Saturday, April 29, 2017

என் மனம்


பொட்டல் வெளியில் வெயிலும் கட்டாந்தரையும்
கூடலில் கூடிக்களிக்கிறது
ஒற்றை பனை மர பொந்துகளின் கிளிகளும்
ஊடலில் உணவு தேடி அலைகிற்து..

ஒற்றை ஓணானின் வேகசுழற்றல் ,இமை பொழுதில்
பாதிப்பனையில் நிற்கிறது,
இன்று வரும் மழை என எதிபார்த்து காத்திருந்த கட்டாந்தரையாக,
ஒவ்வொரு திங்களும், மாறிப்போகிறது

உனக்கான காத்திருத்தலில் வெகுநேரம் நான் நிற்ப்பதை,
வெத்திலை இடிக்கும் கிழவி போல்,
தன் வாலை கொண்டு பனையில் தட்டி நிற்கிறது
எனக்கு துணையாக,

சரசரக்கும் பனைஓலையின் சரசத்தில்,காத்திருந்த
ஒணானும் குதித்து ஓடுகிறது....உ்ன் வருகை கண்டு ,
கன ம்ழைக்கு முன் வரும் கற்றாகிப்போகிறது.....என் மனம்


கவிதை..
அ.தமிழ்ச்செல்விநிக்கோலஸ்..