வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Thursday, January 19, 2012
ஸ்பரிசம்
ஸ்பரிசம்
உணர்வாலும் எண்ணத்தாலும் மகிழ்ந்த தருணம் எது என
எண்ணி எண்ணி துவண்டு தளர்ந்து கிடந்தாள் இந்து ,
அவள் நினைவினில் தடம் பதித்து சென்ற அந்த தருணம்...
சிந்து பிறந்ததும் அவள் நேரத்தை,
கவனிக்க இன்பமாய் இதமாய் ஒரு ஸ்பரிசம் உரச ...
மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ....
வேலை வேலை என்றிருந்த நேரங்களில் அவளின் நினவு மட்டும் உரசலாய் ..
சிந்து வீட்டில் இருந்தபோது ஒரே களேபரமாய் இருக்கும்,
பணி முடிந்து திரும்பினால் வீடு முழுதும் புத்தகமாய் ,
பேனாவுமாய்,இறைந்து கிடக்கும்,
இதன் நடுவில் அவள் கையில் மொபைலும் ,
எதிரில் கையடக்க கணினியும் நெட்டுடன் இணைந்து இருக்கும்,
அவளையும் என்னையும் போல ..
அம்மா வருவதை கூட கவனியாமல் ...ம்ம் என கூறி நான் சென்றால் ..
என்னம்மா என்ற கொஞ்சலுடன் கூடிய வார்த்தையில் மூழ்கடிப்பாள்,
எதிர் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டு அம்மா என கொஞ்சுவாள்..
கண்ணாலே பேசி என்னை பேசமால் இருக்க செய்வாள்..
கையடக்க கணினி முன் கண்ணாலும் ,குரலாலும் மகிழ்விக்கிறாள்.....
அவள் ஸ்பரிசம் இன்றி ..
அதிக பிணையதொகை கட்டி பராமரிக்கும்
முதியோர் இல்லத்தில் இந்துவாகியநான் இந்தியாவில்
Subscribe to:
Post Comments (Atom)
வார்த்தையால் விவரிக்க முடியாததது........ஸ்பரிசம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்பரிசம் அருமை,,,விவரிக்க வார்த்தைகள் இல்லை,
ReplyDeletearumai Thamizh..:)
ReplyDeletethank u frnds
ReplyDeleteமிகவும் அருமை தமிழ் ...அம்மாவின் ஸ்பரிசம் ஈடு இணை உண்டா/..........
ReplyDeleteமிகவும் அருமை தமிழ் ...அம்மாவின் ஸ்பரிசம் ஈடு இணை ?.....
ReplyDelete