Friday, June 6, 2014

ஒரு மதியபொழுதினில்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்
சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன
குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்
ஒரு மதியபொழுதினில்

இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்
இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்
ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி
ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு

அடுக்களையில் புகை சூழ் நடுவே
கற்றையாய் விழும் கூந்தலை
அள்ளி முடிக்க வியர்வை மழையால்
குளித்து போயிருந்தன அவள் விழிகளும்

சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென
பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது
கிடுகிடுவென்று வாசல் போனது மனம்

நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த
அலமாரி கண்ணாடி கூறியது அவள்
நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்
நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி அணைத்திருந்தான்

அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை
பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் சிலாகித்தது ..!!
நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது
கைவிரல்கள்..!
கவிதையாக்கம்

**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

புரிதலற்று காத்திருக்கிறது காதல்


 

சங்கமிக்கும் எண்ணங்கள் மனதினில் ஓராயிரம் ,
வலிகள், அதில் எழும்புகிறதுதுடித்தெழுந்து
ஆர்பரிக்கும் விழிகள் நிரம்புகிறது குளமாய்
வழிந்தோடும் வேதனைகளின் சூட்டில் அனைத்தும்
தொலைந்து போகிறது.
தனிமையில் சுட்டெரிக்கும் சூரியானாய்
உதிக்கும் நினைவுகள் எனக்கும் மட்டும்தானா?
பொய்சொற்களை புகலும் உன் எண்ணத்திலும்
வடிகிறது வியர்வை துளிகள் ! அட ஆமாம்..!
நீ பொய்தான் புகன்றிருக்கிறாய்..!
பாசமதன் மீது வேஷம் கட்டிய கட்டியக்காரனாய்,
மேடை நாடகம் நிகழ்த்துகிறாய்…
இடைவெளி விட்டு கூவிக்கொண்டே வரும்
நாகரீக கோமாளியாக்குகிறாய் என்னை…
இதயத்தில் எழுதிய பெயரை திரையிட்டு
மறைக்கிறது.. உன் மெளனப்பூச்சு பூசிய இதழ்..!
எங்கோ என்றோ விட்டு சென்ற உணர்வை ,
தொட்டு தொடரும் எழுத்துக்களாய் என்னில்
எழுதிவிட்டு ஏக்கங்களை சுமக்க வைத்து
காத்திருக்கும் மயானமாய் ஆக்கிவிட்டாய்..!
கொட்டு மேளத்தையும் வாசனை திரவியத்தையும்
எதிர்கொண்டு காத்திருக்கிறேன்… அது
எந்த மாலை பெற ஏன்று அறியாதவளாய்,
எதுவும் நடக்கட்டும் என பூவிழி கரைய,
புரிதலற்று காத்திருக்கிறது காதல் கொண்ட மனது..!

  

Tuesday, March 25, 2014

நினைவுகளில் கூடுவோம்...




ஆராதிக்கும் அழகாய் அன்பின் வலியாய்
உன் நினைவுகள் நிரம்பியிருக்கிறது என்னுள்...

மணம் வீசும் மாலை நேர பூக்கள் கதைபேசும்
காற்றினில் அசைந்து இசைவாய் இணைக்கும்
நம் எண்ணங்களை..

தவிக்கும்பொழுதுகள் அற்புதமாய் பூத்திருக்கும்
அந்திமாலையில் அவளின் வருகையில்..

ஆனந்தமாய் அழகூட்டும் அவளின் அருகாமை
அந்நியப்பட்டு போகும் அந்திமாலையின்  பொழுதுகள்

பூவாய் மென்னிதழ் புன்னகையில் பூத்தஅசைவும்
மொழியென்று என் விழிகள் அறியும்..

நீண்ட பொழுதின்  காத்திருத்தலில் மெல்லிய
இருக்கங்கள் கூடுதாலாகிபோகிறது தனிமையில்..

மணம்வீசும் குழலின் கூடிய விரல்கள் வீணையாய்
மீட்டுவதில் மெய் மறந்துதான் போவாய் அப்பொழுதெல்லாம்
நீ….என் மடிமீதினில்….        

