நீ வரும் நேரத்தை காணும்பொழுதில்..!!
திசைகள்முழுதும் பொன்னிறதேகமாய் தகிக்கும்
அந்திப்பொழுதும்மயங்கித்தான் போகும்.!!
புன்னகையில் பூத்த செவ்விதழாய் பூரித்துப்போகும்
அந்தியைக்கண்ட காரிருளும் கவிழ்த்து போட்ட
அமாவாசை நிலவாய் தேகம்குலுங்க புன்கைக்கும்.!!
வண்ணநிலவாய்..,முழுமதியாய் ..., செவ்வந்திப்பூவாய்..,
தன் அழகையெல்லாம் சேமித்துவைத்த மாதுளங்கனியாய்..,
எனை ஆட்க்கொண்டு வாழ்வை சித்தரிக்கும் வண்ணமாய்..,
காணும் பொழுதின் ஊற்றாய் ..,
பொங்கும் உள்ளத்துஎண்ணம்தனை கல் கொண்டு
வடிக்கும் சிற்பமாய் ..,
எழுத்தில் வடித்தாலும் நிறக்காமல்பொங்கி வழியும்
எரிமலை ஊற்றின் கணலாய்,
தழுவிச்செல்லும் நதியின்கூழாங்கற்களாய் ,கணநேரத்தில்
மாயைபுரியும் மின்னாலாய்,
யெளவனமாய் ஒளிர்கின்ற விண்மீனாய்.., தகிக்கும்
உள்ளத்தின் இன்பம் கூட்டும் இளந்தென்றலே..என் காதலியே!!
வானின்மீது மேகம் கொண்ட அன்பாய் ,
பூவின்மீது மோகம் கொண்ட சில்வண்டாய் ,
ஒளிரும் தீபத்தின் மீது மையல்கொண்ட எண்ணையாய்,
பூமியைதழுவ நினைக்கும் வானத்தின் எண்ணமாய்
என் விழியிற் அந்திப்பொழுதில் உனைகாணும்போது
களிக்கொள்கிறேன்…..!!
**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))
என்னே அழகான ரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி....
ReplyDelete