Thursday, September 10, 2015

அய்யம்பாளையம் ஆரம்பப்பள்ளி..


விடியற்காலை ஆஹா..என்ன அற்புதமான காலை அந்த காலையில், அழ்கான தார் சாலையில் விளக்கின் வெளிச்சம்,அதாவது தெரு விளக்கின் வெளிச்சத்தில் வெள்ளை கலர் கார் மெல்ல சாலையில் கிளம்ப ஆயத்தமாக,அற்புதமான பனியை மெல்ல சுமந்து அழகாய் செல்ல...
இரு புறமும் மரங்கள் சூழ அடர் காரிருள் மெல்ல குறைய கதிரவன் தன் கை நீட்டி அதை பிடித்து உட் கொள்ள வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது காரும் மெல்ல நெருங்குகிறது பெரம்பலூர் எனும் இடத்தை,அங்கிருந்து சாலை துறையூர் செல்ல வழியில் வழுக்கிக்கொண்டு செல்ல,அழகான் ஒற்றை பாதை மரங்களடர்ந்த கிராம சாலை அற்புதமான பயணம்...

முன் காலை என்பதால் ட்ராபிக் இல்லா சாலை...பிள்ளைகள் பள்ளிக்கு பயணம் செய்ய ஆயத்தமாக ,சைக்கிளில் செல்லும் பள்ளி பிள்ளைகள் கூட்டம் கூட்டமாக செல்லம் வெள்ளை அன்னத்தை போல சாலையை அங்குமிங்கும் கடந்து போக ,வயல்வெளியும், செம்மண் கலந்துவிட்ட பாத்திகளும் இருபக்கமும் பார்க்க ரம்மியமாய்...

ஆம் ..! வயக்காடுகளும் பம்புசெட்டு மோட்டார்ர்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது...சாலை புதியதாய் கருப்பழகில் மின்ன கார் வழுக்கி சென்றது லிமிட் வேகத்தில் ...நிறைய கோயில்கள் அதும் பழங்கால கோயில்கள் தான் அங்கங்கு சுமை தாங்கி கற்கள் அப்படியே துறையூரில் நுழைந்தோம். விடிந்து வெளிச்சம் கூடத்துவங்க கடைகளும் திறக்க ஆரம்பித்தார் கள்.

மீண்டும் கிளம்பியவண்டி தொடர் சாலையில் நீளமான மேம்பாலத்தில் கீழே காவிரி ஆறு பயணிக்க” மேலே பாலத்தில் கடக்க கடக்க பாலம் நீண்டுக்கொண்டே செல்ல முடிவில் குளித்தலை வந்தது ...யப்பா ...!எத்தனை நீளமான பெரியபாலம்..

அங்கிருந்து பிரிந்த நாலு ரோட்டில் இரும்பூதிப்பட்டிக்கு வழிக்கேட்டு மெயின் சாலையில் இருந்து பிரிந்த சாலையில் பயணிக்க ஆர்ம்பித்தோம் ..அற்புதமான பயணம் இரு மரங்கிலும் மரங்கள் வயல்வெளிகள்,பிளாஸ்டிக் கூடையை சுமந்த பெண்கல்.வண்டியை ஓட்டி சென்ற பெண்கள் கூட்டம் அங்கேயும் வேலைக்கு செல்ல சாலைகளில் நிறைந்திருந்தனர்..

வெயிலின் தாக்கம் சற்று குறைச்சல் என்றாலும் பயணம் இரும்பூதிப்பட்டியை நெருங்க அங்கிருந்து அய்யம்பாளையத்துக்கு வழி கேட்க நிறுத்தப்பட்ட வண்டியை என்னவோ ஒரு வித்தியாசமானதாய் பார்த்த அந்த குடியானவர் தலையில் சுமையென கருதாமல் வைத்துக்கொண்டிருந்த கூடையையும் பொருட்படுத்தாமல் இருக பிடித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஒரு மேடு ஏறி இறங்கினால் பஞ்சப்பட்டி வந்துவிடும் என சொல்லி அதுல் பிரியற் ரோடுதாங்க “அய்யம்பாளையத்துக்கு” போற வழி என சொல்லவும் ..பயணம் பஞ்சப்பட்டியை நோக்கி பரவசத்துடன்
எனை சந்திக்க வந்த ஆசிரியரும் அவருடைய தோழியும் அந்த கிராமத்தில் அங்கே காத்திருக்க,அவர்கலை சந்தித்து மரியாதை நிமித்தம் சில பல வார்த்தைகள் அளவளாவி,அங்கிருந்து மேற்கால் செல்லும் சாலையில் செல்ல ஆரம்பித்தோம்..
இருபுறமும் வானம் பார்த்த பூமியாய்,அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள்,வெயிலின் தாக்கமும் கூடுதலாக ,ஓடு வீடுகளும்,கூரைவேய்ந்த வீடுகள் அக்கம் பக்கமிருக்க ,த்ண்ணீர் குழாய்கள் பஞ்சாயத்தை நினைவுபடுத்த கார் நேராக செல்லாமல் ரசித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தது..

இருபுறத்திலும் மயில்களின் கூட்டமும் அவைகளின் அழகும் கூடுதலால்..சின்ன சாலையை அவைகள் குடு குட்வென்று கடந்து செல்வதுமாய்..அந்த அழகை கண்டுக்கொண்டே கடந்து அந்த தொடக்கப்பள்ளியின் வாயிலில் நின்றோம்

அந்த பள்ளி ஈராசிரியர் பள்ளி..தலைமை ஆசிரியர் மற்றும் 1 ஆசிரியர் கொண்ட பள்ளி.....ஊடகங்கள் அதாவது தொலைக்காட்சிபெட்டி அனைத்து வீட்டில் இருந்தாலும் அவர்கள் பார்ப்பதென்ன்வோ “சோட்டா பீன்” இன்னும் சில கார்ட்டூன் ப்ரோகிராம்கள் மட்டுமே..
அந்த பள்ளியில் பயில்கின்ற் 45 பிள்ளைகளில் 21 ஆண் பிள்ளைகளும் 24 பெண் பிள்ளைகளுமாய் கல்விகற்க வருகிறார்கள்..



 
ஆசிரியரின் கண்டிப்பினில் சொல்லி தருகின்ற ஒழுக்கத்தினில் அருமையாய் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர்..

அருமையான மதிய உணவு செய்து தருகின்ற ஒரு அம்மாள்...காய்கற்கள் போட்டு கலந்து முட்டையுடன் கூடியசாதமும் மதிய உணவிற்கு பரிமாறப்பட...அழகாய் அனைத்து பிள்ளைகளும் கடவுளிடம் வேண்டி பின்னரே உணவை உட்கொள்கின்றனர்..




அந்த பிள்ளைகளுடன் இணைந்து அந்த சின்ன வாலாகத்தில் சில மரக்க்ன்றுகள் நட்டு விட்டு அவர்களிடம் எங்களின் புறப்பாட்டை சொல்லிக்கொண்டு விடைப்பெற்றோம்...

மறக்கமுடியாதினம் அன்று..அந்த தினம் பிள்ளைகள் மறந்து விடக்கூடாதென்று நாங்கள் நினைக்கின்றோம்...
கிராம்ப்புறம்..பெற்றொர்கள் வேறு ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து திரும்புவார்கள்..அல்லது வேறு இடங்களில் தங்கி வேலை ப்பார்த்து பின்னர் திரும்பும் நிலை..அந்த் சூழலில் வளரும் பிள்ளைகள் நிச்ச்யம் ஒரு வயதை எட்டியவுடன் திருமணம் எனும் பந்தத்திற்குள் தள்ளப்படாமல் அவர்கள் அந்த பள்ளியில் கல்வியை முடித்து பின்னர் மேல் கல்விக்கு கொஞ்சம் தூரம் வந்து படிக்க நிச்ச்யம் அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்

அதே சமயம் அரசும் பிள்ளைகள் 12 வது வரை கட்டாயம் படிக்க வேண்டும் எனு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் ..

பிள்ளைகளுக்கு வெளி உலகு தெரிய வேண்டும் எழுத்தறிவு மட்டுமின்றி,ஏட்டறிவு நம்மை இந்த சமூகத்தில் எவ்வளவு உயர்த்தும் என கல்வியின் முக்கியத்துவத்தினை அவர்களுக்கு உணர்த்துதல் அவசியம்..


மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம்..வேறுஇடத்திலிருந்து
தமிழ்ச்செல்விநிக்கோலஸ்