அம்மா அம்மா ..எத்தனை முறை அழைத்தாலும் ம்ஹும் ..கதவு திறக்கவேயில்லை
,அம்மாவிடம் கேட்டேன் ஏனம்மா நம்ம கதவு மட்டும் திறக்க மாட்றாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு மா..
.சத்தமா கூப்பிட்டாலும் வந்து மிரட்டிட்டு போறாங்க ..
ஆனா அவங்க மட்டும் அவங்க பிள்ளைங்க கூட வெளியே போறாங்க கார்ல..
அழுகை அழுகையா வருதுமா,,,அம்மா அம்மா பதில் சொல்லுமா .. ம்ஹும் சத்தமே இல்லை வெறும் பார்வையால் வேதனையை வெளிபடுத்தினாள் அம்மா ..
எங்களுக்கு எல்லாமே இந்த அறைதான் ,சாப்பாடும் தருவாங்க தண்ணியும் தருவாங்க ..
அப்போ மட்டும் அறைக் கதவை திறப்பாங்க ம்ம் நல்ல வாசனையா சுப்பர் சுப்பரா இருக்கும் ...
அவங்களுக்கு நல்ல மூட் இருந்தால் எங்களையும் வெளியே அழைச்சிட்டு போவாங்க,
ரொம்ப ஜாலியா இருக்கும்அவங்க கூடவே தான் இருப்பாங்க...
ஆனாலும் அம்மாகிட்ட தனியே பேசிடுவேன் அம்மா இப்போ அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிட தருவாங்க..
ம்ம்.அப்போதான் வெளிச்சத்தையே பார்ப்போம் .. கொஞ்சம் நேரம்தான்...
எங்களை வெளியே கூட்டிட்டு வந்தவங்களுக்கு அம்மா இருக்காங்க,
அவங்க வயசானவங்க அவங்க வந்து ஏன் இவ்வளவு நேரம் "அப்படின்னு சொன்னதுதான் தாமதம் ,
மீண்டும் நாங்கள் எங்கள் அறையில்...........கொஞ்சம் கழித்து அம்மா கிட்ட கேட்டேனா ,
அம்மா சொல்றாங்க ..
என்ன எங்க அம்மா நல்ல பாத்துக்க மாட்டங்கன்னு அந்த அம்மா சொல்றாங்கன்னு சொன்னங்க ,
நான் ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன் ,
அம்மா விடுங்கடாசெல்லம் ,நமக்கும் காலம் வரும் அப்படின்னு சொன்னங்க ....
திடீர்னு அம்மா பயங்கரமா சத்தம் போட்டாங்க ..
அறை வாசலில் பூனை ..நாங்களெல்லாம் அம்மாவின் இறகுகளுக்குள் .....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Monday, January 23, 2012
Thursday, January 19, 2012
ஸ்பரிசம்
ஸ்பரிசம்
உணர்வாலும் எண்ணத்தாலும் மகிழ்ந்த தருணம் எது என
எண்ணி எண்ணி துவண்டு தளர்ந்து கிடந்தாள் இந்து ,
அவள் நினைவினில் தடம் பதித்து சென்ற அந்த தருணம்...
சிந்து பிறந்ததும் அவள் நேரத்தை,
கவனிக்க இன்பமாய் இதமாய் ஒரு ஸ்பரிசம் உரச ...
மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ....
வேலை வேலை என்றிருந்த நேரங்களில் அவளின் நினவு மட்டும் உரசலாய் ..
சிந்து வீட்டில் இருந்தபோது ஒரே களேபரமாய் இருக்கும்,
பணி முடிந்து திரும்பினால் வீடு முழுதும் புத்தகமாய் ,
பேனாவுமாய்,இறைந்து கிடக்கும்,
இதன் நடுவில் அவள் கையில் மொபைலும் ,
எதிரில் கையடக்க கணினியும் நெட்டுடன் இணைந்து இருக்கும்,
அவளையும் என்னையும் போல ..
அம்மா வருவதை கூட கவனியாமல் ...ம்ம் என கூறி நான் சென்றால் ..
என்னம்மா என்ற கொஞ்சலுடன் கூடிய வார்த்தையில் மூழ்கடிப்பாள்,
எதிர் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டு அம்மா என கொஞ்சுவாள்..
கண்ணாலே பேசி என்னை பேசமால் இருக்க செய்வாள்..
