Tuesday, March 25, 2014

தீவிரவாதியாகிறேன் ..!






செழித்திருக்கும் மல்லிகை 

தோட்டத்தில்


சூழ்ந்திருக்கும் தேனிக்களின் 


கூட்டத்தில்


முந்தியும் பிந்தியுமாய் சேமிக்கும் 


அறை நோக்கி


விர்ரென்று பறக்கும் ”ஜெட்” டாக 


பறந்து செல்கிறது 


என் பொழுதுகள் ...


உன் வருகைக்காகவே..!!


மல்லிகையின் வாசம் சூழ்ந்திருக்கும்


கார்குழலில் இணைந்திருக்கும் 


சங்கு கழுத்தில் வழியும் 


வியர்வை துளி .உன் ஒற்றை 


மூக்குத்தியாய் மின்னுகிறது 


ஒளி வெள்ளத்தில்..!!


பொட்டு பொட்டாய் பட்டென 


விரியும் பருத்தி பஞ்சிற்கென 


காத்திருக்கும் கிள்ளையாய்


என் காத்திருப்பின் கவனம் 


மொத்தமும் சிதறி தெறிக்கும் 


மெர்க்குரியாய் உன் அள்ளமுடியா 


அடுக்குப் புன்னகையில் அமிழ்ந்து 


போகிறது. அமிழ்ந்ததை அள்ளி 


கொட்டினாலும் தீராத அன்பு 


உன்மேல் தீவிரவாதமாய் 


என்னை முடக்கி போடுகிறது 


அடியே தீவிரவாதியாகிறேன் 


உன்னால் உனக்குள்...!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

No comments:

Post a Comment