உன் போர்வை குடைக்கு..
உள்ளே நான் வருடங்கள் ...பல
காத்திருந்தும் பல வசந்தங்கள்
வந்து வந்து போயிருந்தும் ...
எண்ணிலடங்கா காதல்கள்
கண்டிருந்தும் ...
உன்னை தேடி நான்
என்னை தேடி நீ
அலைந்திருந்தும்.....
இலையுதிர் காலத்தில்
மட்டுமே உன்னை
முழுமையாய் நான் காண
நமக்குள்ளும் காதல் ...
நாட்கள் பல ஆயினும்
ஆணி வேராய்.....
இந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கிடக்கிறது..
நல்ல வரிகள் சகோ!...... தொடருங்கள்...
ReplyDeleteஅருமையான வரிகள் தமிழ் ..நாம் சில நினைவு போர்வைக்குள் ...நீங்காது எத்தனை காலம் ..வாழ்கிறோம் ..வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நமக்கே தெரியாது
ReplyDeleteஅவை இந்த ஜென்மதோடு..நிறைவு பெறுமா இல்லை ஜென்ம ஜென்மாந்திரமாக..தொடருமா?அருமையான கவிதை..அற்புதமான வரிகள்