கையடக்க கணினி முன் கண்ணாலும் ,குரலாலும் மகிழ்விக்கிறாள்.....
அவள் ஸ்பரிசம் இன்றி ..
அதிக பிணையதொகை கட்டி பராமரிக்கும்
முதியோர் இல்லத்தில் இந்துவாகியநான் இந்தியாவில்
Friday, January 13, 2012
நீர்த்துளி
மனதில் உள்ளவைகளை புரிந்து கொள்ள வந்தாய்
சொல்லியும் சொல்லாமலும் புரியவில்லை
விழி பார்த்து இதயம் உணர்ந்து அறியும் உறவு..........
நினைவுகளின் பயணம் வெகுதூரம் .........
இமைகள் பொருந்திய தடத்தில்.....
எங்கெங்கோ செல்ல
காற்று, மழை ,வெப்பம், நீ நான் என செல்ல ..
பிரிந்த இமை தடத்திலும் நினைவுகள் ...
இமை கதவை அடித்து மூட ...
மீண்டும் இணைந்த தடத்தில் ..
இணையா தண்டவாளமாய் ,
துக்கத்திலும் ஆறுதல்,மகிழ்விலும் பகிர்வு ,
பாசத்திலும் மிஞ்சாமல் பரிவுடன்...
அலையும் விரல்அளந்து.. இமை தடத்தில்
நேர்கோடாய் அருகில்...
எண்ணங்களால் அடித்து செல்ல நிழலாய் ..
விழியோரம் கசியும் துளி நீர் வெள்ளமாய் பெருக..
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இமை தடம் ..
மூழ்கி பாதை பிரிய ..விக்கித்து நிற்க விழி...
இறுகிய இதயம் செயலிழந்து ...
பார்த்து உணர்ந்த உறவு பரிதவித்து போக...
புரியும் நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் ..
விக்கித்து நிற்கும் விழி பார்த்து ஒரே தடத்தில்
விழித்து நிற்க ...நீர்த்துளி தானே வழிந்து
தன் பாதை தேடி ..........
Sunday, January 1, 2012
விழி வழி தேடுகிறேன்
புன்னகையுடன் ..
சிறு துளியோரப்பார்வை ..
பேசுகையில் சட்டென திரும்பி வரும் பார்வை ..
கவனிக்க வைக்கும் அந்த பார்வை ..
கை மறைத்து பார்க்கும் பார்வை ...
கோவமாய் பார்வை பார்க்க நான் ...
சட்டென திரும்பும் பார்வை ...
ஏங்குகிறேன் அதற்க்கு ....
நாளும் கடக்க மீண்டும் பார்வை..
தாக்குகிறது பார்வையால் என்னை...
கோபத்திலும் பார்வை..ரசிக்க
பார்வைக்காக ஆடுகிறேன் ...
பாடுகிறேன் தூங்க மறுக்கிறேன் ..
நமக்கான பார்வை இதுதானா என..
தேட தேட கிடைத்தது பார்வை..
உன் விழி என் பார்வை...நீ பார்த்த பார்வை ...
தேடுகிறேன் தேடுகிறேன் நான் இன்று
எதை தேடினேன்.... தேடுகிறேன்
புரியவில்லை...விழி வழி...............
நினைவுகளுக்கும் மரணம் .. மௌனம் ...
பேசுதலும் ........பார்த்தாலும் ..மௌனம்
எப்போதும் வரும் விழியோர கண்ணீரும் மௌனம்
எப்போதோ வரும் இதோழர புன்னகையும் மௌனம்
எப்போதும் தொட்டு செல்லும் காற்றும் மௌனத்தில் இன்று..
எப்போதும் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் மௌனம்
எப்போதோ நடந்த நிகழ்வுகள் ,விழி விரிந்த புன்னகையின் நினைவுகள்
எப்போதும் அங்கே கூட்டி செல்கிறது .
எப்போதும் உள் செல்லும் காற்று வெப்பமாய் இன்று
...மௌனமாய் இருக்க சொல்லிவிட்டு..
குளிர்ந்து மௌனமாய் மௌனமாகியது ..ம்... மௌனம்
இனி நினைவுகளும் மௌனமாகியது....
தொடர்வேன்..காற்றால் மௌனமாய் .. உன்னை
Subscribe to:
Posts (Atom)