Tuesday, July 9, 2013

தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை...

பூங்காக்களில் மரங்கள்
பேசி கொள்கின்றன!!!

அசைவில்
தெரியபடுத்துகிறது
நீ வரும் நேரத்தை !!!

.............................................

நடைபாதை
கற்கள் பேசி கொள்கின்றன!!

உன் மென்மையான நடையை!!!!


........................................................

புரிதல் இல்லா அன்பு

பொய்த்துவிடும்
பூக்கள் மலரும் காலையில்!!

.......................................................


மேகக் கூட்டம்

கதைக்கிறது
ஒன்று கூடி!!!

மழைக்கான நேரம் கணிக்க!!!

....................................................


காத்திருப்பது 

என் நினைவுகளும் !
என் உணர்வுகளும்!

காற்றில் நிரப்புகிறேன் !
யாரும் அறியாமல்
உன்னை ஸ்பரிசிக்க!
.....................................................

உன் நினைவெனும் பாசி

பசுமையாய் என் 
மனக்குளத்தில்!!!

...................................................


காதல் கரையான்கள்

சட்டென்று அழித்து விடும்
வாழ்வை !!!

இனம்புரியா
காதல் "புரியாத போதை”

....................................................


நினைவெனும் வெல்லம்

சுவையாகத்தான் 
சில பொழுதுகளில்!!!

...................................................


சுற்றும் காற்றாலையின்

வேகம் கூடுகிறது.

காற்றாய் நான்!!!!

..................................................


காணும் கண்களில்

கவிதையே எப்போதும்..

என் அருகினில் நீ!!! 

.......................................................


No comments:

Post a Comment