Tuesday, January 7, 2014

காற்றின் தழுவல்....



நங்கையுன் இடை
தழுவிய காற்றின்

தழுவலில் நளினம்

நாணலிடத்தில்......
நதியின் வளைவினில்
நான் காத்திருக்கும் பொழுதினில்...


கரையுடைந்த வெள்ளமாய்
சுழன்று போகும் 

நினைவலைகளுக்குள்

கவிழ்ந்து கிடக்கிறேன்...
மெளனமாய் நிஜத்தினில்...


மெளனப்பூக்களை 
சுமந்து வரும் மெல்லிய 

இதழோரம்.. 

தவித்து,துடித்து
ஏங்கும் வார்த்தைகளும்
கரைந்துதான் போகிறது..
காத்திருக்கும் பொழுதினில்....
உனை கண்ட கணத்தினில்...


கணன்ற நினைவலைகளை
கைவிரல் கோர்ததணைக்க

காற்றின் தழுவலில்

புன்னகைக்கும் நாணல் ...




2 comments: