நிஜம் உணரும்
தருணம்
விழிவழிந்த
கண்ணீர்
வழி தேட, மன
விழிகள்
அணிந்த முகமூடியை
உடைத்தெரிகிறாய்..
கோர்க்கிறாய், உன்
நினைவுகளை என்னுள்...
வருவோரும்
போவோரும்
சிந்திய
வார்த்தைகள்
வாசலில் கோலமாய்
வார்த்தது போக
வஞ்சியுன் சுவாசம்
தேடி உன்னருகினில்
உணர்ச்சிமயமாய்
உன்முன்நெற்றித்தொட்டு
தழுவிய விரல்கள்
மெல்ல கீழிறங்க
பாய்மரக்காற்றாடி
போல
அலையும் விழிகள்
இமைகோர்த்து பிரிய
மனமின்றி பனித்திருந்தது
உன் மூக்குத்தியின்
ஒளிவெள்ளத்தில்
நானறிய
பிறர்க்கு புரியாத
நிலை
சிந்தையில்
சில்வண்டென
ஓடிய உணர்ச்சிகள்
நிதர்சனத்திற்குள்
எனை
அழைக்க காதலாய்
கவிதையாய்
எனக்குள்
கோர்த்த உனை
உணர்ச்சிகளற்ற
உருவமாய் பார்க்க
மறுத்த
என்னிலை நீ
அறிவாய்..
உடைகிறேன்
விழிகரைஉடைந்து
வெள்ளத்தில்.மூழ்குகிறேன்
தனியே .....
**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)
நினைவுகள் அப்படித்தான்...
ReplyDelete