நினைவுகளில் கூடுவோம் வாழ்வினில் கூடுதாலாகி 
போகின்ற நாட்களை எதிர்க்கொண்டுகாத்திருக்கிறேன்
 உனக்காக……


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

ஏக்கம்.....................





#உலக_கவிதை_வாரம்


ஏக்கம் வறண்ட விழிகள் 

புதைமணலாய் புதைந்து 

போகிறது பூத்த பூக்கள்.. 

வறண்ட வானமும் வெடித்த 

நிலமுமாய் வாழுமிந்த

முகங்கள் சிரிக்க தெரியாத 

சில்வண்டுகள்.. 

சிதைந்து போன தாயகக்கனவுகள் 

துணிச்சலோடு உறவை என்றாவது 

சந்திப்போம் என்று வாழும் இந்த 

உயிர் பூக்கள்.. 

விதைக்க விதையின்றி 

பேரிளம்பெண்ணாய் திருமண கனவுகள்

நோக்கி பூத்து கிடக்கும் இந்த

சிரிப்பு மறந்த பூக்கள் சிதைக்கும்

செல்லும் இப்படியே .. 

துக்கங்கள் தொண்டைக்குழியை 

அடைக்கட்டும் துன்பங்கள்\ 

எங்களை தொடரட்டும் பிழைப்பின்றி 

வாழ வழியின்றி  கிடந்து மக்குகிறோம்\ 

சொந்த மண்ணிலே ஆனால் 

அதுதான் தெரியவில்லை சொந்த மண் 

எது என்று.. அ--கதி(களாய்)யற்று 

கிடக்கிறோம்…



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்


#உலக_கவிதை_வாரம்

கேட்பாரற்று கிடக்கும் பொழுதுகள்
தைரியமற்று போகும் நிஜங்கள்
உயிர் துளியாய் இதய இசையாய்
உன் நினைவுகள்

றுக்கப்பட்ட பொழுதிலும்மனம்
முழுதும்மாற்றும் திறனின்றி
உலாவும் என் நினைவுகள்
உனக்குள்ளே…

வெறுப்புகள் கூடுதலாக்கபார்வையை 
வேறுபுறம் திருப்பும் உன்எதார்த்தங்கள்
இதழ்களிலே தவிப்புடன் கூடிய
துடிப்புகள்

ணைபிரியா தண்டவாளமாய்இணைந்தே
வரத்துடிக்கும்ரயிலின் வருகை போல்
சிநேகித்த உன்னைமறப்பதேது...

தொடரும் பொழுதுகளும்விடியலும்
புது கோலங்கள்போடப்போகிறது -
என்வாழ்வில் கனவுகளில்..

ரசிய வார்த்தைகள் உன்னுள்
உரமாக வில்லையா
விழிகளின் கூடல்கள்
உன்னுள்விதைக்கவில்லையா
தொடல்களில் தழுவல்கள்
தடங்களாகவில்லையா

ன்னை மறக்கலாம் தவரென்று
தெரிந்தும் என்னை மறக்கலாம்
தடங்களை மறக்கலாமா?

யிர் தேடும் விடைகள் உனக்குள்
கூடுதலாய் கூடத்தான் செய்கிறது
இருந்து மறந்துதான் போகிறாய்..
கேட்பாரற்று நானிருப்பதால் ...

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

உனைபோலத்தான் காற்றும்...-




செவிகளின் இன்பமா நீ

தேடியலைகிறது உன் 

குரலின் வசீகரத்தை ..

மலரிதழின் தன்மையா நீ

சுகந்தமளிக்கிறாய்

மனதிற்கு இதமாய்..

மாலைப்பொழுதின் வனப்பா நீ

சுழலவைக்கிறாய் என்னை..

கிறங்க வைக்கிறாய் ..

கார்குழலை ஒட்டு மொத்தமாய்

குத்தகை எடுத்தவளா நீ 

கார்மேகமாய் சுருட்டுகிறாய்

என்னிதயத்தை .

தெளிந்த நடையில் அழகான

பார்வையில்அள்ளிப்போகிறாய் 

பொத்தி வைக்கிறாய் என்னை

தொட்டு தழுவுகிறேன் காற்றை

தொடுதலில் காற்றும்

உனை போலவே வீசிவிட்டு

செல்கிறதுபார்வையை..!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்