிறாரோ,என பயந்துகொண்டே நடந்தேன் .

அந்த எதிர்காற்றிலும் வேர்க்க ஆரம்பித்தது எனக்கு ...

வீடு நெருங்க நெருங்க வெலவெலத்து போனேன் நான்

வாழாவெட்டி................


உன் பார்வை உன் வாசம்
என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .
நான் நடக்கையிலும் என்னை சுற்றியே
என்னுடனே வீதிதோறும் வலம் வருகின்றது.

என்னை முழுமையாக
ஆக்கிரமித்து கொண்டிருகிறது .
நீ இல்லாத நேரங்களிலும் ..
என்னிடத்தில் மிக நெருக்கமாக அளவலாவுகின்றது .

நித்தம் நான் செய்யும்வேலைகள் அனைத்திலும்
என்னுடனே உலாவுகின்றது..
கோவத்திலும் சோகத்திலும் என் உள்ளே
சென்று என்னை அமைதியாக்குகிறது.

வாழாவெட்டியாக\" இருந்தாலும்
வாழ்ந்த காலங்களின் வாசம்-உன்
வாசம் மட்டுமே எனக்கு
புது தெம்பை தருகின்றது ..

உன் வாசம் என் வாழ்விருள்
போக்கி ஒளி தருகின்றது.
குத்தல் பேச்சுகள் நிறைந்த
இடங்களில் நீ என்னுடனே
என்னை அணைத்து உன் வாசத்திற்குள்
கூட்டி செல்கிறாய் ..

எப்போதுமே என்னருகினில் எனை சுற்றியே
நிறைந்திருப்பதால் ...உன்னை சுற்றியே
நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..
வாழும் நாட்களில் உன் வாசத்தில்
கரைகிறேன் ..

Wednesday, September 19, 2012

உயிரின் தோன்றல்



“நானே பயப்படலை..நீங்க ஏன் அதிகம் பயப்படறீங்க” ன்னு அவருக்கு

நான் தைரியம்சொல்லி வாசல்வரை போய் வழியனுப்பிவிட்டு....

வந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத்தூங்க தாயரானபோது..

“ஏன் மா மாப்பிள்ளை அதிகம் பயப்படுகிறாரா….? ன்னு கேட்ட

அம்மாவிற்கு.............

சிரிப்பினூடே “ம்” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்தபோது அருகில்

உட்கார்ந்து மெல்ல என் வயிற்றை தடவி ,“நாள் கடந்துடுச்சேடா ….

இன்னும் உனக்கான நாள் வரலையேப்பா ” என்று அம்மா சொன்னபோது,

முதல்முறையாய் எனக்குள் பயம் வந்தது….

காட்டிக்கொள்ளக் கூடாது என்று மறுபக்கம் திரும்பி படுத்தபோது

சன்னமாக வலித்தது..என் பயம்போலவே அதுவும் கொஞ்சம்

கொஞ்சமாக அதிகரித்தது .முகத்தை திருப்பி கட்டிலின் அருகே கீழே



தூங்கத் தயாரான அம்மாவிடம்…. “ம்மா வலிக்குதும்மா” எனச்

சொல்வதற்குள் இன்னும் அதிகமாக “வலிக்குதுமா ....

ரொம்ப வலிக்குதும்மா ..” என சன்னமாகக் கூற

“பொறுத்துக்கம்மா..பொய்வலியாய் இருக்கும்.. காலையில

டாக்டர்கிட்ட போகும்போது சொல்லலாம் டா” ன்னு சொன்னபோது..

“….ம்மா ..ரொம்ப வலிக்கிது ம்மா..” என்று வலியால் துடித்த

என் முகத்தைப்பார்த்துக் களேபரம் ஆன அவள் வாரிச் சுருட்டிக்

கொண்டு எழுந்தாள்...

இருவருமாய் கிளம்பினபோது, நடுக்கூடத்தில் அப்பா உறங்கிக்கொண்டு

இருந்தார் ..“நாங்க ஆஸ்பிடலுக்கு போறோம் கதவை பூட்டிகிங்க” என்று

சொல்லிக்கொண்டே என்னை தாங்கிபிடித்து நடந்தாள் அம்மா..

போகும்வழியில் அவருக்குச் செய்தி சொல்ல அவரும் அங்கு வந்துவிட்டார்..

அவர் இவர் என எல்லோரும் சுறுசுறுப்பாய் இயங்க கையில் ஊசி

குத்தப்பட்டு ட்ரிப்ஸ் இறங்கியது , வலி வந்து வந்து போகிறது ..

அப்படியே அந்த நாள் முழுதும் ,தாங்க முடியா வேதனை ...

ஆனால்… அன்றும் ஏதுவும் நடக்கவில்லை....ஒரு நாள் போனது வலியிலும்

வேதனையிலுமாய்….

மறுநாள் அத்தை வந்தாங்க….நிறைய பிரசவம் பார்த்தவங்க….

“ஏண்டிமா… எப்படி இருக்கே” "அருகில்வந்து பேசியது... எங்கேயோ

துரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்டது எனக்கு..."

”எத்தனையோ பிரசவம் பார்த்திருக்கேன் நான்…உனக்கு மட்டும்

இவ்வளவு பிரச்சனை ....” என்று சொன்னபோது பயம் என்னை மீண்டும்

தொற்றிக்கொண்டது.

…வலியும் வேதனையும் என்னையே அன்னியப்படுத்திக்கொண்டிருந்தன.

வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் வெளியேற ..நான் மட்டும்

வலியுடன் உள்ளயே... “பயப்படாதே” எனச் சொல்லி அத்தையும்

வெளியே போனார்கள் .ஆரம்பித்தது அந்த வலி…. சொல்லமுடியாத

அளவுக்கு சத்தம் போட்டேன்...கூடவே திட்டும் வாங்கினேன்

அங்குள்ளோரிடம் ..


மருத்துவர் வந்து பார்த்து அவசர அவசரமாய் ஏதோ பேசினாங்க..

“ஆபரேஷனுக்கு ரெடி செய்யுங்க” ன்னது மட்டும் பளீரென்றது என்

காதில்….ஐயோ எனக்கு ஊசின்னாலேயே வலிக்குமே....இப்போ

என்ன செய்ய..

என் வயிற்றில் இருப்பது மகள்தான் என்ற நினைவில் வலியிலும்

வேதனையிலும் பேசினேன் அவளிடம்...

அம்மாடி ….செல்லமே உனக்கு பிடித்த நேரத்தில் பத்திரமாய்

வந்து விடுடா ...அம்மாவுக்கு ரொம்ப வலிக்கும்டா….

ரொம்ப வலிக்கும்டா …செல்லம்… எனத் திரும்பத் திரும்பச்

சொல்லிகொண்டேயிருந்தபோது..

உறைவது போன்ற குளிரை எனக்குள் உணர..சில்லென்று ஒரு கை,

சுண்டு விரலில் மச்சத்துடன் …யாரென்று பார்க்க…. அந்தப் புன்னகை மட்டும்

அடிமனதில் பதிய…. அப்படியே மயங்கி ...............


……கண் திறந்தபோது… மங்கலான வெளிச்சத்தில் தோன்றினாள்

“அவள்”…. என் தலையைக்கோதிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது….

நான் அதிகசிரமப்பட்டு கண்களை அகல விழிக்க….அவள் ஒரு

பந்துபோல சுருண்டு காற்றாய் எனக்குள் போக…சில மணித்துளிகளில்

…தும்மலுடன் "மகள்" பிறந்தாள் …!

வேதனையின்றி…… என்னையும்…. என் குழந்தையையும்

காற்றைப் போலப் பிரித்தாள் அவள்...!!

Monday, September 3, 2012

வெள்ளை ரோஜா




வண்ணங்களை துடைத்து போன்றது போன்ற வெளிச்சம் என் முகத்தில்.

ஏன் இப்படி என்றும் இல்லாமல் ஒரு பிரகாசம். என்னையே

நான் கேட்டு கொண்டேன் ,கண்ணாடியை பார்த்து.....

நேரம் 8 மணி..ஏன் இன்னும் என் கைபேசி ஒலிக்கவில்லை ..

நேற்று நடந்த சண்டையின் தாக்கமாக இருக்கும் என

நினைத்து கொண்டே ,குளியலுக்கு சென்றேன்....

அம்மா சந்திரா என கூப்பிட வரேன் மா ..என சொல்லிவிட்டு

குளியலறையில் புகுந்து கொண்டேன்..

"நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன சிறகை"

பாடலை பாடிகொண்டே குளியல்.....

அம்மா கத்தி கொண்டே இருந்தார் ..

அம்மா வந்துவிட்டேன் ..சொல்லுங்க ..ம்ம்ம்.

குளிக்க போனால் ஒரு மணி நேரம் எனகேட்டுகொண்டே

எனை பார்க்க, தலை துவட்டியபடியே நான் ....

தினம் தினம் தலையில் தண்ணீர் ஊற்றாதேனு சொன்னால்

கேட்க மாட்டியா?

மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கு தெரியுமில்ல ..

என சொல்லிகொண்டே சமையலைறைக்கு சென்றுவிட்டாள்.


"என்ன சத்தம் இந்த நேரம்" என ஒலித்துகொண்டிருந்த

கை பேசியை ஆசையாய் எடுத்தேன் ..

இந்து பேசினாள்....

இன்னைக்கு 11 மணிக்கு பரீட்சை முடிவு ..நினைவிருக்கா....

கொஞ்சம் பயத்துடன் ம்ம்.

நினவிருக்கு..சொல்லிட்டு .....

என்ன அமைதியாய் இருக்க சந்திரா ....

ஏன் நேற்று நடந்ததையே நினைத்து கொண்டிருக்க..

என இந்து கேட்க

அமைதியாய் நான் ..

போன் ஏதும் வரவில்லையா,

குறுஞ்செய்தி கூட வரவில்லையா,

நீயாவது பேசிவிடு...

