நீயென் வாழ்வினில்….
நின்னை நினைப்பதில் என் வாழ்வில்
இன்பம் மட்டுமே நிகழ்கிறது என்பதை
நின் மனம் அறியுமோ தென்றலே!
உன்வரவை என்னுயிர் கண்டதும்
உள்ளம் விருப்பத்தில் இழைய
நிலவும் ஒளிர்கிறது என் வண்ணமாய்!
உலாவும் மானென துள்ளி
மகிழுந்திடுவேன்! மன ஓடத்தை ஓட்டி
மகிழ்ந்திடுவேன்! தேன் துளியில் மூழ்கும்
வண்டென சுற்றி பறந்திடுவேன்!
நிலவை மொய்க்கும் விண்மீனாய்
கீற்றை தழுவி சலசலக்கும் தென்றலாய்
முப்பொழுதினிலும் உன் மனதை வென்ற
களிப்பினில் சின்னப்பறவையின் கீச்சுக்குரலாய்
பாடி ஆடித் திரிந்திடுவேன்…!!
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்
ரசித்தேன்...
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்...