Sunday, October 17, 2010

விட்டுக் கொடுங்கள்;
விருப்பங்கள் நிறைவேறும்......................

.தட்டிக் கொடுங்கள்;
தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்.
கண்மணியே....
நீ என் கண்மணியடி..
கண்கள் விரிவதை பார்க்கலியாடி..என் கண்ணே ..
உன்னை காணமல்...கண்டவுடன்..
சொற்களில் உள்ள வேகத்தை மட்டுமே ...
கண்கொண்டு கொண்டாயடி ...என் கண்ணே ..
சொற்களில் பாசத்தை காட்ட தெரியவில்லையடி..
வந்து நீயாக என்னை காட்டி கொள்வாயடி என நினைதேனடி..என கண்ணே
என்றுமே..நீ என் கண்மணியடி..

Saturday, October 16, 2010

அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பிடித்ததெல்லாம்கிடைத்தவுடன்..
உன் கண்கள் விரியும் அழகு..
உன் மெல்லிய புன்னகை...
மௌனத்திலும் உன் அழகு ..
கோபத்திலும் உன் அழகு..
உன்னை காணாமல் இருக்க முடியவில்லையடா..
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பள்ளி அனுப்பியே பரிதவித்தவள் நானடா..
நீ வரும் முன் நான் இருக்கவேண்டும் என நினைத்தவள் நானடா..
விடுமுறை நீ எடுத்தால்.. பணிக்கு விடுப்பு எடுக்கும் ஆளடா நான்..
கல்லூரி சென்றாலும்..உன் முதல் நாளில் நானும்..வாசலில் நின்றேனடா.. .
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

அனுமதி பெற்று நீ சென்றிருந்தாலும்..
சந்தோசமாக அனுப்பிருந்தாலும்..
கொஞ்சம் எட்டி பார்கிறதடா..என் அப்பாவின்..குணம் .
எங்கேயும் அனுப்பமால்..தன் பார்வையிலே நாங்கள் இருக்கவேண்டும் -என்ற
அவரின்..பாசமிகு..எண்ணங்கள்..
செல்லம் என்பதால்..உன் கனவுகளை நிறைவேற்றும்..
என் எண்ணங்கள் ...அலைகிறதடா
மனம்...ஒத்தையாய் பெற்றதாலோ...என்னவோ ....