தேடித்தான் அலைகிறது மனமெனும் ஓடம்
சந்திப்பில் அலைபாயும் எண்ணங்களை
இடைவெளியில்லாமல் இளைப்பாற்ற
என்றாவது ஒரு நாள் சந்திப்போம் எனும் சூழலில்
மெல்ல ஓடும் ஓடமும் நினைவு அலைகளில்
கவிழ்த்துப்போடுகிறது நிதர்சனத்தை
பொழுதுகள் முச்சூட்டிலும் காதலை
எண்ணித்தவிக்கும் மனஓடம்
நிற்காமல் சுற்றிசுழல்கிறது உன் நினைவுகளில்
காணாமல் இருந்த கணங்கள் இலைஉதிர்தலைபோல்
நீதானோ அங்கே என்று கண்ட கணத்தில்
பச்சென்று ஒட்டிக்கொள்கிறது ஓடத்தில்
துளிர்த்த இலையின் சாயலில் கைக்குள்
பிஞ்சு பிள்ளையை இருக்கிக்கொண்டு பெட்டியை இழுத்து
செல்லும் மீசைக்காரனிடம் என்னைதான் எங்கே
என்று கேட்கிறது போல ஏதோ? கேட்கிறாய்…
விழிதடவி தொடர்ந்துதான் வருகிறேன் உனை!
என்றாவது உன் நினைவுபொழுதினில் என்னை
தேடியிருக்கிறாயா?
வேகமும் துடிப்பும் மன ஓடத்தில்கூடுதலாக
நெருங்கி செல்கையில் நெஞ்சின் நினைவுமுகம்
என்காதலி..!! இன்று இவளில்லையென்று
தெரிந்த கணத்தில் காத்திருந்த மனஓடமும்
நெருஞ்சி முள்ளில் சிக்கி சிதைகிறது
நினைவுஅலைகளால் நிரம்பிய ஓடத்தில்
மூழ்கித்தான் போகிறது என்முதற்காதலும்
நீ இல்லை என்று தெரிந்த பின்….
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**
/// நெஞ்சின் நினைவுமுகம் என்காதலி...///
ReplyDeleteஅருமை... முதற்காதல் மறக்க முடியாதது தான்...
நல்லதொரு கவிதைக்கு வாழ்த்துக்கள்...
மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html
ReplyDeleteமிக்க நன்றி சார்
ReplyDelete