Wednesday, December 8, 2010

கரை சேரா மீனவனே ...

கரை காணமுடியா வெள்ளத்தில் ...
கரை தேடி சென்ற ..உன்னை காண
கண் துயில மறுக்கிறதே..
உணர்வுகள் மறந்து....நாட்கள் நகர்ந்து ..
விழி கரை கடந்து.வெள்ளம் வற்றி..
வறண்ட விழிகளுக்குள் ..
கரை காண முடிய வெள்ளத்தில் நீ ......

Monday, December 6, 2010

மழை .

உன் சந்தோசாமா..இது
உன் கோவமா... இது..
உன் ஆதங்கமா... இது..இல்லை
உன் எண்ணங்களின் வடிவமா... இது.
.இல்லை.. இல்லை
ஆதவனை எழுப்ப மனமே இல்லை.. உனக்கு.....
வாட்டுகிறதே..புயல் மழை ...

Saturday, December 4, 2010

பார்வையிலே பரிமாறி..
பாசம் கொண்ட பெற்றவளின் துணையோடு ..
உன்னை அடைந்தேனடா ..கண்ணா..
கண் பட்டதோ ..என் வாழ்வில் ..எனை
விட்டு போக நீ ஆயத்தம் ஆகிறாயேடா..
மனம் புரிந்து வாழ்ந்தேனடா..ஒரு திங்கள்..
எங்கிருந்துடா வந்தது உனக்குண்டான காகிதம்..
காலனிடத்திலிருந்தா..

பெற்றோரும் .உற்றோரும் வரவில்லையடா..
உன்னை நான் தாங்குவேன் என்று என்னிடத்தில்
கொடுத்தானடா ஆண்டவன்..அவனே விரும்ப மாட்டான்டா ..
நீ எனை விட்டு செல்ல..என்ன செய்வேனடா நான்..நீ இன்றி இவ்வுலகில்...

Sunday, October 17, 2010

விட்டுக் கொடுங்கள்;
விருப்பங்கள் நிறைவேறும்......................

.தட்டிக் கொடுங்கள்;
தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்.
கண்மணியே....
நீ என் கண்மணியடி..
கண்கள் விரிவதை பார்க்கலியாடி..என் கண்ணே ..
உன்னை காணமல்...கண்டவுடன்..
சொற்களில் உள்ள வேகத்தை மட்டுமே ...
கண்கொண்டு கொண்டாயடி ...என் கண்ணே ..
சொற்களில் பாசத்தை காட்ட தெரியவில்லையடி..
வந்து நீயாக என்னை காட்டி கொள்வாயடி என நினைதேனடி..என கண்ணே
என்றுமே..நீ என் கண்மணியடி..

Saturday, October 16, 2010

அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பிடித்ததெல்லாம்கிடைத்தவுடன்..
உன் கண்கள் விரியும் அழகு..
உன் மெல்லிய புன்னகை...
மௌனத்திலும் உன் அழகு ..
கோபத்திலும் உன் அழகு..
உன்னை காணாமல் இருக்க முடியவில்லையடா..
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பள்ளி அனுப்பியே பரிதவித்தவள் நானடா..
நீ வரும் முன் நான் இருக்கவேண்டும் என நினைத்தவள் நானடா..
விடுமுறை நீ எடுத்தால்.. பணிக்கு விடுப்பு எடுக்கும் ஆளடா நான்..
கல்லூரி சென்றாலும்..உன் முதல் நாளில் நானும்..வாசலில் நின்றேனடா.. .
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

அனுமதி பெற்று நீ சென்றிருந்தாலும்..
சந்தோசமாக அனுப்பிருந்தாலும்..
கொஞ்சம் எட்டி பார்கிறதடா..என் அப்பாவின்..குணம் .
எங்கேயும் அனுப்பமால்..தன் பார்வையிலே நாங்கள் இருக்கவேண்டும் -என்ற
அவரின்..பாசமிகு..எண்ணங்கள்..
செல்லம் என்பதால்..உன் கனவுகளை நிறைவேற்றும்..
என் எண்ணங்கள் ...அலைகிறதடா
மனம்...ஒத்தையாய் பெற்றதாலோ...என்னவோ ....

Friday, August 6, 2010

வாழ்வதும் வீழ்வதும்...
நம்மிடம் இல்லை...
ஆனாலும்...
வாழ்கிறோம்...

தவறு என்று தெரிந்தும் செய்கிறோம்..
தெரிந்தே தொலைக்கிறோம்...
கிடைக்கும்போது..
வேறோன்றை..தேடுகிறோம்...
அலை பாயும் மனதால்..
தொலைக்கிறோம்...அனைத்தையும்...

தெரிந்தே வாழ்கிறோம்...

வாழ்வதும் வீழ்வதும்...
நம்மிடம் இல்லை...
ஆனாலும்...
வாழ்கிறோம்..

Wednesday, June 9, 2010

காதல் பறவையின் வண்ணங்கள்...அழகுதான்...
உயிரோடிருக்கும்வரை...
காதல் பாவையின் எண்ணங்கள்.. அழகுதான்..
உயிரோடிருக்கும்வரை...
'Tamilish'

Free Personal signatures - cool!

TEXTAREA_ID
எண்ணங்களின் பயணமோ ...
எண்களின் பயணமோ ...
உன்னை அறிய --நான் ...
அறியாது செல்ல..நீ ..
தொலைத்த நான் தேட...
தொலைந்த நீ...
வாழ்வது கடினம் ..நீ
இல்லாமல் ..நான்
வாழ்வேன் வீழாது ....உன்
எண்ணங்கள் இல்லாது ..
புதியதாய்...

வாழுங்களேன் ..கல்லறைகளில்தான் .....
வாழ்க்கையில் துணையாக வாழ -நான்...
கல்லறையில் வாழ ....வாழுங்களேன்...
துணை தேடாது ...மீண்டும்...
இப்போதாவது .என்னுடன் மகிழ்ச்சியுடன்..
..வெண்மையா ...நீலமா......பிடித்திருக்கிறது..
உன் வேகம் உன் மாற்றம் ...எல்லாமே பிடித்திருக்கிறது..
நானும் உன்போல என்பதாலோ பிடித்திருக்கிறது.

மண் சாலையில் கல் தட்டி விளையாடி...புத்தக சுமை..
மாட்டுவண்டி சுமந்து....பிடித்திருக்கிறது..

நிமிர்ந்து நடந்து அண்ணாந்து பார்க்கையில் ..
சிங்கம் புலி அன்னம் என உன்னை ...
எனக்காக மாற்றி காட்டியது ..பிடித்திருக்கிறது..

சில வினாடிகளில் நீ உன்னை மாற்றி காண்பிப்பதும் ..
பிடித்திருக்கிறது..பிடித்திருக்கிறது.....

அன்று புரியவில்லை...
வாழ்கையும் இப்படித்தான் என்று...
உன் வேகம் உன் மாற்றம் ...எல்லாமே பிடித்திருக்கிறது..