Tuesday, January 7, 2014

கருப்பு



கனவுகள் கலைய குரல் கொடுத்த அம்மாவை “போங்கம்மாஎன சொன்னான் கலையரசன்.என்னம்மா, இன்னும் கொஞ்சம் நேரம் விட்டிருந்தா முழுசா அந்த இடத்துக்கே போய் என்ன இருக்குன்னு பார்த்துட்டு வந்த்திருப்பேன்மா, எழுப்பிட்டீங்களே,ம்ம்ம்ம்என முனகி கொண்டே எழுந்தான் கலை..
நேரமா எழுப்புங்க அம்மான்னு சொல்லிட்டு,இப்போ இப்படி சொல்றியே கலை, அம்மா பேசிக்கொண்டே காபியை நீட்டினாள்.
இந்த பழக்கத்தை நீ விடும்போதுதான் எல்லாமே சரியாகும், இரண்டு வருஷம் அத்தை வீட்டில தங்கி படிச்சதுல உன்கிட்ட வந்த கெட்ட பழக்கம் பெட்காபிதான் , இடைமறித்த கலை ப்ளீஸ்ம்மா, எப்போ பாரு இதையே சொல்றீங்க.
நான் வேலைக்கு போக ஆரம்பித்தே 2 வருஷம் ஆச்சி,இன்னும் படிக்கிற காலத்தை பத்தியே பேசறீங்களேம்மா.“நேரமாகுதும்மா நான் கிளம்பறேன் காபி கப்பை கொடுத்துவிட்டு நேராக பாத்ரூமில் புகுந்தான் கலை..
வெகு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரியின் ஓரத்தில் இருந்த சிரிக்கும் புத்தாவின் அருகே ஒரு சின்ன அழகான பைபரில் ஆன கைகளை எடுக்கும்போதே ஏதோ அவன் கையில் கருப்பாய் ஒட்டியது.
அதன் மீதிருந்த  கார் சாவியை எடுத்த கலை,அம்மாவிடம் கொடுத்து சுத்தபடுத்த சொன்னான்.
வாஷ்பேசினில் கையை க்ளீன் செய்த அவன், வரேன், மா....இன்னிக்கு மீட்டிங் நைட் லேட்டாகும், அப்பா காலையில வர நேரத்தை கேட்டு எனக்கு போன்ல சொல்லுங்க.
சரிம்மா, பத்திரமா போகணும் பார்த்து போகணும்னு சொல்ல யார பார்த்துன்னு, அம்மா கிட்ட கலை கேட்க, எப்பவும்  கிண்டல் கலை உனக்கு சொல்லி கொண்டே வாசல் வரை வந்தாள்.
கேட்டை.உள் பக்கமாக  திறந்த கலை, காரை எடுக்க வர “ச்ப்என்ற சத்தத்துடன் கருப்பாய் வந்து விழுந்தது காலடியில்,  அய்யோ....கலை சத்தமிட
என்னப்பா, என அம்மா வந்து பார்க்க “ஒத்தை கால் காக்கா’ , சரி, கலை  கொஞ்சம் நேரம் இருப்பா, 5 நிமிசம் கழித்து கிளம்பலாம் என் சொன்ன அம்மா, என்னாச்சு இந்த காக்காவுக்கு, எப்படி எப்படி..என நிறைய கேள்விகளுடன் பழைய செய்திதாளை எடுத்து வந்தஅம்மா ,அந்த காகத்தை பேப்பரோடு சேர்த்து  பிடித்து வாசலில் இருக்கும் குப்பை தொட்டியில் போடபோனாள்.
அம்மா உள்ளே வரவும் கேட் சாத்திக்கோங்கம்மா, 5 நிமிஷம் ஆகிடிச்சி நான் கிளம்பறேன் என சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான் கலை.
தினம் மதியம் 12 மணிக்கு வர காக்கா தான் இது என அம்மா சொல்லவும்..,அதை கேட்டுக்கொண்டே கிள்ம்பினான் கலை..
புளுடூத்தைகாதில் போட்ட கலை மிதமான வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தான். இரண்டு தெருக்கள் கடந்து சாலையை  அவன் தொட ,ஆள் அரவமற்று இருந்தது  சாலை...
இன்று ஒர்க்கிங்க் டே தானே ,லீவு இல்லியே என தனக்குதான்பேசிக்கொண்டு மொபைலை எடுத்து தேதியை பார்த்தான்,அது13ஐ காட்டியது,வெள்ளிக்கிழமை  என்றது..
ஈஸ்ட்கோஸ்ட் சாலை என்பதால் இரு பக்கமும் மரங்களடர்ந்து, சாலை ரம்மியமாக இருந்தது. எதிர்புறம் சாலையில் வண்டிகள் போக ஆரம்பித்தது.
தானியங்கி சிக்னலில்  நின்று கிளம்ப , வண்டியை யாரோ தட்டியது போன்ற  சத்தம் அப்படியே முன்னே சென்ற கலை வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்..வண்டியிலிருந்து இறங்கிய கலை இப்படியும் அப்படியுமாய் பார்க்க ,கையில்  குச்சியை எடுத்துகொண்டு ஒரு பாட்டி வேகமாக வந்து கொண்டிருந்தது.
“உன் வண்டியை யார் அடிச்சான்னு பாக்கத்தான் நிறுத்தனியா? நான் தான்!! ஏன்? என்கிட்ட பேசல?.. என்கிட்ட பேசல..? என திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு வண்டியை கையில் இருக்கும் குச்சியால் அடித்து கொண்டிருத்தது.
என்ன வேணும் உனக்கு என கலை கேட்க, நிமிர்ந்து பார்த்த பாட்டி,
காசு கொடுகாசு கொடு “ன்னு கேட்க,ஹ்ஹ்ஹா ஹாஹ..நீ அடிக்காமயே பேசிட்ட...பேசிட்ட... என சிரித்துக்கொண்டே கையை நீட்டியது..
இரு தரேன் பாட்டி ,என சொல்லிய கலை பாக்கெட்டில் கைவிட,வந்த ஒரு 5 ரூபாய் காயினை எடுத்து கொடுக்க ,அதன் உள்ளங்கையினில் கருப்பாய் ஒரு தழும்பா,அல்லது மச்சமா என அவன் யூகிக்கும் மூன்னே வெட்டென கையை மடித்துகொண்டு வேகமாய் போக ஆரம்பித்தது.

அவனை கடந்து சென்ற வண்டியில் இருந்தவர்களெல்லாம் அவனை பார்ர்கின்ற உணர்வு கலைக்கு...மீண்டும் வண்டிக்குள் ஏறிய கலை,கிளப்பமனமின்றி அப்படியே அந்த பாட்டி போவதையே பார்த்து கொண்டிருந்த கலை,தன் கையை கவனித்தான் தன் உள்லங்கையின்லும் ஏதோ கருப்பாய் தென்பட..இது எப்படி என யோசிக்கவும், மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது.
அப்பாவிடமிருந்து கால் வர, எடுத்து  ஆன் செய்தான் கலை,அம்மா கிட்ட இப்போதான் பேசினேன்,நீ கிளம்பிட்டதா சொன்னாங்கப்பா.
நான் நாளை காலையில வரேன்ப்பா, நீ 8.50ஏர்போர்ட்டுக்கு வந்திடு ,ஆபீஸ்போனதும் என்கிட்ட பேசுப்பா என சொல்லி அப்பா கட் செய்ய,அவன் விழிகளிலிருந்து “பாட்டி மறைந்திருந்தாள். நேரமும்கூடிக்கொண்டேவண்டியை வேகமாக கிளப்பிய கலை, வேகத்தை குறைக்காமல் செல்ல ஆரம்பித்தான்.நேரத்துடன் போக வேண்டுமே என்ற எண்ணத்தில்.. சாலையில் வாகனங்களில் வரத்து கூடிப்போனது.
ஒருவழியாக ஆபீஸை அரைமணி பொழுது  தாமதமாக வந்தடைந்த கலை, ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு காரை பார்க் செய்துவிட்டு நேராக  பேஸ்மெண்டில் லிப்ட்  நோக்கி செல்ல, ‘யாரோ அழைத்தது போன்ற உணர்வு, திரும்பி பார்க்கயாருமில்லை.
என்னவோ இதயம் பட் பட்டென வேகமாக அடிக்க சில்லென ஒரு தாக்குதல் அவன் மீது,என்னவென்று யோசிக்கமால் வேகமாய் லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் கலை.
வியர்க்கவேயில்லை வேகமாய் நடந்தும். குளிரை உணர ஆரம்பித்தான் கலை.
ஏதோ நடந்து கொண்டேஇருப்பது போல உணர்வு அவன் நடக்க நடக்க லிப்டும் நகர்ந்து செல்வது போல தோன்றியது...
சீக்கிரம் கிளம்பியும் ஆயிரம் தடங்கல் இன்று வேலைக்கு வருவதற்குள் என்று யோசித்த கலைக்கு, முன்பைவிட இப்போது அதிகம் குளிர ஆரம்பித்தது.
தன்னையே கிள்ளி பார்த்தான் கலை. இது நினைவுதானா இவ்வளவு வெயில் காலையிலே ஆனால் எனக்கு மட்டும் குளிருகிறதே .
லிப்டை நெருங்கிய கலை, மயங்கி சரிந்தான். அதிபயங்கரமான சத்தம் ஒன்று ஏதோ நிகழகூடாத ஒன்று நிகழ்ந்ததை போல.காரை நிறுத்திவிட்டு அவனை தொடர்ந்து வந்த ரகு இறுக்க காதை மூடிக்கொண்டு ஓடிவந்தான்.
லிப்டில் இருந்து புகையும் அதை தொடர்ந்து ஒரு சிலர் ஓடி வருவதையும் கண்ட ரகு என்னவென்று விசாரிக்க தெரியல என்று மட்டுமே பதில், அதை தொடர்ந்து சார், ஓபன் பண்ண முடியல சார்,மெயின் ஆப் பண்ணியாச்சு, அதுக்குள்ள தீயணைப்பு வண்டியின் சத்தம்.....
கட்டிலில் மெல்ல கண்விழித்தான் கலை.அவன் அருகினில் அப்பா..இப்போ எப்படியிருக்க கலை..., நீங்க எப்போ வந்தீங்க ப்பா,என்னாச்சுப்பா, எனக்கு!!! ஆச்சரியமாய் கலை கேட்க ,அம்மாவும்  ரகுவும் உள்ளே வந்தார்கள்
டேய் கலை  நம்ம ஆபீச் லிப்ட்ல ப்யர் ஆகி அதில இருந்த 4 பேரும் இறந்து போயிட்டாங்க டா. அதனோட கேபிள் கட் ஆகி பேஸ்மெண்ட் க்கு நேரா வந்து மோதி நின்னு இருக்கு...
ஒரு 5 நிமிஷம் முன்ன வந்திருந்தா நீயும் நானும் அதிலதாண்டா போயிருப்போம்னு ரகு சொல்ல, சிலிர்த்தது கலைக்கு...
ஆஸ்பிடலை விட்டு அனைவரும் வெளியே வர, மருத்துவமனை யூனிபார்ம் அணிந்த பெண் ஆன்டி என்று  அம்மாவிடம் ஓடி வந்தாள். வா,வாம்மா..கருப்புஇன்னைக்கு உனக்கு மத்தியானம் டியூட்டியா? என்று கேட்க ஆமாம் மா..இருங்க மா உங்க புள்ளைகிட்ட பேசிட்டு வரேன்,என்ன கலை? இப்படி பயபடுத்திட்ட எல்லாரையும்., 4 நாளா உங்க அம்மா ரொம்ப கஷ்டபட்டுட்டாங்கப்பான்னு சொல்லிட்டு,பேச்சை கேட்கலஇல்ல என  மொட்டையாக சொல்லிவிட்டு உள்ளே போக எத்தனித்தவளை, இங்க வாம்மா ,கருப்புஎன அழைத்த அம்மா அவளிடம் 100 ரூபாயை கொடுத்து உன் பிள்ளைக்கு ஏதும் வாங்கிக்கொண்டு போ என சொன்னாள்.
அவளையே கவனித்த “கலைஅவள் கையினில் கருப்பாய் ஏதோ ஒன்று  தெரிய வர, நினைவுகள்  பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. அந்த கருப்புதான் என்னை காப்பாத்தி இருக்கு என தனக்குதானே சொல்ல, என்ன ,கலை நீயே பேசிக்கிற.
   அம்மா கேட்க ஒண்ணுமில்லைம்மா என சொல்லி  காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் கலை….சில்லென ஒரு தாக்கம் அவனுள்...சுழற்றியடித்தது காற்று..சிலிர்த்தது அவனுக்கு...

http://inandoutchennaifortnightly.blogspot.in/

*****************

2 comments:

  1. nice story but finishing edhir paartha alavukku illa ,nalla ezhudhi irukkenga thadangal varum bodhu andha velaiya thalli poduradhu nalladhukkunu elimaiya solli irukkenga paaratukkal

    ReplyDelete