பொட்டல் வெளியில் வெயிலும் கட்டாந்தரையும்
கூடலில் கூடிக்களிக்கிறது
ஒற்றை பனை மர பொந்துகளின் கிளிகளும்
ஊடலில் உணவு தேடி அலைகிற்து..
ஒற்றை ஓணானின் வேகசுழற்றல் ,இமை பொழுதில்
பாதிப்பனையில் நிற்கிறது,
இன்று வரும் மழை என எதிபார்த்து காத்திருந்த கட்டாந்தரையாக,
ஒவ்வொரு திங்களும், மாறிப்போகிறது
உனக்கான காத்திருத்தலில் வெகுநேரம் நான் நிற்ப்பதை,
வெத்திலை இடிக்கும் கிழவி போல்,
தன் வாலை கொண்டு பனையில் தட்டி நிற்கிறது
எனக்கு துணையாக,
சரசரக்கும் பனைஓலையின் சரசத்தில்,காத்திருந்த
ஒணானும் குதித்து ஓடுகிறது....உ்ன் வருகை கண்டு ,
கன ம்ழைக்கு முன் வரும் கற்றாகிப்போகிறது.....என் மனம்
கவிதை..
அ.தமிழ்ச்செல்விநிக்கோலஸ்..
Arumai
ReplyDeleteSuper kavithai, excellent mam
ReplyDeleteமிக அருமை தோழமையே..!
ReplyDeleteமகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் உங்களை சந்திப்பதில் வரவேற்கிறேன்
ReplyDeleteஎல்லாம் சரி அருமை செம்மை உங்கள் சிந்தனை சிறப்பு ஆனால் friend Request கொடுத்த ஒன்று பார்த்து நீக்க வேண்டும் அல்லது பதில் தரவேண்டும்
இது தான் பண்பாடு நாகரிகம்