Monday, January 20, 2014

உன்னீர்ப்புவிசையெனும் சக்தி


வீட்டின் முற்றத்து நடுவே மணம்வீசும்

புகைசூழ் வெளியில் காத்திருக்கையில் கண்டேன் உன்னை..

நிதமும் உன்னை காண காத்திருப்பது

சூழும் புகைகூட அறிந்துவிட்டது நீ அறியாயோ?

கண்மூடி யோசிக்கிறாய் விழி திறந்தால் விட்டுவிடுவாய்

என்னை உனக்குள் என்றுவிழிமூடுகிறாயோ?

காத்திருக்கிறேன் விழியினோரம் இமைவேலிகளுக்குள்

சிக்கிய சிற்றெரும்பாய்…

விழித்துவிடு என்னை உனக்குள் கோர்த்துவிடு..!!

பின்னர் யோசிக்கலாம் இணைந்து விழிமூடிவிரல்கோர்த்து

உன் ஒரு விழிச்சொல்லுக்காக அசையாமல்

அசையும் பூமியில் காத்திருக்கிறேன்

உன்னீர்ப்புவிசையால்

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)

5 comments: