Tuesday, March 25, 2014

பிஞ்சு மனம்.....




விரல்களில் சிக்குண்டு 
வெளிவர முடியா பிஞ்சு குழந்தை 
தவிக்கின்றது விளையாட ..!
தாயின் கைபிடித்து பள்ளிசெல்லும்
பிஞ்சு..!

மூச்சு முட்ட வியர்வை வழிய
மூட்டை தூக்கி எட்ட
நடைபோடும் பிஞ்சுகள்
தூக்கத்தில் சிரிக்கிறது..
ஒடி விளையாடுகிறது
கனவினில்  ……!

தாய் தரும் அனைத்தும் பள்ளி
இடைவேளையில்.! 
கடித்து மென்று தின்றுவிடுகிறது
குப்பைகூடைகள் ..!
வகுப்பறையில் நடந்து நடந்து
பழகும் ஆசிரியையின் பார்வை
மறைவினில்…!

காய்ந்த மையும்,கலைந்த தலையுமாய்
கண்ணிரண்டும் விளையாட்டு
மைதானத்தில் வட்டம்போட
முடிந்தது வகுப்பு....!
ஏங்கும் மனம் எதிர்பார்க்கும்
தாயின் வரவை..!

கைவிரலில் இணைந்த சுகம்
கதைப்பேசுகிறது தாயிடத்தில்
அவிழ்த்து விட்ட கன்றாய் ஆட்டம்
போட்டபடி ..!

  
காலையும் மாலையும் இல்லையெனில்
பிரிவென்பதே இல்லை
அம்மாவிடமிருந்து..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment