Wednesday, December 8, 2010

கரை சேரா மீனவனே ...

கரை காணமுடியா வெள்ளத்தில் ...
கரை தேடி சென்ற ..உன்னை காண
கண் துயில மறுக்கிறதே..
உணர்வுகள் மறந்து....நாட்கள் நகர்ந்து ..
விழி கரை கடந்து.வெள்ளம் வற்றி..
வறண்ட விழிகளுக்குள் ..
கரை காண முடிய வெள்ளத்தில் நீ ......

Monday, December 6, 2010

மழை .

உன் சந்தோசாமா..இது
உன் கோவமா... இது..
உன் ஆதங்கமா... இது..இல்லை
உன் எண்ணங்களின் வடிவமா... இது.
.இல்லை.. இல்லை
ஆதவனை எழுப்ப மனமே இல்லை.. உனக்கு.....
வாட்டுகிறதே..புயல் மழை ...

Saturday, December 4, 2010

பார்வையிலே பரிமாறி..
பாசம் கொண்ட பெற்றவளின் துணையோடு ..
உன்னை அடைந்தேனடா ..கண்ணா..
கண் பட்டதோ ..என் வாழ்வில் ..எனை
விட்டு போக நீ ஆயத்தம் ஆகிறாயேடா..
மனம் புரிந்து வாழ்ந்தேனடா..ஒரு திங்கள்..
எங்கிருந்துடா வந்தது உனக்குண்டான காகிதம்..
காலனிடத்திலிருந்தா..

பெற்றோரும் .உற்றோரும் வரவில்லையடா..
உன்னை நான் தாங்குவேன் என்று என்னிடத்தில்
கொடுத்தானடா ஆண்டவன்..அவனே விரும்ப மாட்டான்டா ..
நீ எனை விட்டு செல்ல..என்ன செய்வேனடா நான்..நீ இன்றி இவ்வுலகில்...