மனித தன்மையே அற்ற பலர் நச்சுத்தன்மையை
கொண்டு
பதர்களை போன்று நம்மில் உழல்வதை
கண் கொண்டு கண்டும்
காணாமல் இருந்துவிடாதே !!
பிஞ்சு மனம் அறியாமல் கள்ளமில்லா
சிரிப்பை உணராமல்
கை கொண்டு அணைக்கும் கட்டவிழ்த்த
காளையவன்!!
கண்அறிந்தும் மனம் இருக்க மூடிய
மூடனவன்!!
மானிட தன்மையற்றவன் காமத்தை
வெளிப்படுத்தும்
மரக்கட்டையவன்!!
மானிடர்களே கண் கொண்டு கவனியுங்கள்!!
விழி கொண்டு படியுங்கள்!! தன்மைக்கு
ஏற்றுவாழும்
மனிதனும் சுயநலத்தில், விழி
தெரிந்தும் மூடனாய் போகலாம் !
புவிஅறியா பிஞ்சுகளுக்கு புரிய
வைப்பதும்,
நம்பிக்கை அளிப்பதும் பெற்றோரின்
சிந்தையிலே
உதிர்க்கவேண்டிய முத்தல்லவே!!
நல்ல தொடல்,கெட்ட தொடல் புரிய
வைப்பது,
வாழ்வை புரிய வைக்கும்.. வாழ்வை
இனிமையாக்கும்
இளந்தளிர்களுக்கு..!! கணம் கருத்தினில்
கொண்டு செயல்படும்
இளசுகளுக்கு ஏன் ? எதற்கு? என்ற
கேள்வியதனை
மறந்து ஆயிரம் மனித பயிர்களுக்குஇடையே
வாழும்
ஒரு பதரின் சிலுசிலுப்பும் தோன்றலும்
உடுத்தலில் உடையில் உயர்வும்,
ஏமாற்றுவதில்
முதன்மையாய் செல்லும் பாதையிலே
நிதமும்
நித்தமும் காத்திருப்பதும் தேவையற்ற பேச்சுக்களும்
சுண்டியிழுக்கும் கண்ணாடி பார்வைகளும்
கால ஓட்டத்தில் கண்ணுக்குள்ளே
வேறேதும் அறியா
மயக்கம் கதாநாயகனாய் கவர்ந்திழுக்கும்
வயதின் இனக்கவர்ச்சியால்!!
காணும் இளசுகளை,கண்டதும் காதல்
எனும் போதை,
கள் அருந்தாமலே கடலுக்குள் கவிழ்த்து விட, கரை அறியாகாதலர் தம்
மூழ்கிக்குளித்து முத்தெடுத்து, மூன்றென்ன ஏழுலகமும் அறிய
முட்டி மோதியென்ன.. முழுதும்
முடிந்த பின்
முக்கால் முழ கயிற்றில் முழுதும்
மறைந்து போவதென்ன..!!
வாழ்தலில் காதல் வேறு….இனக்கவர்ச்சி
வேறு இதை அறியா
பிஞ்சுபிள்ளைகள் தொலைத்தலில்
வாழ்வை தொடர்கின்றனர்..
கவனத்துடன் வாழ்தலில் வானம்
மட்டுமல்ல கடலும் உன் வயப்படும்..!!
**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))