சலசலக்கும் இலைகள் தழுவிய வாடைக்காற்று
அதன் தழுவலில் தேன் துளியென விழித்த மனது
சுழன்ற அந்தஒரு பொழுதின்உன்னுடனான
நினைவுகுமிழ்கள் மூச்சுக்காற்றில் பயணிக்க
அதனுடன் இணைந்து நானும் பயணிக்கிறேன்
அரவமற்ற அமைதியான நறுமணம் சூழ
உன்னுடன் இணையும் அந்த தருணம்
நான் என்னையிழந்த தருணம்..!!
கன்னக்கதுப்பில் பனிக்காற்றின் குத்தலில்
குழம்பித்தான் போய்விட்டேன் நிஜமா ?
நினைவா?
என்று புரண்டு படுக்கிறேன் வெற்றிடமாய் ..!!
வெப்பமாய் காற்று உள்ளேயும் வெளியேயுமாய்
விழித்து பார்க்கிறேன்….!!
புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறாய். நீ .!!
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeletethank u sir
ReplyDelete