சண்டையை தொடர்ந்து வைத்து கொள்ளாதே

என சொல்லிகொண்டிருக்கும்போதே தொடர்பு அறுபட்டது...

அந்த அழைப்பு வரும்னு நினத்துகொண்டேயிருக்க

நேரம் ஓடி கொண்டே இருந்தது..ம்ஹ்ம்..வரவில்லை....

மீண்டும்இந்துவின் அழைப்பு ...அம்மா விடம் கொடு...

என்றாள்..

அம்மாவும் அவளும் பேசி கொண்டிருந்தாங்க ..

என்னுடைய சிறு வயது தோழி ஆயிற்றே அவள் ..

அம்மாவிடம் சொல்லிவிடுவளோ என்ற பயம் இருந்து

கொண்டே இருந்தது...அம்மா முகத்தையே பார்த்து

கொண்டிருந்தேன் ..ஒன்றும்

நடக்கவில்லை..சிரித்து கொண்டே இருந்தாள்..

புன்னகைதான் அழகு அவளுக்கு ...எப்போதும்

அப்பாவின் சிந்தனயில் சோகமாய்

இருப்பாள்..ஆனால் இந்து பேசியதால் அழகான புன்னகை முகம் ..

கைபேசியில் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தேன் அம்மாவை...


பரீட்சை முடிவு வந்தாச்சுன்னு இந்து போன் செய்தாள்..

நான் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் என்று சொன்னாள்.

ஏதும் ஏன் காதில் விழ வில்லை ..ஏன் என்னாச்சு..

நான் பேசட்டுமா அவளிடம் என கேட்க .....வேண்டாம்

இந்து என்றேன் ....

புரிந்து கொள்ளாத என ஆரம்பித்து அப்படியே நிறுத்தி விட்டேன் ...

என்னுடைய வாழ்வில் எப்போதும் வேண்டும் நட்பாய்,

தோழியாய்..நீ மட்டும் ....

உன்னையும் என்னையும் புரிந்து கொள்ளாதா , அந்த காதல்

வேண்டாம் என்றான் சந்திரா என்கிறசந்திரன் ....அமைதியாய் .

நட்பை புரிந்து கொள்ளாத காதல் வாழ் நாள் முழுதும் புகைந்து

கொண்டே இருக்கும்... என்றான்

யோசிக்காதே சந்திரா ....ஏதும்...

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருகிறேன்....ஏன் கூறி

அழைப்பை துண்டித்தாள் ..

அம்மா என அழைத்து கொண்டே இந்துமதி

வீட்டிற்குள் ....வந்தாள்....

எனக்கு பிடித்த வெள்ளை ரோஜாக்களுடன் ......

நட்பு தூய்மையானது என்றும் ரோஜாவை போல

Thursday, August 30, 2012

பொம்மலாட்டம் .





வேகமா போற ..மெதுவா போ .இன்னும் நாடகம் ஆரம்பிக்கலை..
சீக்கிரம் போனாதான் இடம் பிடிக்க முடியும் .
மெல்லமாக இருளில் எனை இடித்து கொண்டு போனாள்...என்னவள்

ரொம்ப பத்திரமா பாத்துக்கோ அவளை, அவ எனக்கு முக்கியம் ..
அவளில்லாத வாழ்வு என்னால நினைக்க முடியாத ஒன்று..
ம்ம் கோவம் கோவமா வந்தது ,அவ மட்டும் தான் நேசிக்கனுமா ,
ஏன் நான் உன்னைய நேசிக்க கூடாதா ,நான் உனக்கு சொந்தமில்லையா?
என்ன கொஞ்சம் தூரத்தில இருக்கேன் ,நான் இல்லாம நீ இருக்க முடியுமா....
நம்ம நிகழ்சிகள் ஏதும் நடக்குமா.. புரிந்து கொள்ளாமல்,
நீ அவளுக்கு மட்டும் சொந்தம்னு சொல்றது சரியில்ல ..
ஆரம்பித்தது பொம்மலாட்டம் ..சீதா புராணம் ...ரொம்ப சுவையா நடந்து கொண்டிருந்தது .
அவளை மெதுவாக கவனித்தேன் ... அவள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்..

ம்ம் உள்ளே வரட்டும் பார்த்து கொள்கிறேன்... பொம்மலாட்டம்
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் முன் ஒரு சிறு இடைவேளை ....
ரொம்ப வலித்தது எனக்கு ,என்னை பார்த்து கொண்டே இருந்த,
அவளை மெல்லமாக தொட முயற்சிக்க அவள் மற்ற என் சொந்தங்களுடன்,
சேர்ந்து வழி விடாமல் ....கவலையோடு .....நான் ..

பேச ஆரம்பித்தேன் பொம்மலாட்டம்
வருசத்திற்கு ஒரு முறை என்றாகி விட்டது ,அழிந்து போக ஆரம்பித்து விட்டது.
நாம் சரியாக ஒன்று கூடி சிறப்பாக நடத்தினாள் மீண்டும் இந்த கலைக்கு
புத்துயிர் கொடுக்க முடியும் என் பேசி முடிக்க
மீண்டும் ஆரம்பித்தது பொம்மலாட்டம் ...சுழன்று சுழன்று ஆடினாள் அவள் .
நான் அமைதியாக அவளை கவனித்தேன் .. திடீரன என்னை இணைத்து ,
அவள் சுழல பொம்மலாட்டம் களை கட்டியது... .ஒரே கை தட்டல் விசில்
என தூள் பறந்தது அங்கு ...இது மாதிரியான நேரங்களில் மட்டும் அவள்
என்னை நெருங்க முடியும் ..என்ன செய்ய அவள் ஓரிடம் நான் வேறிடம் .
அவளின்றி என்னால் இயங்க முடியாது நான் இன்றி அவள் மட்டுமல்ல
யாராலும் இயங்க முடியாது .

பொம்மலாட்டம் நிறைவு பெற்றது என கூறி சேர்ந்தன விரல்கள்...
கட்டை விரல் எட்டி பார்த்தது சுண்டு விரலை ...

மெல்லமாக இடித்து கொண்டு போனவள் கை விரல்கள்
கோர்த்து வீடு திரும்பினாள் கணவனோடு...

Sunday, August 26, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......




பகுதி - 2

மெல்ல எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

தாக்கங்கள் என்னை எதோ செய்தது..

பேசியதில்லை ,பார்த்திருக்கிறேன்..யாரோ எனும் நினைப்பில்அவனை,

ஆனால் இன்று அவன் நினைவு முழுதும் நிரம்பி...தளும்புகிறது .

அவனில்லை இங்கு ,நினைக்க நினைக்க அவன் கடிதம் எழுதும்போது பார்த்ததுதான்

நினைவுக்கு வருகிறது ..

அந்த முகமே மனதில்,நினைவில் வருகிறது..

இது காதலா ..யோசிக்க பயமும் கூடவே...கையை திருப்பி

மணி பார்க்க நேரம் ,நரகமாக ஓடி கொண்டிருந்தது .

இன்னும் அரை மணியில் சுந்தரி எனை பார்க்க வந்து விடுவாள் ..கிளம்பணும்

நானும்,கிளம்பணுமா என்ற எண்ணம் தலை தூக்க ..

ஒரு தட்டு நானே தட்டினேன் என் தலையில் ,வீட்டிற்கு

கிளம்ப யோசிக்கும் அளவுக்கு என் நிலை ...என்னையே

திட்டிக்கொண்டு உள்ள சென்றேன்..

என் கைபையை எடுத்து கொண்டு வெளியே வந்தேன் .

யாரிடமும் கிளம்புவதாக கூறவில்லை .தொலைபேசியை

பார்த்து கொண்டே கிளம்பினேன் .

வெளியில் வந்து பார்த்தேன் எப்போதும் போல அந்த மகிழம்பூ

மரத்தடியில் சுந்தரி ..அருகினில் அந்த இருசக்கரம் நின்று கொண்டிருந்தது.

அதன் மேல சாய்ந்து கொண்டு நான் வருவதையே பார்த்து கொண்டிருந்தான்

அவன்..அந்த மரத்தடிக்கு கூட போக வில்லை கொஞ்சம் தூரத்திலிருந்தே

நான் வருவதை பார்த்த சுந்தரி எழுந்து வந்து விட்டாள்...

வாடி என் செல்ல புன்னகையே என் கூப்பிட்டுகொண்டே என்

அருகினில்....சுந்தரி.

அதே புன்னகயுடன் நான் அவள் கைபிடித்து வேகமாக கிளம்பினேன்.

சுந்தரி கணக்கராக துணி கடையில் பணி செய்கிறாள்.

அவள் இன்று அலுவலகத்தில் நடந்த விசயங்களை சொல்லி கொண்டே

வந்தாள்..சுவரசியமாக கேட்டு கொண்டே வந்தேன்..அந்த இரு சக்கர வாகனம் எனை கடந்து

சென்றது..ரயில் பாதை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருதோம்..

அப்படியே திரும்பி பார்க்க அந்த அவன் வண்டியை நிறுத்தி விட்டு

எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் .

Monday, August 20, 2012

காதல்ஆரம்பம் .... இப்படியும் .......



ரயில் விட்டு இறங்கி ரயில்பாதை கடந்து நடந்தாள்..அவளை தாண்டியும் முன்னும் பின்னுமாய் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் காலெடுத்து வைத்தாள் , இன்னும் ஒரு 5 நிமிடத்தில் உள்ளே நுழைந்து விடலாம் ..சட்டென. ஒரு குரல் நமஸ்தே ஜி..
நமஸ்தே என சொல்லிவிட்டு பரப்புடன் அலுவலகத்தில் நுழைந்தாள்.

உள்ளே நுழையும் போதே ஒரே வாசம் பொங்கல்,இட்லி வடை சட்னி என என் மூக்கை துளைத்தது ....வாம்மா துளசி உள்ளே டிபன் சாப்பிட்டு விட்டு சீட்டுக்கு போகலாம் என கூப்பிட டிபன் அறைக்குள் நுழைந்தேன்...

