Thursday, January 23, 2014

கருப்பு திராட்சை




படபடவென்று சிறகு விரித்து கோர்த்துக்கொள்ளும் இமைகள்..! 

நிற்க மறுத்து நாட்டியமாடும் இதழ்கள்..! 

இன்னிசை மீட்டிடும் இதயம் இயல்பை மறுக்கும்..!

சிலிர்க்க செய்யும் இளம்தென்றல் ..!

அந்திமாலையின் சிகப்புபடர்ந்து கொள்ளு(ல்லு)ம் என்னில்..!

உனைக்கண்டதும்..!


எனைக் கண்டதும் உன் காதோர வியர்வையும்

உன் காதலை சொல்லும் என்னிடத்தில்

சந்தோசத்தில் மின்னும் வைரமாய்

மலரை ஈர்த்த வண்டாய் மையல் கொள்ளுவேன்

உன்னிடத்தில்..!

தத்தையென கொஞ்சிபேசும் இதழ்வருடி என்னிதழ்தேனால்

நிரப்புவேன்..!!


தொடுதலில் சில்லென மின்னலாய் பரவும் ஒளிவெள்ளமும்,

மூச்சுக்காற்றின் இணைதலில் முடிவற்று மெளனநிலையில்

சட்டென விலகி செல்லும் உன் உயிரின் ஈர்ப்பும் வேகமும்

தழுவிடும் தென்றலின் தீண்டலில் அறிகிறேன்..!!

உன் இடைவெளியற்ற அன்பின் இருக்கம்

வெண்மேகத்தில் கனிந்த கருப்பு திராட்சையின் அசைவில்..!!

அறிவேன் உன் எண்ணத்தை..!

இனி பிரிதல் என்பதே இல்லை நம்முள் இருக்கிக்கொள்கிறேன்

இடைவெளியின்றி….!!



**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

2 comments:

  1. அருமை... இப்படித்தான் இருக்க வேண்டும்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete