மண்ணிலே வெண்நிலவு
அவளைபார்த்த விழிகளில்
வேறு ஏதும் தெரியவில்லை
ஏட்டிலே ஏதும் புரியவில்லை
ஏனிப்படி என ஏங்கியே தவித்தது
தயங்கியே நின்றது மனது
உயிர்கொடுத்தாள் என் விழிகளுக்கு
அவளையே சிறைக்கொண்டேன் என்னுள்
ஏகாந்த பொழுதுகளாய் அவளை
எண்ணிய நாட்கள் கடந்து சென்றது
காணவில்லை அவளை
நேசம் தான் என்னுயிர் என்றவள்
சொற்களில் போதையேற்றி
என்நெஞ்சில் பாட்டெழுதியவள்
மங்கிய மாலைபொழுதின் வேளையில்
மஞ்சள் மலர் சூட என்
மடி சாய வருவாளோ..!!
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்..
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி சார்...
ReplyDelete