Monday, January 13, 2014

இனிய “தை” மற்றும் தமிழர் “திருநாள் வாழ்த்துக்கள்..



பச்சைபட்டை உடுத்தியது போன்ற உன் வண்ணம்
பசும்தேகமெங்கும் பசுமையாய் என் முன்னம்

எங்கெங்கு நோக்கினும் உன் வண்ணம்
வானவில்லாய் வளைந்து மின்னும்

காணும் பொழுதினில் தலைசாய்த்து
நிலம் நோக்க நடமாடும் பொன்வண்ணம்

புன்சிரிப்பினில் நளினமாய் நாட்டியமாடும்
சலசலக்கும் இசையோடு மாலை வெயிலின்

பொன்னிறத்து மங்கையவள் இடைவெளியின்றி
சாய்ந்தாடும் பசுந்தோகையவள்

ரகத்திற்கு ஒன்றெனினும் என் உயிருக்குள்
உயிராய் விளைந்தெழும் நெல்மணியின்

திருநாளாம் அறுவடைதிருநாளை
ஆரத்தழுவி ஆண்டாண்டு தோறும்
புத்தாண்டாம்..தமிழர் திருநாளாம்….

இந்த பொங்கல் திருநாளில் உங்கள் அனைவருக்கும்
எனது இனிய “தை” மற்றும் தமிழர் “திருநாள் வாழ்த்துக்கள்..

அன்புடன்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்”

Sunday, January 12, 2014

போராடும் அன்பு.



பெரும் வெள்ளம் சூழ்
மனதில்கரை காணா

நிலையில்தூரமாய்
கரை ஓரமாய்

விரவும் நீர்பரப்புக்கு
அப்பால்விழிஒளியின்

தெரிப்பில்துடித்திடும்
உனதன்பின்சிறகு

எழுந்திடும் எனக்குள் !
மூழ்க கரையோ வெள்ளமோ

ஏதும் அறியா நிலையில்
எனதன்பை கொள்ள 

போராடும்
வெற்றிக்கொள்ளும்!



நீளும் விழியாள்

January 12, 2014 at 8:18p

வெண்ணிற தாமரையாய்
வெளியில் உதித்த ஒன்று!

விழிச்சிரிப்பில்வீதிவழி புறப்பட
பஞ்சுப்பாதம் தாங்கிய

பவள மேனியாளை
கண்ணுற்ற காற்றும் நெகிழ

கண் கொண்டு அணைத்தவர்கள்
கருகிதான் போயினர்!

கார் கூந்தல் அலையும் நடை
பார்த்து ,இடை ஒடிந்திடுமோ!

என துவண்டுத்தான் போயினர்!

நீளும் விழியாள் நெற்றி நிலம்
நோக்க நீண்டுத்தான் போனது பாதையும்…

நெடிதில் மறைந்துதான் போனாள்
நினைவுக்கனவினில்……!

பூத்தது உலகம் விழித்தது விடியல்!


**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)


Friday, January 10, 2014

இது போதுமே....



துள்ளும் எண்ணங்களும

சிற்பமாய் வடிவெடுக்க

குடைந்து உள்செல்லும்

உளியும்,தழுவி செல்லும்

காற்றை தொட்டு செல்லும்

நீ செல்லமாய் சிணுங்கயில்

தூரமும் வெகுஅருகிலே

உன் குரல் கேட்கயிலே

சுவாசிப்பதென்பது மிக

இனிமையாய் காலத்திற்கும்

இது போதுமே....



**தமிழ்**

(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை) 

சிகரம் தேடிய தென்றல்



உழன்றது மனது 

உனைநினைத்து

என்னுள் ஊறிய 

ஒன்று உடையாமல்

கடலில் ஊறிய 

அலையாய்

சூரியனில் ஊறிய 

வெப்பமாய்

காற்றில் ஊறிய 

சுழலாய்

மலரில் ஊறிய 

மணமாய்

நேர்த்தியாய் 

சங்கு கழுத்தின்

வளைவுகளாய் 

கோர்க்கபட

வர்ணஜாலம் 

கூடிக்கொண்டிருக்கிறது

என்னுள்ளிருந்து 

வார்த்தைகளாய்....

கண்டதும் 

அணிவிப்பேன்

காதலில் ஊறிய 

மாலையை உன்னுள்!!!

கட்டவிழ்ந்த பறவையாய் 

சில்வண்டாய்

சிகரம் தேடிய தென்றலாய்

சிறகடிக்கிறேன் இனிமையாய்....


**தமிழ்**

(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)


Thursday, January 9, 2014

காதல் சிறைக்குளே...



காதல் களத்தில் நடந்து
செல்லும் மென்மனது
அரங்கேற்றுகிறது
அன்பை ...
களம் முழுதும்...அன்பை ...
பறைச்சாற்றுகிறது 
துள்ளுகிறது ,அன்பினில் 
இறக்கை முளைத்த 
குதிரையாய் காதல்....

இங்கே களமும் களமிறங்க
கற்றுதேர்ந்த வில்விதையின்
வித்தைகளை முடுக்குகிறது
காதல்..

நித்தமும் சேர்ந்திருக்கும்
மகிழ்ந்திருக்கும்
அன்புற்றிர்க்கும்
அன்னையினை,
தந்தையினை
துடிக்கும் சொந்தமதை
சற்றே புறம் தள்ளி

புது மலராய் (அவன்/அவள்)
அரங்கேற்றும்... அதிசய
நிகழ்வுகள் அடையும்...
காதல் களத்தினில் 
மொத்த சொந்தமும் 
சிறைக்குள்ளே.....

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)

Wednesday, January 8, 2014

காத்திரு.... வருகிறேன்!!



நிஜம் உணரும் தருணம்
விழிவழிந்த கண்ணீர்
வழி தேட, மன விழிகள்
அணிந்த முகமூடியை
உடைத்தெரிகிறாய்..
கோர்க்கிறாய், உன்
நினைவுகளை என்னுள்...

வருவோரும் போவோரும்
சிந்திய வார்த்தைகள்
வாசலில் கோலமாய்
வார்த்தது போக
வஞ்சியுன் சுவாசம்
தேடி உன்னருகினில்
உணர்ச்சிமயமாய்
உன்முன்நெற்றித்தொட்டு
தழுவிய விரல்கள்
மெல்ல கீழிறங்க
பாய்மரக்காற்றாடி போல
அலையும் விழிகள்
இமைகோர்த்து பிரிய
மனமின்றி பனித்திருந்தது
உன் மூக்குத்தியின்
ஒளிவெள்ளத்தில் நானறிய
பிறர்க்கு புரியாத நிலை
சிந்தையில் சில்வண்டென
ஓடிய உணர்ச்சிகள்
நிதர்சனத்திற்குள் எனை
அழைக்க காதலாய்
கவிதையாய் எனக்குள்
கோர்த்த உனை உணர்ச்சிகளற்ற
உருவமாய் பார்க்க மறுத்த
என்னிலை நீ அறிவாய்..
உடைகிறேன்
விழிகரைஉடைந்து
வெள்ளத்தில்.மூழ்குகிறேன்
தனியே .....

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)