Wednesday, January 22, 2014

காற்றே என் முதற்காதலி




உன் வசீகரத்தை என்னிடம் சேர்ப்பிப்பாள்

உன் புன்னகையை எனக்குள் விட்டு செல்வாள்

உன் சுவாசத்தை, உன் வாசத்தை எனக்குள் தேனாய்

நிரப்புவாள்..!!

என் மெய்தொட்டு வந்த அவள் உன்னை முழுதுமாய்

தீண்டுவாள் செல்லமாய் ரசிப்பாள் ..!!

யாரும் அறியா கால்களிரண்டில் முகம் புதைத்து உன்

விழிவழியும் கண்ணீரையும் ஈரமாய் என்னிடம் சேர்ப்பிப்பாள்..!!

நீ தனியே பேசிக்கொண்டிருப்பதையும் அறிபவள் அதை

செவிமடுப்பவள்!

காத்துநிற்கும் பொழுதுகளில் கோபம் கொண்ட உனை

தடுத்துஆட்கொள்பவளும் இளந்தென்றாலாய் உனை

தீண்டியவளும் , உன் கார்க்கூந்தலை தழுவி உன் அழகை

ஆராதிப்பவள்!!

தீயின் வெட்கையாய் உன்னை சுற்றி சுழல்பவள்.!!

உனை குளிர்விப்பவளும் அவளே!! நீ அறியா உன்னை

முழுதும் அறிந்தவள் ..!!

என்றாவது யாராவது உனக்காக காத்து இருக்கிறார்களா?

உன்னிடம் என் வாசத்தை சுமந்து வரும் காற்றிடம் கேள்

பதிலேதும் கூறாமல் மெல்ல ஒரு தீண்டலை மட்டுமே  விட்டு

செல்லும் காற்றுக்கு யாசிக்க தெரியாது யோசிக்கவும் தெரியாது

ஆம்! உனை  முழுதும் அறிந்த காற்றை நான் காதலிக்கிறேன்

என் முதற் காதலியாய் ..!!




2 comments:

  1. மிகவும் அருமை... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete