உதிரும் இலைகளை மறந்த
தளிர்க்கும் மரங்கள்….
புதியதாய் உற்சாகத்தில்..!!
வெறுக்கும் விடியலை மறந்த
நிலவும் புதியதாய்..
ஒவ்வொரு நாளிலும்..!!
காற்றில் வீசியெறியப்பட்டு
மரம் மறந்த விதைகள் ..
புதுவிடியலை நோக்கி..!!
வண்டு துளைத்த பொந்துகளில்
தனை மறந்த காற்றும் …
புது ராகம் இசைக்க..!!
பருவத்தில் பொழியும் மழையும்
தனை மறந்து புது உற்சகத்தோடு..
உயிர்களை உயிர்பிக்க..!!
காத்திருக்கிறேன் எனை மறந்த..
உன்னை எதிர்க்கொண்டு..
புதியதாய் பூபாளம் இசைக்க..!!
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்..
No comments:
Post a Comment