இருபுறம் திண்ணைகொண்ட சாலையினில்
இருகை வீசி இளந்தோழிகள்சூழ் செல்லும் மெல்லியளால்
இளந்தென்றல் தீண்டியதில் சிலிர்த்தவள்..! நாணத்தில் சிவந்தவள்,.!
புல்லின் வளைதலை கொண்ட இடையுடையவள்
பூவின் இதழ்மென்மை ஏற்ற மென் நடையுடையவள் ,
காணும் என் விழி இமைக்க மறுத்ததில்.
எனக்குள் இசையாக்கிவிட்டவள்
கூட்டம் சூழ் தோழிகளின் மத்தியில் மெல்லியஇடையினில்
கையிருத்தி நிமிர்ந்து நோக்கியவள்
தன் அகன்ற கரும் வண்டென விரியும் விழிக்குள்
விழுங்கிக்கொண்டாள் எனை ..!!
நிலம் நோக்கி புன்னகைத்தவள் கூட்டதில் சிலீர் சிரிப்பினூடே
கலந்து மறைந்தாள்..!!
அலையும் விழிகளும் தவித்த இதழுமாய்
அங்குமிங்குமாய் என் பார்வை தவிக்க திண்ணையோரமும்
தினம் தினம் காத்திருக்கு எனக்காக அவளை காண ..!!
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்
ரசித்தேன்... காத்திருப்பது என்றும் சுகம் தான்...
ReplyDeleteவாழ்த்துக்கள்..,.
thank u sir....
ReplyDelete