நீள்விழியாள் நிலம் நோக்கி நடக்கயில் , நாணம் சுமந்த
கன்னம் பொன் வண்ணம் அந்தியிலிணைய
காரிருளை உட்கொண்ட கார்க்கூந்தலும் காற்றில் நெகிழந்து
கழுத்தின் வளைவுகளில் பரவ
கொலுசின் மெல்லிய ஒலியுடன் கூடிய தாளத்துடன்
இணைந்த நடையும் கொண்டவண்ண மயிலாள்,
விழிமுன்நிற்கும் எனை கண்கொண்டு காண மறுத்து,
வளையல் சத்தமிட்டு வாவென்று அழைத்த பதுமையானவள்,
கள்ளப்புன்னகையை கைகொண்டு மறைத்து ..!!
என்னில் நெருங்குதற் பொருட்டு நின்று நின்று வேகமாய்
செல்லுவாள்..!
எட்டி பிடித்து என் கைகொண்டு இடைதுவள இருக்க
மாலையில் மலர்ந்த அந்திமந்தாரையாய் பூத்திருந்த
கன்னக்கதுப்பினில் மெல்ல முத்தமிட்டு ,விட்டுவிடு
என விரட்டும் கைகளுக்கு மத்தியில் வேணாம் எனக்கூறும்
விழிகள் இரண்டும் பின்னிபிணைய, உன் இதழ்நெருங்கிய
என்னுள்
புதுப்புனல் மின்னாலாய் பாய ஈரம் சூழ் இதழ் மெய்யின்
நெருக்கத்தில்
வறட்சியால் தவித்து தாகத்தின் தீரலில் தொத்துக்கின்ற
தத்தையாய் தோளினில் துவண்ட
மான் விழியாள் மாலைப்பொழுதினில் ஈன்ற முத்தம் மெய்தானே ..!!
என கிள்ளிபார்க்கையில் மெய்தான் என்றது உணர்வு..!!
**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))
இனிமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...