2இட்லி யும் வடையும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே ..அப்பாவின் நண்பர் எத்திராஜுலு சார், இந்தாம்மா என்றார் ஒரு சிகப்பு ரோஜாவும் அத்துடன் ஒரு கடிதமும்...அங்கிள் நீங்களே படியுங்க,தினம் தான் இந்த கதை நடக்குதே , அந்த பூவையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்னு சொல்லிட்டு என் சீட்டுக்கு சென்றேன்..

தபால் அலுவலகம் நான் பணி புரிந்தது..மிலிடரி கேம்பஸ் குள் இருந்தது ..எங்கு நோக்கினும் ஹிந்தி மட்டுமே..எனக்கு சுத்தமாக ஹிந்தி வராது..

பேசுபவர்களிடம் மட்டும் கொஞ்சம் உளறி வைப்பேன் ஹிந்தியில்...

கவுண்டருக்கு போனேன் ஒரே கூட்டம் கட கடவென வேலை ஓடிக்கொண்டிருக்க
எதோ ஒன்று நம்மை பார்ப்பது போல உணர்வு..
திரும்பி பார்க்க, கலா மேடம் ..என் அருகினில் வந்து அமர்ந்தார்கள் ..
துளசி துளசி என கூப்பிட ,ம்.... கொட்டிவிட்டு வேலையை தொடர்ந்தேன்..
அப்பாடா . கொஞ்சம் காலியானது..கவுன்ட்டர்...
நிமிர்ந்து வெளியே பார்க்க எனை பார்த்து பின் தலை குனிவதுமாக கடிதம் எழுதி கொண்டிருந்தான் அவன்......

மேடம் சொல்லுங்க என சொல்லி திரும்ப, சூப்பர் ஆ இருக்கு உன்னோட blouse எங்க தைக்கிறாய்..என்னோட மகளுக்கு தைக்கனும்னு சொல்ல, சரிங்க மேடம் நீங்க கொண்டு வந்து தாங்க நான் தைத்து வாங்கி தரேன்னு சொல்லி நிமிர,

கடிதம் எழுதாமல் என்னையே பார்த்து கொண்டிருந்தான் ..என்ன வேண்டும் என கேட்க மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டான்.. நான் அவனையே கவனிக்க சட்டென்று எழும்பி வந்து விட்டான் என் அருகில், என்ன கேட்பது வென்று தெரியாமல் பார்க்க ,

ஸ்டாம்ப் வேணும் என கேட்க்க ,அந்த கவுன்டருக்கு போங்க என, மேடம் உடனே சொல்லிட்டாங்க...
என்ன துளசி என்னவாம் அவனுக்கு ரொம்ப நேரம் இங்கு இருக்கிறான் என என்னிடம் கேட்க அமைதியாய் நான் ..தெரியவில்லை என தலையாட்டினேன நினைவுகளில் அவன் வேலை செய்ய ,நிமிர்ந்து பார்க்க காணவில்லை அவனை ....

மேடம் நாளை எனக்கு மோர்னிங் ஷிப்ட் .நீங்க அடுத்த வாரம் எடுத்து வந்து கொடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். எனக்காக சுந்தரி வாசலில் காத்திருந்தாள்..அழகோவியமாய் அவள்...
என்னுடன்..அவளுக்கு நான் என்றால் மிக இஷ்டம் ...

ரயில் பிடிக்க விரைவாக நடந்து கொண்டிருந்தோம்

..மீண்டும் அந்த சத்தம் அந்த புல்லெட் காரன் ..அவளிடம் அவனை பற்றி பேசி கொண்டே ,கண்கள் அலை பாய ..ரயில் நிலையத்தை அடைந்தேன்..
ஒரு ரயில் மிஸ் செய்து விட்டு பேசிகொண்டிருந்தோம் " அம்மா வேர்கடலை" என அந்த பெரியவர் கேட்க..இருவரும் வாங்கி கொண்டு செங்கல் பட்டு ரயிலுக்காக காத்திருந்தோம்..அப்போதும் எனை தூண்டிய உணர்வு திரும்பி பார்க்க சொல்ல, யாருமில்லை ..மீண்டும் வேர்கடலையுடன் நாங்கள்..

ரயில் வந்து கிளம்ப ரயில் நிலையம் தாண்டும் முன்
அந்த பெயர் போர்டில் சாய்ந்த வண்ணம் இருப்பது யார் என்று யோசிக்க சட்டென நினைவுக்கு வந்தான் கடிதம் எழுதியவன் , சுந்தரி அவன்தான் அங்கே பாரு நல்ல எட்டி பாருடி நான் சொன்னனே என கூற நிலையம் முழுதுமாய் மறைந்தது....அவள் பார்க்கவில்லை,என் கண்கள் முழுதும் அவன் ..

காலை 6.30 ரயில் பிடித்து நான் வந்து நிலையத்தில் இறங்க.. யாருமில்லாதது போன்ற உணர்வு...நடையை துரிதமாக்கி அலுவலகத்தில் நுழைந்தேன் ....அந்த புல்லெட் காரன் கவுன்ட்டருக்கே வந்து விட்டான்...எப்படியோ அவன் கொண்டுவந்த வேலையை முடித்து கொடுத்தேன்..

நினைவு ஓடி கொண்டிருக்க மீண்டும் சிகப்பு ரோஜாவும் கடிதமுமாய் எத்திராஜுலு சார், என்னருகில் ..இது யாருன்னு கண்டு பிடித்து ஒரு பதில் சொல்லிவிடும்மா என கூற

பார்வையால் என்ன அங்கிள் நீங்களே இப்படி சொல்லறீங்க.. நேரம் நெருங்க அடுத்த ஷிப்டுக்கு வந்து விட்டார்கள், நான் கிளம்ப ,இன்று தனியாக ரயில் நிலையம் போகணுமேன்னு நினைத்துகொண்டே கிளம்பினேன் ..வாசல் வரை வரும்போதே உள்ளிருந்து துளசி உனக்கு போன்,
வாம்மா என்ற கலா மேடமின் குரல்..

யார்.............யாராக இருக்கும்..யாருக்கும் இந்த நம்பர் தெரியாதேன்னு கேட்டுகொண்டே எடுத்தேன் தொலைபேசியை ..

சில நிமிட மௌனங்கள் யார்..யார் என நான் கேட்க.ப்ளீஸ் வெச்சிடாதீங்க நான் சொல்றதை கேளுங்க..இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போகிறேன்.இனி உங்களை பார்க்க முடியாது.என்னுடைய அட்ரஸ் உங்களுக்கு தருகிறேன் உங்களுக்கு சரியென்று பட்டால் கடிதம் எழுதவும்..
நான் சரியாகத்தான் தேர்ந்தேடுத்திருகிறேன் என்று சொல்லிவிட்டு ,ஹெலோ நீங்க யாரு என கேட்பதற்குள்தொலைபேசி அணைக்கப்பட்டது ...

யோசித்து கொண்டே எழுந்தேன் ரயில்நிலையம் வரை தனியாக செல்லணுமே ..யோசித்து கொண்டே நடக்க மீண்டும் அந்த புல்லெட் காரன் ..வேக வேகமாய் என் அருகினில் வந்து வண்டியை நிறுத்தினான் ....சைகை செய்தான்..மேற்கொண்டு நடக்க முடியாமல் என்னவென்று தமிழில் கேட்க..அவன் சொல்வது புரிந்து புரியாமல் நடக்க ஆரம்பித்தேன்.....
ரயில் நிலையம் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்..ரயில் வர ஏறாமல் அமர்ந்திருந்தேன் ..

வெள்ளை உடையில் எனை கடந்து சென்றவன் என் பார்வையை இழுக்க ஆரம்பிக்க மெல்லமாக திரும்பினால் அந்த கடிதம் எழுதியவன்..ஓ இவன் கப்பற்படையில் வேலை பார்பவனோ என நினைத்து கொண்டே அடுத்த ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன் ,ஒரே படபடப்பு என்னிடம் .

ரயில் கிளம்பியது ,வேகமாக ஓடி வந்த அவனின் கையில் இருந்த ஒரு புத்தகத்தைசன்னல் வழியாக தந்துவிட்டு மறைந்தான் ..நான் திரும்பு நேரம் அவனை காணவில்லை..பக்கத்தில் இருப்பவர்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு.....இனம் புரியா படபடப்பு.

மெதுவாக எடுத்து பிரித்து பார்த்தேன் ..காதல் கவிதைகள் 12 மட்டுமே..அதற்கான காரணத்தை நேரில் காணும் போது சொல்கிறேன் என்று குறிப்பு வேறு.....

எனை பார்த்த தினத்திலிருந்து இன்று வரை அனைத்தும் குறிப்பிட்டு எழுதிருந்தான், அதன் கடைசியில் அலுவலக முகவரி...
அதை வைத்து அவனை கண்டு பிடிக்கணும் என சொல்லி கொண்டே திரும்ப கட்டிலிருந்து விழுந்தேன்..அம்மா என்னவென்று கேட்க ..இனம் புரியா சந்தோசம் எனக்கு....ஒன்றுமில்ல என சொல்லிவிட்டு கிளம்பினேன் அலுவலகத்திற்கு..

கடிதம் எழுதிகொண்டிருந்தேன் அவனுக்கு ....அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ..என்ன எழுத ஒண்ணும் புரியல.... ...

துளசி உனக்கு பார்சல் வந்திருக்குமா ...பிரிங்க அங்கிள்..
பாரும்மா இதிலையும் சிகப்பு ரோஜா,...என சொல்லி கடிதத்தை அங்கிள் பிரிக்க ...கடிதத்தை பிடுங்கிக்கொண்டு ,அந்த பழைய கடிதங்களையும் தாருங்கள் அங்கிள் என சொல்லி , என் சீட்டுக்கு சென்றேன்.
அங்கிள் ரோஜாவை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் ......
என் எண்ணங்கள் முழுதும் சிதறிய வண்ணங்களாய் ....இதுதான் காதலா ..............

Thursday, August 9, 2012

பிறந்த நாள்



ஸ்ரீ இங்க வாம்மா ....என அம்மா கூப்பிட ஸ்கூல்பேக் எடுத்துக்கொண்டு

ஓடினேன், என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தாள்

அம்மா, இன்னும் நேரம் இருக்கு பள்ளி வாகனம் வர..

சுசி அக்காவும்,அத்தையும் வந்தாங்க,அத்தை அம்மாவுடன்

பேசி கொண்டே வந்தாங்க.சுசி அக்கா என் கையை பிடித்து

தன்னுடன் என்னை சேர்த்து நடந்தாள்....

சுசி அக்கா நீங்க நேற்று சொன்னது போல ஈவ்னிங் வீட்டுக்கு

வாங்க உங்க கை நிறைய சாக்லேட் கேக் எல்லாம் தரேன் ....

ம். வரேண்டா ....

எங்க பஸ் முன்னாடி வந்திடும் நான் உனக்காக வெய்ட் செய்கிறேன்...

உனக்கு என்ன வேணும்னு சொல்லு அக்கா வாங்கிகொண்டு வரேன்....


டா... டா டா ...


கல்லூரி பேருந்துக்குள் ஏறும் வரை என் கவனம் ஸ்ரீ மீது..எல்லாருக்கும்

சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தது பஸ் நிலையத்தில்..

இன்று கல்லூரியில் ஸ்ரீயை பற்றி தோழிகளிடம் அதிகம் பேசினேன்...

முதல் வகுப்பில் படிக்கும் அவளுக்கு,அழகான ஒரு பென்சில்

பாக்ஸும், குட்டி கரடி பொம்மையும் வாங்கினேன்... ஸ்ரீ கேட்ட

பெயின்டிங் செட்டும் வாங்கி கொண்டேன்....


அவளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்..

மாமா பிள்ளைகளை அழைத்து கொண்டு பள்ளிவேனில்

சென்றார் புன்னகையுடன்...

ஸ்ரீ யின் பஸ் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்றது...

பின்னால் சத்தம் போட்டு கொண்டு

மக்கள் ஓடி வர...பஸ்சிலிருக்கும்

பிள்ளைகள் அழுது கொண்டே இறங்க .

டிரைவர் இறங்கி ஓட மக்கள் விரட்ட....

பரபரப்பு..அங்குமிங்கும் ஸ்ரீ யை தேட என் கண்கள்....

தார் சாலையில் தாராய் அவளின் ரத்தம் ஓட ...

சுருண்டு கிடந்தாள்...

முதல் சுவாசம் கிடைத்தநாளில் ...சுவாசமின்றி..
---------------------------------------------------------------------

Friday, August 3, 2012

கைம்பெண்ணின் கனவுகள்




என் நினைவுகளின் நேரங்கள் ...
தன் வயம் கொண்டகனவுகள்
குழலின் நாதம்போல நீண்டுசெல்லும்நேரங்கள்....
இனம்புரியாமல் காணுகின்ற கனவுகள்
விழிக்கையில் இனம் புரியா படப்படப்பு
உயிர் துடிக்க உடலெங்கும் தகிக்க ..

விழிகளின் வேலிகளுக்குள் நீ எனை
மீண்டும் அழைக்க.உன்னுடனான அந்த
கனவு கோட்டைக்குள்....அளவில்லா
ஆனந்தங்கள் ,கரிய இருளுக்குள்...
வெளிச்சத்தை கொண்டு வரும் ..
நினைவுக்கனவுகள்

பலவண்ணங்களாய் சிதற தினம் தினம்
கனவுக்குளியல் சிறகடித்து பறக்க...
வெடவெடத்து உயிர் நடுங்க ...
தனிமை கனவுகள் உடலை சருகாக்கும்
தீயிலிட்டு பொசுக்கும் தருணம்

சாரலாய் தூறலாய் நீ என் மேல் விழ...
நிலையில்லா கனவுகளின் மேலிருந்து
விழுந்து ,வேதனைகளை...மறைத்து ,
சன்னல் கம்பி பிடித்து எழுந்தேன்
கோடி சாரலாய் கொட்டிய மழையுடன்
இணைந்தேன் நீ என்று..................

கருவறை ஊமை

மலையில நாம் ஓடி இருந்தால் நிச்சயம் வளைந்து நெளிந்து ஓடி

பாதையை பிடித்திருப்போம்..

ஆனா இப்படி எல்லாருடனும் ஓட வேண்டி இருக்கே நொந்துகொண்டேன்.

நான் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி மட்டுமே எனக்கு.

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களோடு ஓடிவர நான் மட்டும் வெற்றிக்கனி பறித்தேன்,

அளவில்லா ஆனந்தத்தில் மிதக்க..

என்னுடன் இன்னொருவரும் இணைந்து வர.....

நான் மிகவும் வேதனையோடு வெற்றியை பகிர்ந்து கொள்ளணுமா

என நினைத்து கண்ணீர் விட்டேன்..

அம்மா சந்தோஷத்தில் தடவி கொடுத்தார்.. விட்டு கொடுத்தேன்..

நாட்கள் நகர்ந்தன, நிறைய வேறுபாடுகள்

எங்களுக்குள். நிறைய சந்தோசங்கள்

சின்ன புன்னகைகள் ,விட்டு கொடுத்து இருப்பது

என எல்லாவிதத்திலும் ஒற்றுமையாய் இருந்தோம்..

புது உலகை நோக்கி எங்கள் பயணம் முதலில் அவளும் ,பின்னர் நானும் ..

எங்கள் அருகினில் அம்மா ......சந்தோசங்கள் கொஞ்சல்கள் ...

அவள் தங்கையாம்,நான் அண்ணன் என்று பல குரல்கள்....

அருகினில் அம்மா... சட்டென்று ஒரு மயான அமைதி அருகினில் குரல்களை காணோம்

.கண் விழித்து பார்க்க தங்கையை காணோம் ..குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்

9து மாதங்கள் என்னுடன் வாழ்ந்தவள்,இருட்டுக்குள் என் அன்பை பெற்றவள்

பிறக்கும்முன்னே வெற்றி பெற்றவள் பெண் குழந்தை என்பதால்..

அழிக்கப்பட்டாள் என் சகோதரி .


விருப்பமில்லா பிறப்பை ஊமையாய் எதிர் கொண்டேன் நான்...



Tuesday, July 17, 2012

எப்போதும் என் நினைவில் நீ ....


விடியலின் பொழுதுகளில் உன்
ஞாபகம் எப்போதும் ...
இரவின் துவக்கத்தில் -உன்
மடி சாய்ந்த ஞாபகம் .....

நீ உறங்குகையிலும் உன்
முகம் எனை எதிர்பார்த்து ....
வந்துவிட்டேன் உன்னருகில் -இனி
எப்போதும் உன்னை விட்டு செல்ல
மனம் விரும்பவில்லை ....

ஆழ்ந்து உறங்குகிறாய் ..உன்
உறக்கத்தில் தான் எத்துணை
சந்தோசம் அம்மா ...என் அருகாமை
இன்றி எத்தனை வேளைகள்
எத்தனை பொழுதுகள் -நீ
காத்து கொண்டிருக்கிறாய் ..எனக்காக ..

உன் உறக்கத்திலும் உன்
விரல்கள் என்னை வருடுகின்றன..
தேடுகின்றன என் மோதிரத்தை ...
அப்பாவினோடது நினைவாக ..
என் விரல்களில் ....

எத்தனை காய்ப்பும், கரடு
முரடுகளும் உன் கைகளுக்குள்..
எத்துணையும் இன்றி ....
உன் கைகளுக்குள் நான்
இத்துணை வயதிலும் .....

வார்த்தைகள் எப்போதும்
மென்மையானது உனக்கு-
அந்த மென்மை உன்னை
மேன்மை ஆக்குகிறது அம்மா
எப்போதும் எனக்குள் ...

ஓராயிரம் ஆண்டுகள்....
ஆனாலும் உன் அன்பிற்கும் ,
அரவணைப்புக்கும் இணை....
உன் அன்பு மட்டுமே ...அம்மா

எத்துணையின்றி இத்தனை
காலம் அம்மா நீ -
என் துணையுடன் இனி வரும்
காலமெல்லாம் நீ என்னுடனே அம்மா

Friday, June 15, 2012

வண்ணங்களின் ஆளுமைகள்





வண்ணங்களில் ஒளிந்து கிடக்கிறது....
அடர்ந்த ஒன்று கோரமேன்றும்...
மற்றொன்று அழகென்றும்...
மாந்துளிர்களை கொண்டது போதுமென்றும்...
வண்ணங்களின் எண்ணங்கள் ...

ஒளிந்துதான் உள்ளது எல்லோரிடத்திலும் ...
அதை கொண்டுதான் வாழ்கை நடக்கிறது .......................
நான் அவைகளை கண்டுகொள்ள போவதில்லை .......

உண்மையும்,பொய்யும் தொடர்கின்றன -என்னை....
இனங்களிலும் ,மதங்களிலும் ஆளுகின்றன அவை ....
என்னையும் அவை தனக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கின்றன..

காலங் காலமாய் வண்ணங்கள் பிரித்தாளுகின்றன....
தொட்டு வாங்குவது,தொடமால் போடுவது...
தொடாத நீர் நிலைகள், வணங்காத கோயில்கள் ..
நான் ஒதுக்க முயற்சி மேற்கொள்கிறேன்...

இதை மாற்ற முயற்சிகொண்டு ...........
மற்றதை ...........தொடர நினைக்கிறேன் ,

வண்ணங்களில் சிக்கி கொள்கிறேன்.......

//எண்ணங்களுக்கேற்றபடி வண்ணங்களும் மாறும் அம்மா//.

Friday, May 25, 2012

ஒத்தையாய் பெற்றதால் ...


ஒத்தையாய் பெற்றதால் ....................

தாயும் உண்டு...அருகே
தந்தையில்லை ....
கணவன் உண்டு - அருகே
கடல் தாண்டி வேலை கொண்டு ...
சகோதரிகள் உண்டு -அருகே
மாலை மாற்றி, வேறு வீடு
சென்றதால் பிரச்சனைகள் -கொண்டு
சகோதரன் உண்டு- அருகே
மனைவியின் வீட்டில் சத்தமில்லாமல் ...

ஆறுதல் கூற ஆளில்லாமல் -அருகே
தலை சாய தோளில்லாமல்-என்
சிரம் தாழ்ந்து எதையோ நோக்கி -என்
நினைவுகள் உனை நோக்கி படையெடுக்க-என்

தாயும் தந்தையுமானவளே-உன்
கல்லூரி சுற்று பயணம் -முடித்து
சீக்கிரம் இந்த தாய் -அருகே
வந்துவிடு என் கண்மணியே....

இலவசம்


11 hours agoTamizh Selvi

கருப்பும வெள்ளையும் .....ஆஹா.....
கலரும் ரிமோட்டும்....ஆஹா.....
வளைந்த முன் பகுதியும் ....ஆஹா ...
தட்டையான ,மெல்லிய -உருவமும்
எங்கும் மாட்டிக்கொள்ளலாம் -எனும்
வடிவத்தில்-ஆஹா .... இது ஒரு காலம்....

சர்க்காரு இலவசமாவே கொடுத்தது ...
சகலவங்களுக்கும் ....
மரம் இல்ல... காத்தும் இல்ல....
வெயிலும் கூட கூட......
சர்க்காரு கொடுத்தது மேசை விசிறி (மின்)
இலவசம்தான் ...அள்ளி அள்ளி .............
எல்லாமே மின் சாதன பொருளு ..... இது ஒரு காலம்

"அன்னிக்கி பாடினாரு NSK ...........
இன்னிக்கு எல்லாமே மின்சாரத்த ....
தட்டின தட்டுல கிடைக்குது
ஊரே நவீன மயமாயிட்டதுன்னு...
நினைக்க இல்ல..... இல்ல....
மயானம்மாயிட்டது ......
மின்சாரம் இல்ல .தண்ணி இல்ல
டாஸ்மார்க் மட்டும் உண்டு
மின்சாரம் இல்ல ...உற்பத்தி இல்ல
ஆனா இறக்குமதி உண்டு ..வரி உண்டு ...
விலை ஏற்றம் உண்டு ...
பூங்காக்கள் இல்ல ......
நவீன IT பூங்காக்கள் உண்டு ...
மின்சாரம் இல்ல ...
மின் மயானமும்... இல்ல
வர நேரமும் தெரியல .........
போற நேரமும் தெரியல ..........
மரங்கள் இல்ல .....
மயானத்தில விறகும் இல்ல
எங்கும் அடுக்கு மாடி உண்டு
புதைக்க எரிக்க இடம் இல்ல ...

ஆண்ட காலத்தில மழை நீர் -சேகரிப்பு
போல...........வீட்டுக்கு ரெண்டு மரம் ...
எல்லாத்துக்கும் எல்லாமும் கிடைத்திருக்குமே

எல்லாத்துக்கும் கண்டனம் உண்டு ....
.ஆனா ஒத்துமை இல்ல ..
இது இப்போ நடக்கிற காலம் ...

அக்கம் பக்கம் கொஞ்சம் .............
பாருங்க ....நாங்களும் எளியவங்க தானுங்க...
ஆனா போராடுவோம் ....கொஞ்சம்
வாழ்ந்து இன்றும் பேசப்படும்...........
தலைவர்களை போல வாழ ஆசைபடுங்க.....

Thursday, March 29, 2012

காணி நிலம்







எல்லையில்லா கனவுகள்.
நினைத்து நினைத்து -நான்
ஏங்கிய காணி நிலம் -விழி
விரித்து பார்க்க பார்க்க
விண்ணை தொடும் ஏக்கங்கள் ..
ஏர் உழுது ...நீர் பாய்ச்சி...
சேற்றுக்குள் சுகமாக நடந்து ..
நாற்று நட்டு ---விடியல்தோறும் ..
காணி நிலம் என் கண்ணுக்குள்...
களை எடுக்க............
மருந்து தெளிக்க ...பயிர்
முகம் சிரித்து செழித்து வளர
நாளை அறுவடை .....
இங்கேயே உங்களுக்கு
மதிய உணவு என சொல்ல ....
என்னாலும் முடிந்ததே விவசாயம்
செய்ய ...
இனி செய்வேனா விவசாயம் ???
காணி நிலம் முழுதும் கவர்ன்மெண்டின்
ஆக்கிரமிப்பில் ....
எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய
என் விழிகள் கனவுகளில்.............
மட்டுமே செயல்படும்..........

Wednesday, March 21, 2012

"சாமிக்கு பூ"



செம வெயில் இன்னைக்கு சொல்லிட்டே வேலைக்காரி உள்ளே வந்தாள்..

அம்மா உங்க மொபைல் அடிக்குது ....எங்க இருக்கீங்க கத்தினாள்...

அத கொஞ்சம் மாடிக்கு எடுத்துட்டு வாயேன் ..

அந்த ரூம் ல சரியா சிக்னல் இருக்காது ...சொன்னங்க பார்வதியம்மாள்

வேலைக்காரி முனகிக்கொண்டே கொண்டு போனாள்,,

இப்போ போடற வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு சொல்லிட்டே

பார்வதியம்மா உள்ளே வந்தாங்க..

இந்த வருடம் தான் வெயில் அதிகம்னு தொலைக்காட்சி அலறியது ,

எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....

ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,

நாங்க பார்வதியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...

அந்த பிரச்னை டிவிசெய்தில மட்டும்தான் கேட்போம்

பார்வதியம்மா வீடு சூப்பரா இருக்கும் .

நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி

ரொம்ப அழகா இருக்கும் ...

பார்வதியம்மா சுத்தமா வைத்திருப்பாங்க வீட்டை..

நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட

வேலைக்காரிய விட்டு சரி செய்ய சொல்லுவாங்க..

எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ...

ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு

ஒண்டு குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில

இருந்தோம் ,அங்க காத்து கூட சரியா வராது ...

நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்

போடுவதற்கு வந்தாங்க...எங்களை காலி செய்ய

சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளுக்கு ஒரு

மூலையில இருந்தோம் ...............


எங்க பெரியப்பா வீட்டுக்கு வந்தாங்க இப்படி நகரத்தில

இருந்து என்னத்தை கண்டீங்க....

பெரியவளுக்கு இருக்க வீடு கூட இல்லை ...ம்ம் ...

காலம் அப்படி போய்கொண்டிருக்கு ,என்ன செய்ய....

என்னோட பேச்சை கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட

பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்கு கூட்டிட்டு

வந்திட்டார் ..

அழகான கிராமம்,அமைதியான ஊர் ..அதிலும்

நாங்க இருக்கிற பார்வதியம்மா வீடு நினச்சாலே ரொம்ப

சந்தோசமா இருக்கு ..


கதவை திறக்கிற சத்தம் , அம்மாதான் வர்றாங்க ..

கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான்

திரும்ப போயிட்டு சீக்கிரமா வரேன்....

இல்லேன்னா பார்வதியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு

போய்டுவாங்க ....

அப்புறமா உனக்கு பிடிச்ச தேன் கிடைகாதுடா

என்றாள் ,என் அம்மா கீச் கீச்...

கொஞ்சு மொழியில் ...

அட என்ன பாக்கறீங்க ...இந்த பசுமை மாறா

கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..

இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...

இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை

போன்ற வர்களுக்காக "செல் கோபுரத்தை"

தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க சிட்டு குருவிகள்தான் "


வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...






Thursday, March 8, 2012

வேகத்தடை .................



பிரண்ட்ஸ் எல்லோரும் பைக் வாங்கிட்டாங்க ,எனக்கும் பைக் வாங்கி தாங்கம்மா,

ம்ம்ம் ....கொஞ்சம் அழுது அடம் பிடித்து புதிய model ...பைக் வாங்கினேன்...

சின்ன பூஜை வீட்டில்..வண்டிக்குத்தான், எடுத்துகொண்டு சிட்டாய் பறந்தேன்...

அப்பப்பா...சைக்கிளில் போவதை விட இந்த சந்தோசம்..........

காற்றை கிழித்து கொண்டு போகும் சுகம் ,தனி சுகம்டா..


ஒரு வேலை அம்மா வேண்டாம்னு சொல்லியிருந்தால் அப்பா வாங்கி தந்திருக்க மாட்டார்....

அம்மாக்கு சின்ன பரிசு வாங்கணும் ,யோசித்துகொண்டே.."pizza corner " வந்தேன் ...

நண்பர்களின் கூட்டம்.....வா...... மச்சி, வாடா..... மாப்பிள்ளை ....வாடா கிரண் ...

"pizza corner " ரில் இருக்கும் அனைவரும் திரும்பி பார்க்க பசங்க சத்தமா கூப்பிட்டாங்க

,"ஸ்டைல்" ஆக வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு வந்தேன் ...

டபுள் cheese ...pizza ..... ஆர்டர் செய்து வெயிட் செய்துகொண்டிருந்தோம் ...

என்னதான் அப்பா அம்மா கூட வந்தாலும் இப்படி நண்பர்கள் கூட வருவதே தனி சுகம் ...

கிரண் மச்சி, என்ன யோசனை....எப்போ ஆரம்பிக்கலாம் என்றான் வினு ,மெசேஜ் செய்து கொண்டே ....

செமஸ்டர் லீவ் ல , செய்யலம்மா னு கேட்டான் வினு .... ..நாம எடுக்கபோற படத்தை பத்தி எங்க அப்பாகிட்ட பேசணும்வினு ....

... அவர் ஓகே சொன்ன பிறகு இதை ஆரம்பிக்கணும்.....

2 மணி நேரம் போனதே தெரியவில்லை ...

அப்போதும் போன் பேசிகொண்டே இருந்தான் வினு ... ...டேய் மச்சி போதும்டா..,எல்லோரும் ஒன்றாய் கூற ...

சிரித்துகொண்டே நான் .. பேசிக்கொண்டே மற்ற நண்பர்களும் கிளம்பினோம் ....

. வினு .. போன் பேசிக்கொண்டே கை ஆட்டி வேகமாய் பைக் ஸ்டார்ட் செய்தான் ...


நல்லா இப்படியும் அப்படியுமாக திரும்பி திரும்பி படுத்துகொண்டிருந்தேன்,இன்னும் அப்பா வரவில்லை..

காலிங் பெல் அடிக்கும் சத்தம் ....திரும்பினால் அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் ...

,படியிறங்கி வந்து, ஹால் லைட் போட்டு கதவு திறக்க...கிரில் கேட்டின் மறுபுறம் கிரண் கதவு திறடா, என்ற வினு வின் குரல் .....


வினு வீட்டுக்கு போகலியா ,கேட்டபடி கதவு திறந்தேன் ...வெளியே சில்லுனு காற்று ...மழை வருபோல இருந்தது ...

அவளை பாக்க போனேன் ,பாக்க முடியல... ரொம்ப நேரம் ஆயாச்சு ...இந்த நேரத்தில போனா எங்க அம்மா திட்டுவாங்கடா ..

..ப்ளீஸ் கிரண் உன் கூட ,உங்க வீட்ல இருந்தேன்னு சொல்லிடுடா எங்க அம்மா கேட்டா.....

சரி சரி உள்ள வா , அவனுக்கு படுக்க என் STUDY ரூம் ARRANGE செய்து கொடுத்தேன்

உங்க அம்மாக்கு தெரிய வேண்டாம் கிரண் .....என்றான் வினு ..

இன்னும் அப்பா வரல டா .காலிங் பெல் அடிச்ச நீ கதவு திறக்காதே .."ஓகே " சொன்னான் வினு .

வேறு உடை எடுத்து கொடுத்து விட்டு , அம்மா பக்கத்தில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தேன்

நேரம் ஆகுதுடா கிரண் ..7 மணிக்கு போகணும்னு சொன்னியே , அம்மா கீழிருந்து சத்தம் போட ,துள்ளி எழுந்தேன்

பக்கத்தில வினு நின்றுகொண்டிருந்தேன் ..டேய் எப்போ மாடிக்கு வந்த , அம்மா உன்னை பாத்தாங்களா..

இல்ல கிரண் மச்சி , அம்மா என்னை பார்க்கவில்லை ,நீ சீக்கிரம் கிளம்புடா னு சொல்லி அமர்ந்தான் சோபாவில் வினு...
.
நான் எழுதிய "வேகத்தடை " கதை யை படித்து கொண்டிருந்தான் .....

ஆனந்தமான குளியல் , எனக்கு பிடித்த ஷர்ட் எடுத்து வைத்து விட்டு போய் இருந்தாங்க அம்மா ...

கிளம்பறேன்மானு சொல்ல,இரு இரு பூஸ்ட் எடுத்து கொண்டு வரேன் கிரண் சாப்பிட்டு போடான்னு சொன்னாங்க அம்மா ....

... வினு வந்திருக்கான் ,அவனுக்கும் எனக்கும் பூஸ்ட் தாங்கம்மா ....

வினு வோ ஏதும் வேண்டாம் , சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்லியபடியே பாத் ரூம் குள் நுழைந்தான்

பூஸ்ட் எடுத்து கொண்டுவந்தாங்க அம்மா. .எங்கடா வினு ?

அம்மா கேட்க ..பாத் ரூம் ல இருக்கிறான் அம்மா என்றேன் ..

என்ன ...........என்றுமில்லமால் இன்று இப்படி காற்று .............வீசுகிறதே .........

தனக்குள் பேசிகொண்டே போனாங்க அம்மா ....

வினு அம்மா உன் கிட்ட பேசணும்னு வந்தாங்கடா ....

பதில் ஏதும் கூறாமல் PERFUME எடுத்து அடித்து கொண்டிருந்தான் .. போதும்டா மச்சான் ,.....

கொஞ்சமாவது அதில் இருக்கட்டுமே எனக்கு என்றேன் சிரித்து கொண்டே.....

ஏன்டா வினு ...அவளை பார்க்க போன இப்படிதான் போவியா ...

சிரித்தான் வினு ...காற்று மிக பலமாக வீசியது ...வண்டியை வீட்டு உள்ளிருந்து எடுத்தேன் .. .

கிரண் எனக்கு எழுந்ததிலிருந்து தலை வலிக்குதுடா ,அந்த நாயர் கடையில ஒரு டீ சாப்பிட்டு போவோம் என்றான் வினு ...........

,அம்மா பூஸ்ட் கொடுத்தாங்க சாப்பிடமா வந்த ..இப்போ நாயர் கடைக்கு போகலாம்னு சொல்ற....

போன் அடிக்குது பார் எடுத்து பேசுடா வினு...

கிரண்,.அவளை பாக்காம வந்திட்டேன்னு அவளுக்கு கோவம்....அதான்

போன் பண்ணிடே இருக்காடா ..என்ன பதில் சொல்லன்னு தெரியலடா என்று வினு சொல்ல ...

இன்னும் சண்டை போடறாளா.. டா ..சிரித்தான் ..

இல்லடா கிரண் ,ரொம்ப பாசமா இருக்காடா .......

திடீர்னு கோவப்படறாடா..எங்கயும் பைக் எடுத்துக்கொண்டு போக கூடாதாம் .

அவளை மட்டும் தான் வண்டியில கூட்டிட்டு போகணுமாம் பிரண்ட்ஸ் கூட ஏறக்கூடாதாம் ,ரொம்ப ஆர்டர் போடறாடா, மச்சி

என்றான் வினு ..

சிரித்தேன் நான்.."காதலில் கண்டிப்பும் சுகமா தானே இருக்கும் ...சொல்லிட்டே ,

அம்மா, கிளம்பறேம்மா.. என்றேன் ..
.
..பத்திரமா போகணும் பா , அப்பா மொபைலுக்கு பேசு .. சொல்லி கொண்டே, அம்மாவின் குரல் எங்கள் அருகில் கேட்க

கிரண் சீக்கிரமா கிளம்பு உங்க அம்மா கேக்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது டா என்று வினு கூற

......சிரித்தேன் நான் ...

அம்மா வருவதற்குள் சீறியது என் வண்டி............மிக பலமாக காற்று வீசியது ....

தொடர்ந்து மொபைல் அடித்து கொண்டே இருந்தது ,

வினு போன் எடுத்து பேசுடா , என்றேன்

... அங்க போன பிறகு பேசலாம்னு சொன்னான் வினு ....

காற்றை கிழித்துகொண்டு வேகமாக செல்ல ஆரம்பித்தேன் ...

வழியில் சந்துரு அவனுடைய பைக்ல,அவனும் எங்களோடு .........

ஷ்யாம் வீடு வாசலில் பைக் நிறுத்தினேன் ..மொபைல் கையிலெடுத்தேன் விடாமல் அடித்தது..அம்மாதான் ..

அவன் எங்கடா என கேட்டான் சந்துரு ..யார் ? டா மச்சான் .. அதான் நம்ம காதல் மன்னன் வினு ...

என்னோடதானே வந்தான்னு சொல்ல ....என்னடா கிரண் நீ மட்டும் தானே வந்த ...என்னாச்சு உனக்கு சந்துரு கேக்க .....

கொஞ்சம் யோசனையுடன் . அம்மாவுக்கு போன் செய்தேன் ..லைன்

பிஸி யாகவே இருந்தது ........

ராமின் கால் உள்ளே வர அதை அட்டென்ட் செய்தேன்......நேத்து ..நைட் ACCIDENT டா கிரண் ..

வண்டில வேகமா போயிருக்கான் வினு , ஸ்பீட் பிரேக் கவனிக்காம போய் ,விழுந்து இருக்கான்டா .

தலையில பலமா அடிப்பட்டு ..........குரல் கமற,

நம்மளை எல்லாம் விட்டு போய்டாண்டா வினு ..

..சொல்லி அழ ஆரம்பித்தான் ராம் ..... .

உயிர் என்னுள உறைய

......... . வினு என்று கதறினேன்

Saturday, March 3, 2012

அந்த நிமிடம் ...



அந்த நிமிடம் ...

"உள்ளாடும் கற்பனைகள் ஒரு கோடி" அனுபவித்து கொண்டிருந்தேன் , அந்த குரல் அல்லவா என்னை ஈர்த்தது ...அந்த நிலையில்

ரயில் பிளாட்பாரத்தில் இருக்கும் அனைவரும் என்னை பார்க்கும் உணர்வு ..அழகிய சிவப்பு வண்ணத்தில் சின்ன வேலைப்பாடுடன் கூடிய

சேலை எனக்கே என்னை பிடித்திருந்தது ..

ஒரு "பீச் கொடுங்க என கை நீட்டியபோதும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் , அவனின் பார்வை என்மீதே ..மீண்டும்" பீச் ஸ்டேஷன் "

கொடுங்கன்னு கேட்டவுடன் ரயில் அரை மணி நேரம் லேட் என்றான் ...அதே பார்வையில் ..டிக்கெட் கொடுங்க ..என் கவனம் முழுதும் டிக்கெட்

வாங்குவதிலேயே ....

ம்ம். முதலாய் நிகழ போகும் சந்திப்பு அசை போட்டபடி திரும்பினால் ..சில்லறை இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு போங்க அப்படின்னு

சொன்னான் அவன் ....இவன் நம்மை போக விட மாட்டான் போலிருக்கே...நினைக்க ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தேன் ..கவுன்ட்டர்

குள்ளிருந்தும் அவன் பார்வை என்னை தீண்ட .ச்சே ..நினைத்துகொண்டே ..அவன் பார்வை மறையும் இருக்கையில் அமர்ந்தேன் ...

அம்மாவிடம் தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என பொய் சொல்லிய குற்ற உணர்வு ..ம்ம் அதை மீறியும் குளிர்ந்த உணர்வு எனக்கு..இந்த

சந்திப்பு ..எப்படி இருக்கும் ..நான் எப்படி பேச வேண்டும் ..கொஞ்சம் பயமும் வெக்கமும் வந்தது ,சில்லென்ற காற்றில் முகத்தில் பட

வெளியே கவனித்தேன் ,ரெயில் மெதுவாக நின்றது ..

அக்கா இன்னைக்கு ஏதும் வாங்கலையான்னு, கேட்டுட்டு அடுத்த இருக்கை நோக்கி சென்றாள், மேரி ..௦ நான் படிக்கும் பருவத்திலிருந்தே

தெரியும் அவளை ,சின்ன சின்ன பொருள்கள் ரயிலில் விற்பது அவள் தொழில், அவளுடைய அம்மா பழம் விற்பவள்...கூப்பிட்டவுடன்

என்னக்கா வேணும், "கீ - செயின் "இருக்காம்மானு என்று கேட்க, இருக்குக்கா ..இதோ வரேன் என்றாள்..

அழகியதொரு "கீ - செயின் ...ஒரு சிறு இதயவடிவமும் பெரிய இதய வடிவுமும் சேர்ந்தது போல .."வெள்ளை மெட்டலில்" வாங்கினேன்

...ஒண்ணும் புரியவில்லை , சிறு பதட்டமும் ,படபடப்பும் மட்டுமே ..ரெயில் கிளம்பி விட்டது மெதுவாக ...

குளிர்ச்சியான உணர்வு மெல்ல உடல் முழுதும் பரவ...பயந்தே போய் விட்டேன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி போய் விடலாமா என்று

.."போனில் பேசும்போது மட்டும் தைரியமாய் பேசி இருக்கும் நான் ,,,,நேர்ல சந்திக்க போறோம் அதனாலா இப்படியான்னு, என்னையே கேட்டு

கொண்டேன்...என்னுடைய மொபைல் பேசியில் வந்த தொடர்பை நான் எடுக்காமல் இருந்திருந்தால் இப்படியொரு நிலை..சே சே...ஒரு

வருடமாய் பேசிவிட்டு இப்போது ஏன் இப்படி ஒரு எண்ணம்....பயம்தான் ..

அதற்குள் பீச் ஸ்டேஷன் அடைந்தேன் ..இறங்கி என்ன செய்வது எப்படி கண்டுபிடிப்பது ..ஒண்ணும் புரியவில்லை அப்படியும் இப்படியும்

பார்த்து விட்டு ,அங்கிருக்கும் ஸ்டால்ல தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன் ..


15 நிமிடம் யாரும் வரவில்லை ,போன் செய்தேன் ...மீண்டும் எப்போதும் பேசும்போது, பாடும் பாடலையே பாடினான் ...

கோவம் தானே உனக்கு உன்னை காக்க வைத்துவிட்டேன் என்று ...இப்போதும் உன்னை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று...சொல்ல

சில்லென்ற ஒரு உணர்வு ...அங்கும் இங்கும் அலை பாய்ந்தது என் மனதை போல கண்களும் .."கண்களும் கவி பாடுதே " மீண்டும் பாடல்

...நான் அமைதியாய் இருக்க ....

"நானே உன்னை வந்து பார்த்து பேசுகிறேன்..உன்னை எனக்கு தெரியாது..ஆனால் எனக்கு உன்னை தெரியும்னு சொல்லி சிரித்து லைன் கட்

செய்தான் ..என்ன செய்ய அவனை ...கோவத்துடன் யோசிக்க ...
.
இரு ரெயில் கடந்து சென்றது அதன் பாதையில்...தவறான் பாதையை தேர்ந்தெடுத்து விட்டோமா ..னு, நினைக்க ,

மனம் அலை பாய்ந்தது ..தனியே அமர்ந்திருந்தேன் ,மதிய வேலை நெருங்க வயிற்றில் இனம் புரியாத பயம்...பார்க்கும் யாரும் இவனா

அவனா என நினைக்க.....

மீண்டும் counterku சென்று டிக்கெட் கேட்டேன் வீடு திரும்ப ...மனம் வலிக்க ஆரம்பித்தது .....

டிக்கெட் தரதில்லீங்க குரல் ....கேட்டது போன்ற உணர்வு ...நிமிர்ந்தேன் ..

எங்கள் ரயில் நிலையத்தில் பார்த்தவன் அல்லவா ......."கண்டேன் காதல் வரம்" என்று பாடியபடியே ..என் முன் அவன்...

எப்போதும் கோவத்துடன் அவனை பார்க்கும் நான் நிமிரவே இல்லை அந்த நிமிடம் ....

Friday, March 2, 2012

சின்னவள் .........


தாயை எதிர்ப்பார்த்தபடி நான்

அவள் அவர்களின் குரலுக்கு கட்டுபட்டவளாய்..

நான் அவளுடைய சிந்தனையிலே ..

அதோ வந்து விட்டாள், என் அருகே --



சின்னவளாக உன்னை அவங்க -பார்த்ததால

நான் விலை போகல டா -அங்க



ஜாதியா ,இருக்கிறாள் இவள் இருக்கட்டும் ....

அவளை எடுத்து கொள்வோம் ..இன்றைய நம்ம மார்கெட் ல

நல்ல விலை போவா ... கொஞ்சம் வளர்ந்தால் --

இதை கேட்டு பயந்தபடி நான் -தனியே ...


மாறும் உலகில் .......



மாறும் உலகில் .....
இப்படியே உறைந்து போனாலும் ....

உன் நினைவுகள் என்னுடனே உறையட்டும்.
வெப்பம் இல்லா உலகில்......

குளிர்ந்து என்னுடனே இருக்கட்டும்..
படிவமாய் வெளிப்படும் காலத்திலும் ...

பக்குவமாய் என்னுளே நீ ...
நீ எனக்குள்ளே எப்படி என்று....
யோசிக்கட்டும்....இது எப்படி சாத்தியம் என்று....

Wednesday, February 29, 2012

சாலை வாழ்வில்.....சில கணங்கள் .....




ஒரு நாளைக்குள் எத்தனை வார்த்தைகள் ...
தினம் தாங்கியே பக்குவபட்ட மனங்கள் ...

விடியலில் இன்றைய பொழுதை ..
எதிர் நோக்கும் கணங்கள்.....பதினாறுகள்..

இனிப்பை மட்டுமே எதிர் பார்க்கும் பிள்ளைகள்..
துக்கத்தையும் தாங்கும் சில கணங்களில் ...

பொழுது முழுதும் தொடரும் எண்ணங்கள் ...
சாய்ந்த அந்தி பொழுதின் உன் அர்ச்சனைகள் ..

எதையுமே உணராத பயமில்லாத
என்னை சுற்றி ஓடும் எலிகள்,கரப்பான்கள் ..

வேதனையை வெளி உணரும் தருணங்கள் ...
சந்தோசத்தையே உணராத உன் மனம்-என்

எண்ணங்களின் வெளிப்பாடுகள் ... எதிலும்
ஒட்டாமல் முடியும் தருணங்கள் ....

வானமே கூரை என்றாலும்
வண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...

மரப்பெட்டிகளும் பிளாஸ்டிக் ....
குடங்களும் சொத்துக்கள் - மீண்டும்

பயம் உன் வார்த்தைகளின் வேகத்தினால் ..
மறைப்பில்லாத தினம் தினம் ...

புது சேலை உடுத்தி அமர்ந்திருக்கும் ..
உன்னை கையெடுத்து கும்பிடும் கரங்கள் ...எக்கணத்திலும் ..

எதை எதிர் நோக்கி நீளும் வார்த்தைகள்
வீண் வதைகளையே தரும் வார்த்தைகளை

சார்ந்த உன் எண்ணங்கள் அதில் வெளிபடுத்தப்படும்
புன்னகையின் நீளங்கள் போல ....பூக்கள்

பூக்கும் தருணங்கள் போல -தெரியாமலே
போகிறது வாசனையுடன் -உன் அர்ச்சனைகள்

தேவை முடித்ததும் தொடருகிறது ...
அடுத்த சில கணங்களில் ...

பொழுது புலருகிறது மனங்களின் -பல
வேண்டுதல்களோடு ...மீண்டும்

தொடர்கதையை சாலை பயணங்கள் ...

Sunday, February 26, 2012

ஜெர்மானிய விருதுக்கு நன்றி

Thenakka ( LIEBSTER BLOG AWARD)


சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN

அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.



இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.

இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/

2.http://ragasiyasnegithiye.blogspot.in/

3. http://podhigairajan.varuga.com/

4. கரிசல்குளத்தானின... வயக்காடு!

5 http://kavithaivaasal.blogspot.in/

இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை


உணர்வோம்..:)

அந்த வாசம் ....



எழுந்திரும்மா .அம்மா கூப்பிட... ம்ம் ..இதோ வரேம்மா என முனகியபடியே திரும்பி படுத்தேன் ,என்ன கிழமை மா ,,,இன்னைக்கு சண்டே டி ..மீண்டும் அம்மாவின் குரல் பதில் ஏதும் கூறாமல் கிளம்பினேன் .

அங்கிள் என்ன இன்னைக்கு இவ்வளவு வேகம் மெல்லமா போங்க ...வயசாகுது சொல்லிட்டு சின்ன சிரிப்புடன் திரும்பினேன்.... அம்மா எப்போதும் போல 10 அடி இடைவெளி விட்டு ....

இங்க நடக்கிறதில இருக்கிற சந்தோசம் எதிலும் இல்லம்மா னு குரல் காற்றில்...
வேகமாக நடந்து கரைந்து போனார் அந்த அதிகாலையில் இதமான பனியில் ...

சென்னையின் நுழைவு வாயில்..அழகிய மரங்களடர்ந்த மலை சார்ந்த கிராமம் ,அந்த மலைப்பாதையில் தான் எங்களின் காலை நடை பயிற்சி ...சினிமா,அரசியல் அக்கம் பக்கம் வீடு கதைகள் ,மாமியார் மருமகள் சண்டை ,பிள்ளைகளை பற்றிய குறை,யோகா மாஸ்டர் பற்றி கிசுகிசு அனைத்தும் அங்கே கேட்கும் அந்த அதிகாலையில் ..

அந்த சில்லென்ற அதிகாலையில் மூலிகைகளுடன் கூடிய ஒரு நறுமணம் ஆஹா..அற்புதம் .எங்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய ஒன்று சென்னையின் புறநகரில் வாழ்ந்தும் யோசித்து கொண்டே நடந்தேன்..அம்மா இன்னைக்கு கொஞ்சம் குளிர் அதிகம் அம்மா என் சொல்லி திரும்பி பார்க்க அம்மா தன்னுடைய சீரான நடையில் என்னம்மா என கேட்க ,

ஒண்ணுமில்ல ..நடையை துரிதமாக்கினேன்,இன்னைக்கு லீவ் நாள் அதனாலே நிறைய சந்திப்புகள் அங்கு ...

என்னை கடக்குமுன் அம்மவரலையா கேட்டவர்கள் கடந்த பின் வணக்கம் மா.. சொல்லுவது காதில் கேட்டது..

எப்போது சந்தித்தாலும் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்"அந்தோணி அங்கிள் ..யோசனையுடன் நடக்க ..அப்ப்பப்பா என்ன ஒரு வாசம் என்றுமில்லாமல் ..

"சின்ன புன்னகையுடன் வேகமான நடையில் என்னை கடந்தார் "அந்தோணி அங்கிள் "
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு சென்றாலும் ஒரு சிலர் நம்ம ஊரிலயே தங்கி இங்கு வாழ்ந்தவர்களில் " அந்தோணி அங்கிள் " குடும்பமும் ஒன்று..

சந்திக்கும் போதெல்லாம்"நானும் உங்க அப்பாவும்னு "ஆரம்பிப்பார் நேரம் ஆகுது அங்கிள் உங்க மகள் தேடுவாங்க பேத்தி அழும்னு சொன்ன,உடனே ஓகே வரேம்மா னு போய்டுவார் ...
எங்களின் இடம் ...எப்போதும் நாங்கள் செல்லும் தூரம் வந்தது அங்கு ஒரு அழகான கல் ..அதை ரொம்ப ரசிப்பேன் சில நேரம் அதில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு தான் திரும்புவேன் ...

மெல்ல மூச்சு பயிற்சி செய்துகொண்டிருக்க மீண்டும் அதே இனிமையான வாசம் என்னை தாக்கியது .அம்மாவும் நெருங்கி வந்துவிட்டார் .அம்மா சில உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்க



"அந்தோணி அங்கிள் "மீண்டும்...மலை பாதையில் நடக்கிறார் ,..... ஓகே இன்னைக்கு லீவ் தானே அதனால மீண்டும் தொடருகிறார் போல நினைத்து ..அம்மாவிடம் அம்மா "அப்பா" இருந்த நம்மகூட வந்து இருப்பாங்க தானேனு கேட்டேன் ,இதற்கு இப்பவும் உங்களுடனே இருக்கிறார் அங்கிள் பதில் கொடுத்துகொண்டே சென்றார் ...


அம்மா இன்னிக்கு குளிர் அதிகம் அம்மா ,சித்திரை மாசம் ஒரு பூ பூக்குமே அம்மா இந்த மலையில அந்த வாசம் இப்போ வந்தது அம்மா னு சொல்ல சீக்கிரமா போகலாம்மா,பாபு வருவான்னு அம்மா சொல்ல மீண்டும் தொடர்ந்தோம் நடையை..


சாலையை அடைந்தோம்...ஆரம்பித்து விட்டது வாகனங்களின் போக்கு வரத்து ... சூரியனும் மேலேழும்பிவிட்டான் , போகும்போது இருந்த குளிர சூரியன் சாப்பிட்டது போல வெப்பம் .........


சாலையின் இடது பக்கத்தில் "அந்தோணி அங்கிள்"அவங்க வீடு ஒரே கூட்டம் குழப்பம் ....ஏன்

என நினைத்துகொண்டே அம்மா இப்படியே இருங்கள் விசாரித்துவிட்டு வருகிறேன்னுசொல்ல..


வீட்டினுள் செல்ல எத்தனிக்க ...........குரல் ஒன்று காற்றில்



"அப்பா" உயிர் பிரிந்து 10 நிமிடம் .....முழுதும் கேட்குமுன் ...


அந்தவாசம் என்னை தாக்க "அப்படியே உறைந்து போனேன் "

Monday, January 23, 2012

"எங்களுக்கும் காலம் வரும்"

அம்மா அம்மா ..எத்தனை முறை அழைத்தாலும் ம்ஹும் ..கதவு திறக்கவேயில்லை
,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..

.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..
ஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..

அழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..

எங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப்பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..
அப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...

அவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,
ரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...

ஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..

ம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...
எங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,

அவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் "அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,
மீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,
அம்மா சொல்றாங்க ..

என்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,
நான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,
அம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....

திடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..

அறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....

Thursday, January 19, 2012

ஸ்பரிசம்




ஸ்பரிசம்



உணர்வாலும் எண்ணத்தாலும் மகிழ்ந்த தருணம் எது என
எண்ணி எண்ணி துவண்டு தளர்ந்து கிடந்தாள் இந்து ,

அவள் நினைவினில் தடம் பதித்து சென்ற அந்த தருணம்...
சிந்து பிறந்ததும் அவள் நேரத்தை,
கவனிக்க இன்பமாய் இதமாய் ஒரு ஸ்பரிசம் உரச ...
மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ....

வேலை வேலை என்றிருந்த நேரங்களில் அவளின் நினவு மட்டும் உரசலாய் ..

சிந்து வீட்டில் இருந்தபோது ஒரே களேபரமாய் இருக்கும்,
பணி முடிந்து திரும்பினால் வீடு முழுதும் புத்தகமாய் ,
பேனாவுமாய்,இறைந்து கிடக்கும்,

இதன் நடுவில் அவள் கையில் மொபைலும் ,
எதிரில் கையடக்க கணினியும் நெட்டுடன் இணைந்து இருக்கும்,
அவளையும் என்னையும் போல ..

அம்மா வருவதை கூட கவனியாமல் ...ம்ம் என கூறி நான் சென்றால் ..

என்னம்மா என்ற கொஞ்சலுடன் கூடிய வார்த்தையில் மூழ்கடிப்பாள்,
எதிர் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டு அம்மா என கொஞ்சுவாள்..
கண்ணாலே பேசி என்னை பேசமால் இருக்க செய்வாள்..

கையடக்க கணினி முன் கண்ணாலும் ,குரலாலும் மகிழ்விக்கிறாள்.....

அவள் ஸ்பரிசம் இன்றி ..
அதிக பிணையதொகை கட்டி பராமரிக்கும்

முதியோர் இல்லத்தில் இந்துவாகியநான் இந்தியாவில்

Friday, January 13, 2012

நீர்த்துளி



மனதில் உள்ளவைகளை புரிந்து கொள்ள வந்தாய்
சொல்லியும் சொல்லாமலும் புரியவில்லை
விழி பார்த்து இதயம் உணர்ந்து அறியும் உறவு..........
நினைவுகளின் பயணம் வெகுதூரம் .........
இமைகள் பொருந்திய தடத்தில்.....
எங்கெங்கோ செல்ல
காற்று, மழை ,வெப்பம், நீ நான் என செல்ல ..
பிரிந்த இமை தடத்திலும் நினைவுகள் ...
இமை கதவை அடித்து மூட ...
மீண்டும் இணைந்த தடத்தில் ..
இணையா தண்டவாளமாய் ,
துக்கத்திலும் ஆறுதல்,மகிழ்விலும் பகிர்வு ,
பாசத்திலும் மிஞ்சாமல் பரிவுடன்...
அலையும் விரல்அளந்து.. இமை தடத்தில்
நேர்கோடாய் அருகில்...
எண்ணங்களால் அடித்து செல்ல நிழலாய் ..
விழியோரம் கசியும் துளி நீர் வெள்ளமாய் பெருக..
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இமை தடம் ..
மூழ்கி பாதை பிரிய ..விக்கித்து நிற்க விழி...
இறுகிய இதயம் செயலிழந்து ...
பார்த்து உணர்ந்த உறவு பரிதவித்து போக...
புரியும் நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் ..
விக்கித்து நிற்கும் விழி பார்த்து ஒரே தடத்தில்
விழித்து நிற்க ...நீர்த்துளி தானே வழிந்து
தன் பாதை தேடி ..........

Sunday, January 1, 2012

விழி வழி தேடுகிறேன்



புன்னகையுடன் ..
சிறு துளியோரப்பார்வை ..
பேசுகையில் சட்டென திரும்பி வரும் பார்வை ..
கவனிக்க வைக்கும் அந்த பார்வை ..
கை மறைத்து பார்க்கும் பார்வை ...
கோவமாய் பார்வை பார்க்க நான் ...
சட்டென திரும்பும் பார்வை ...
ஏங்குகிறேன் அதற்க்கு ....
நாளும் கடக்க மீண்டும் பார்வை..
தாக்குகிறது பார்வையால் என்னை...
கோபத்திலும் பார்வை..ரசிக்க
பார்வைக்காக ஆடுகிறேன் ...
பாடுகிறேன் தூங்க மறுக்கிறேன் ..
நமக்கான பார்வை இதுதானா என..
தேட தேட கிடைத்தது பார்வை..
உன் விழி என் பார்வை...நீ பார்த்த பார்வை ...
தேடுகிறேன் தேடுகிறேன் நான் இன்று
எதை தேடினேன்.... தேடுகிறேன்
புரியவில்லை...விழி வழி...............