Thursday, January 9, 2014

காதல் சிறைக்குளே...



காதல் களத்தில் நடந்து
செல்லும் மென்மனது
அரங்கேற்றுகிறது
அன்பை ...
களம் முழுதும்...அன்பை ...
பறைச்சாற்றுகிறது 
துள்ளுகிறது ,அன்பினில் 
இறக்கை முளைத்த 
குதிரையாய் காதல்....

இங்கே களமும் களமிறங்க
கற்றுதேர்ந்த வில்விதையின்
வித்தைகளை முடுக்குகிறது
காதல்..

நித்தமும் சேர்ந்திருக்கும்
மகிழ்ந்திருக்கும்
அன்புற்றிர்க்கும்
அன்னையினை,
தந்தையினை
துடிக்கும் சொந்தமதை
சற்றே புறம் தள்ளி

புது மலராய் (அவன்/அவள்)
அரங்கேற்றும்... அதிசய
நிகழ்வுகள் அடையும்...
காதல் களத்தினில் 
மொத்த சொந்தமும் 
சிறைக்குள்ளே.....

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)

3 comments:

  1. அன்பில் துள்ளட்டும்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. "மொத்த சொந்தமும்
    சிறைக்குள்ளே....."

    உவமை மிகஅருமை .......

    ReplyDelete