வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Tuesday, February 5, 2013
"இதழ் கொல்லும் "
"உன் இதழ் புன்னகையாய்
உன் உயிர் வண்ணம்
எனக்குள் வானவில்லாக
கவிந்து கிடக்கு "
"இதழ்களின் இணைப்பில் தான்
உன் குறுஞ்செய்தி யும் எனக்குள்ளே
இனிமையாய் "
"உன் இதழ் தழுவிய
வார்த்தைகள்
என் மீது கோபமாய்
அன்பாய் ,ஆறுதலாய்
எப்போதும் "
"உன் மௌன புன்னகையில்
உன் இதழ் வழியும்
அன்பு எனக்கு மட்டுமே புரியும் "
"உன் இதழுக்கு மட்டுமே
முதல் உரிமை
உன் வார்த்தைகளின் தழுவல் "
"உன் கண்ணீரின்
சுவையும் ,வலியும் ,
உன் இதழுக்கே முதலில் "
"உன் சிறு புன்னகையே
இதழின் மொழி
"உன் சிறு புன்னகையே
இதழின் மொழி
உன் சிறு விழியசைவே
எனக்கான மொழி
மொழி உள் வாங்கிய
இதழ் தேன் நீ "
Subscribe to:
Post Comments (Atom)
இதழே இதழைப் பற்றி இனிமையாகச் சொல்லுகிறதே.அருமை வாழ்த்துக்களுடன் தொடருங்கள்
ReplyDelete