#உலக_கவிதை_வாரம்
ஏக்கம் வறண்ட விழிகள்
புதைமணலாய் புதைந்து
போகிறது பூத்த பூக்கள்..
வறண்ட வானமும் வெடித்த
நிலமுமாய் வாழுமிந்த
முகங்கள் சிரிக்க தெரியாத
சில்வண்டுகள்..
சிதைந்து போன தாயகக்கனவுகள்
துணிச்சலோடு உறவை என்றாவது
சந்திப்போம் என்று வாழும் இந்த
உயிர் பூக்கள்..
விதைக்க விதையின்றி
பேரிளம்பெண்ணாய் திருமண கனவுகள்
நோக்கி பூத்து கிடக்கும் இந்த
சிரிப்பு மறந்த பூக்கள் சிதைக்கும்
செல்லும் இப்படியே ..
துக்கங்கள் தொண்டைக்குழியை
அடைக்கட்டும் துன்பங்கள்\
எங்களை தொடரட்டும் பிழைப்பின்றி
வாழ வழியின்றி கிடந்து மக்குகிறோம்\
சொந்த மண்ணிலே ஆனால்
அதுதான் தெரியவில்லை சொந்த மண்
எது என்று.. அ--கதி(களாய்)யற்று
கிடக்கிறோம்…
கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்
No comments:
Post a Comment