Wednesday, February 29, 2012

சாலை வாழ்வில்.....சில கணங்கள் .....




ஒரு நாளைக்குள் எத்தனை வார்த்தைகள் ...
தினம் தாங்கியே பக்குவபட்ட மனங்கள் ...

விடியலில் இன்றைய பொழுதை ..
எதிர் நோக்கும் கணங்கள்.....பதினாறுகள்..

இனிப்பை மட்டுமே எதிர் பார்க்கும் பிள்ளைகள்..
துக்கத்தையும் தாங்கும் சில கணங்களில் ...

பொழுது முழுதும் தொடரும் எண்ணங்கள் ...
சாய்ந்த அந்தி பொழுதின் உன் அர்ச்சனைகள் ..

எதையுமே உணராத பயமில்லாத
என்னை சுற்றி ஓடும் எலிகள்,கரப்பான்கள் ..

வேதனையை வெளி உணரும் தருணங்கள் ...
சந்தோசத்தையே உணராத உன் மனம்-என்

எண்ணங்களின் வெளிப்பாடுகள் ... எதிலும்
ஒட்டாமல் முடியும் தருணங்கள் ....

வானமே கூரை என்றாலும்
வண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...

மரப்பெட்டிகளும் பிளாஸ்டிக் ....
குடங்களும் சொத்துக்கள் - மீண்டும்

பயம் உன் வார்த்தைகளின் வேகத்தினால் ..
மறைப்பில்லாத தினம் தினம் ...

புது சேலை உடுத்தி அமர்ந்திருக்கும் ..
உன்னை கையெடுத்து கும்பிடும் கரங்கள் ...எக்கணத்திலும் ..

எதை எதிர் நோக்கி நீளும் வார்த்தைகள்
வீண் வதைகளையே தரும் வார்த்தைகளை

சார்ந்த உன் எண்ணங்கள் அதில் வெளிபடுத்தப்படும்
புன்னகையின் நீளங்கள் போல ....பூக்கள்

பூக்கும் தருணங்கள் போல -தெரியாமலே
போகிறது வாசனையுடன் -உன் அர்ச்சனைகள்

தேவை முடித்ததும் தொடருகிறது ...
அடுத்த சில கணங்களில் ...

பொழுது புலருகிறது மனங்களின் -பல
வேண்டுதல்களோடு ...மீண்டும்

தொடர்கதையை சாலை பயணங்கள் ...

7 comments:

  1. மிகவும் நிதர்சனமான உண்மையின் உணர்வுகளுக்குள் ஊடுருவிய வார்த்தைகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வானமே கூரை என்றாலும்
    வண்ணங்கள் அழிந்த சேலையே சுவர்கள்...
    வார்த்தைகள் அருமை...கசக்கும் உண்மை...

    ReplyDelete
  3. கவிதையின் நிசர்தனமான உண்மைகள் ..நித்திரையின் மௌனத்தை உடைகின்றன ...பாராட்டுகள் .......ராம்கி .

    ReplyDelete