வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Friday, January 21, 2011
அன்பு உன்னை அழிக்கும்
அதிகபடியான அன்பு உன்னை அழிக்கும்
அன்பு செலுத்தும் போதும் அது கிடைக்கும்போதும் சந்தோசப்படும் நாம் .
அந்த அன்பு அதிகபடியான அன்பாக மாறும் பொது...வெறுப்புக்கு மட்டுமே உள்ளகிறோம்..எதுவுமே அளவுக்குள் இருக்கணும்..அப்படிதானே..எல்லையை தாண்டும்போது.. எதுவும் நம்மை விட்டு சென்று விடுகிறது..அன்பு ஒரு பக்கம் இன்றி இரு பக்கத்திலும் இருக்கணும்..அது தாய் அன்பாக இருந்தாலும் தந்தை அன்பாக இருந்தாலும்...கணவன் மற்றும் பிள்ளைகள் அன்பாக இருந்தாலும்..
அதிகபடியான அன்பு..நம்மை விலகியே இருக்கவைக்கிறது..
பிறந்ததிலிருந்து கிடைக்கும் தாயன்பும் இன்னொரு பிள்ளை பிறந்த பின் மாறுகிறது.
கூட பிறந்தவர்களின் அன்பும் ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு மாறுகிறது..
பழகும் நட்புகளின் உண்மையான அன்பு..சில சமயங்களில் எல்லை தாண்டுகிறது...
அன்பு மாறாமல் என்று..நிலைக்கும் .எப்போது...???
இது கேள்வி குறியாகவே உள்ளது..
இன்றிய கால கட்டத்தில் ..
கணவன் மனைவி அன்பும்..மாறுகிறது..நம்பிக்கை இழக்கும்போது ...சந்தேகம் ஆட்கொள்ளும்போதும்..
அன்றைய வாழ்கை நிலையில் பெண் சந்தேகப்பட்டாலும்..அது பெரிதாக எடுக்காமல் ஆண்கள் செய்வதே சரி என்று இருந்தது..
அனால் அப்போதாவது குடும்பம் வாழ்க்கை என்பது சரியான பாதையில் சென்றது ..
ஆனால் இன்றைய நிலைபாட்டில்..நம்பிக்கை அற்ற தன்மையாலும்.அதீத அன்பினாலும்..அனைத்தையும் இழக்கிறோம்.
பெண் என்று எடுத்துகொண்டால் அவள் வேலைக்கு சென்றாலும் அல்லது படித்தாலும்..எங்கு சென்றாலும் அவள் யாரிடம் பேசினாலும் அவளை தவறாகவே எடுத்துகொள்ளும் மனோபாவம் அதிகபடியான அன்பு செலுத்தும் கணவனுக்கு வந்து விடுகிறது .அதை புரிந்து கொள்ளும் பெண்ணின் வாழ்க்கை நிலை இந்த சமுகத்தில் சரியாக அமைகிறது..அனால் அவளுடைய நிலை கணவனை விட அந்தஸ்துள்ளதாக மாறிவிட்டால்..அவள் இந்த வாழ்க்கையே வேண்டாம் இந்த அன்பே வேண்டாம் என்று தன நிலை மாறிகொள்கிறாள்..அப்படி அவள் மாறும்போது..அவன் நிலையிலிருந்து மாறி கொலை காரனகிறான்...அல்லது..ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற அவப்பெயருடன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான்..
தயவு செய்து அதிகபடியான அன்பை மாற்றிகொள்ளுங்கள் இது சந்தோசமாக வாழ வைக்கும்..விட்டு கொடுத்து வாழுங்கள்.இது உங்களை இன்னும் அதிகமாக சந்தோசப்படுத்தும் .நிலையான அன்பு..நம்பிக்கையான அன்பும் வேருன்றி வாழும் காலங்கள் கடந்தும் .............................
Thursday, January 13, 2011
Sunday, January 9, 2011
அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்
தான் நினைத்தது தான் சரி என்று யோசிக்காமல்..
எப்போதும் மற்றவர்களின் கருத்தையும் அலசி பார்க்கவேண்டும்..
திருமணம் என்பது நமது சமுகத்தின் நம்பிக்கை..
அனால் இன்றைய காலகட்டத்தில்
அது தேவை படுவதில்லை.நம் இளைஞர்களுக்கு ..
படிக்கும்போதே காதல்..உடனே திருமணம்..தெரிந்தும் தெரியாமலும்...
வாழ்க்கைஎன்னவென்று தெரியாத வயதில் அது ஆரம்பித்து விடுகிறது..பெண் வளர்ந்த சூழல்.ஆண் வளர்ந்த சூழல்...இவை எல்லாமே ஒரு சிலமாதங்களுக்கு அவர்கள் நினைவில் இல்லை..அனால்..பிள்ளைகள் பெற்றதும்.பொருளாதாரமின்மை, இதன் காரணமாக பெண் வேலைக்கு செல்லும் போது அவளின் நிலை கண்டு ஏமாற்றும் உலகம்...இதன் விளைவு காதல் கணவனை மற்றவர்கள் முன் அவமானபடுத்துவது..அவன் சரியில்லை குடிக்கிறான் எதற்கும் லாயிகறவன் என்று குறை கூறுவது..இது என்ன?? இதுவே அவர்களின் பிரிவுக்கும்.. அது இந்த காதல் இனகவ்ர்ச்சிதான் என்று தெரிவதற்குள் அவன் வாழ்கை வீணாகிவிடுகிறது..அவன் பெற்றவர்களின் ஒரே வாரிசாக இருந்தால்..இன்னும் அவமானம் தான்..
இது ஒரு கால கட்டம்....
அனால் இன்றைய சூழல் ..
படிக்கும் போதும் வேலை செல்லும் போதும் வரும் காதல் சாதிக்கிறது..ஒரு 75 % விழுக்காடு
அனால் இன்றைய படித்த இளைஞர்களின்/இளைஞிகளின் நிலை
உனக்கு பிடிகிறதா .எனக்கு பிடிகிறதா சேர்ந்து வாழலாம்..
சேர்ந்து அனுபவிக்கலாம் தவறில்லை..அனால் மணம் என்று வந்தால் அவர் அவர் வீட்டின் நிலைபாடிற்கேற்ப
வேறு ஒருவனை மணம் செய்து கொண்டு உள் நாட்டிலோ ..வெளி நாட்டிலோ வாழ்கிறார்கள்...
ஒன்று மட்டும் புரிவதில்லை..எனக்கு
ஏன் மணம் செய்யும் பொழுது நம்மால் ஏற்று கொள்ள முடிந்த நம் காதலன் ..பின் கணவனான பிறகு அவன் செய்யும் எதையும் ஏற்று கொள்ள முடிவதில்லை அன்று அவன் சிகரட் பிடித்தாலும் சுப்பர் தான். மது குடித்தாலும் சூப்பர் தான் அவனை நீயே தூண்டி விட்டு இது செய் நீ இப்படி இருப்பாய்..அதை செய் நீ அப்படி வருவாய் என்று அவனை அன்றே உன் கண் சொல்லும் வேலைக்கு அடிமை படுத்திவிட்டாயே ..அவனுக்கும் தனி சிந்தனைகள் இருக்கும் என்றாவது நினைத்திருப்பயா ..அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்.. இதில் பிள்ளை இருந்தால் இன்னும் அவள் பாடு கொண்டாட்டம் தான்..அதை அவன் கண் முன் காட்டாமல் அவள் அழைத்து சென்று விடுவது..அவனே வேண்டாம் அவனுடிய பிள்ளை மட்டும் தேவையா .காதல் என்ற ஒரே தவறு தான் அவன் செய்தது..அனால் அவன் நிலை ???//
Subscribe to:
Posts (Atom)