வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Wednesday, March 21, 2012
"சாமிக்கு பூ"
செம வெயில் இன்னைக்கு சொல்லிட்டே வேலைக்காரி உள்ளே வந்தாள்..
அம்மா உங்க மொபைல் அடிக்குது ....எங்க இருக்கீங்க கத்தினாள்...
அத கொஞ்சம் மாடிக்கு எடுத்துட்டு வாயேன் ..
அந்த ரூம் ல சரியா சிக்னல் இருக்காது ...சொன்னங்க பார்வதியம்மாள்
வேலைக்காரி முனகிக்கொண்டே கொண்டு போனாள்,,
இப்போ போடற வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு சொல்லிட்டே
பார்வதியம்மா உள்ளே வந்தாங்க..
இந்த வருடம் தான் வெயில் அதிகம்னு தொலைக்காட்சி அலறியது ,
எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....
ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,
நாங்க பார்வதியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...
அந்த பிரச்னை டிவிசெய்தில மட்டும்தான் கேட்போம்
பார்வதியம்மா வீடு சூப்பரா இருக்கும் .
நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி
ரொம்ப அழகா இருக்கும் ...
பார்வதியம்மா சுத்தமா வைத்திருப்பாங்க வீட்டை..
நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட
வேலைக்காரிய விட்டு சரி செய்ய சொல்லுவாங்க..
எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ...
ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு
ஒண்டு குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில
இருந்தோம் ,அங்க காத்து கூட சரியா வராது ...
நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்
போடுவதற்கு வந்தாங்க...எங்களை காலி செய்ய
சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளுக்கு ஒரு
மூலையில இருந்தோம் ...............
எங்க பெரியப்பா வீட்டுக்கு வந்தாங்க இப்படி நகரத்தில
இருந்து என்னத்தை கண்டீங்க....
பெரியவளுக்கு இருக்க வீடு கூட இல்லை ...ம்ம் ...
காலம் அப்படி போய்கொண்டிருக்கு ,என்ன செய்ய....
என்னோட பேச்சை கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட
பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்கு கூட்டிட்டு
வந்திட்டார் ..
அழகான கிராமம்,அமைதியான ஊர் ..அதிலும்
நாங்க இருக்கிற பார்வதியம்மா வீடு நினச்சாலே ரொம்ப
சந்தோசமா இருக்கு ..
கதவை திறக்கிற சத்தம் , அம்மாதான் வர்றாங்க ..
கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான்
திரும்ப போயிட்டு சீக்கிரமா வரேன்....
இல்லேன்னா பார்வதியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு
போய்டுவாங்க ....
அப்புறமா உனக்கு பிடிச்ச தேன் கிடைகாதுடா
என்றாள் ,என் அம்மா கீச் கீச்...
கொஞ்சு மொழியில் ...
அட என்ன பாக்கறீங்க ...இந்த பசுமை மாறா
கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..
இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...
இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை
போன்ற வர்களுக்காக "செல் கோபுரத்தை"
தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க சிட்டு குருவிகள்தான் "
வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கதை
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் எழுத்து நடையை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
கீச் கீச் கீச்...சிட்டுக் குருவியின் குரல் சோகமாக இழைகிறது...நாம் முன்னேற அவை மறைந்து கொண்டிருக்கின்றன என்பதை நயமாக விளக்கியுள்ளீர்கள்...
ReplyDeleteநன்றி ilango சார்
Deleteஅருமைடா தமிழ்.. உன் கதைகள் எல்லாம் வித்யாசமான பாணியில் இருக்கின்றன.:)
ReplyDeleteநன்றி தேனக்கா .
Deleteசிட்டுக்குருவி என் செல்லக்குட்டிம்மா.அதிப்ப்ற்றிய கதைன்னு சொல்லலியே அருமை இன்னும் கூடக்கொஞ்ச்சம் சேர்த்துஅழ்கியலாகொண்டுவரலாம்,ரொம்ப அழ்கும்மா தமிழ் கதை.வாழ்த்துக்கள்
ReplyDeletemm.aamam ...chittu kuruvi endru mudhalilae solli irunthaal innum azhagaiya nadai kondu vanthirukaalm ma..but edhirpaarpu thanae..idhu..
Deletethank u
aam sir...naangal konjam koduththu vaithavargal..indru varai tharisikkiren chittu kuruvigalai..
ReplyDelete:-)
ReplyDelete