Tuesday, March 25, 2014

தீவிரவாதியாகிறேன் ..!






செழித்திருக்கும் மல்லிகை 

தோட்டத்தில்


சூழ்ந்திருக்கும் தேனிக்களின் 


கூட்டத்தில்


முந்தியும் பிந்தியுமாய் சேமிக்கும் 


அறை நோக்கி


விர்ரென்று பறக்கும் ”ஜெட்” டாக 


பறந்து செல்கிறது 


என் பொழுதுகள் ...


உன் வருகைக்காகவே..!!


மல்லிகையின் வாசம் சூழ்ந்திருக்கும்


கார்குழலில் இணைந்திருக்கும் 


சங்கு கழுத்தில் வழியும் 


வியர்வை துளி .உன் ஒற்றை 


மூக்குத்தியாய் மின்னுகிறது 


ஒளி வெள்ளத்தில்..!!


பொட்டு பொட்டாய் பட்டென 


விரியும் பருத்தி பஞ்சிற்கென 


காத்திருக்கும் கிள்ளையாய்


என் காத்திருப்பின் கவனம் 


மொத்தமும் சிதறி தெறிக்கும் 


மெர்க்குரியாய் உன் அள்ளமுடியா 


அடுக்குப் புன்னகையில் அமிழ்ந்து 


போகிறது. அமிழ்ந்ததை அள்ளி 


கொட்டினாலும் தீராத அன்பு 


உன்மேல் தீவிரவாதமாய் 


என்னை முடக்கி போடுகிறது 


அடியே தீவிரவாதியாகிறேன் 


உன்னால் உனக்குள்...!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...




கட்டங்களுக்குள் கட்டிடங்களுக்குள்,

கணிணிக்கு முன் கவிழ்ந்தமுகங்கள் ..!

சிதறும் எண்ணங்கள் சிதையும் மனங்கள்..!

பொருளாதார நிலை மட்டுமே உயர்வுஎன

தேடும் சமூகத்தில் கணநேரமும்தனக்கின்றி

உழைக்கும் மெய் முகங்கள்..!

மறக்கின்றது  மெய்யை..!

காணாமல்  கரைந்து போகிறது ,

விழி தேடும் சொந்தங்கள் ..!!

கனாக்களில்  மட்டுமே நிதர்சனம்..!!

இதுதான் இன்றைய பெண்மை..!!

ஏதும் எதிர்பார்ப்பின்றிஉழைக்கும்  

                 எம்மக்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

பிஞ்சு மனம்.....




விரல்களில் சிக்குண்டு 
வெளிவர முடியா பிஞ்சு குழந்தை 
தவிக்கின்றது விளையாட ..!
தாயின் கைபிடித்து பள்ளிசெல்லும்
பிஞ்சு..!

மூச்சு முட்ட வியர்வை வழிய
மூட்டை தூக்கி எட்ட
நடைபோடும் பிஞ்சுகள்
தூக்கத்தில் சிரிக்கிறது..
ஒடி விளையாடுகிறது
கனவினில்  ……!

தாய் தரும் அனைத்தும் பள்ளி
இடைவேளையில்.! 
கடித்து மென்று தின்றுவிடுகிறது
குப்பைகூடைகள் ..!
வகுப்பறையில் நடந்து நடந்து
பழகும் ஆசிரியையின் பார்வை
மறைவினில்…!

காய்ந்த மையும்,கலைந்த தலையுமாய்
கண்ணிரண்டும் விளையாட்டு
மைதானத்தில் வட்டம்போட
முடிந்தது வகுப்பு....!
ஏங்கும் மனம் எதிர்பார்க்கும்
தாயின் வரவை..!

கைவிரலில் இணைந்த சுகம்
கதைப்பேசுகிறது தாயிடத்தில்
அவிழ்த்து விட்ட கன்றாய் ஆட்டம்
போட்டபடி ..!

  
காலையும் மாலையும் இல்லையெனில்
பிரிவென்பதே இல்லை
அம்மாவிடமிருந்து..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

ஐம்பெரும் காப்பியமாய்...





இமை சொட்டும் நீர் சிதறிப்போனது..! 

விழிக்குள் ஒளிர்ந்த வெண்முத்தை 

கண்ணுற்ற 

அடர் மழையும் சிலிர்த்தது..! 

அள்ளி சென்ற காற்றும் 

மெல்ல கிள்ளி சென்றது..! 

துள்ளிசென்ற குடையும் 

மேனி நனைய சிறகணிந்து 

காற்றில் இணைந்து சென்றது.! 

கடந்து சென்ற கார் முகிலும் 

இடியாய்சத்தமிட்டு சென்றது.! 

அழகின் தேவதையை ஒரு 

பார்வையில் கிள்ளிக்கொள்ள 

மின்னலும் சுற்றி சுற்றி சுழன்றது..! 

ஐம்பெரும் காப்பியமாய் 

கண பொழுதினில் கரைந்து போனாள் 

கன்னியவள்எனக்குள்..!!

  

கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

மெய் வளர்த்தேனடி....




சுழன்றோடும் நதியில்
பொங்கிடும் ஊற்றாய்
சிலிர்த்திடும் நுரையின்
தீற்றலில் உன் முகம்
நான் கண்டேனடி..!!

வளைந்தோடும் நதியின்
நடையின் சுழிப்பில்
உன் இதழின் சுழிப்பு
நான் கண்டேனடி..!!

உள்வாங்கும் சுழலில்
உன் இமையிரண்டும்
சுகமாய் சேருவதை
நான் கண்டேனடி..!!

ஊர்வந்து சேர்ந்தேனடி
உனைகாண உவகையில்
உன் பூரிப்பை நான் காண
வந்தேனடி..!!

ஓளித்தீற்றலாய் உன்னுடன்
ஓர் இணை கண்டதும்
உன்பொய்யான காதலை
மெய்யென கொண்டு
மெய் வளர்த்தேனடி…
வீணாய்ப்போனேனடி..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

தைரியமற்ற....




காற்றின் பலம் புழுதியின்
வீச்சில் கலைந்து போகிறது ..!!

காதலின் பலம்பிரிவின்
இடைவெளியில்சோர்ந்து போகிறது..!!


நெஞ்சக்கூடு விம்மித்தணிகிறது
தைரியத்துடன் கூடிய பயத்தில் 
கடைசியிலாவது வருவாய் 
எனும் நம்பிக்கை..!!


சுழல்கிறது காலம் 
மின்மினிபூச்சியாய்..!!

காலத்திற்கும் மதிப்பில்லை
காதலுக்கும் மதிப்பில்லை
உன் அகராதியில்..!!

கவிதையாக்கம் 
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Friday, February 21, 2014

செங்கற்சுவர்கள்.....


விரல்களில் அடிப்பட்டு வழியும் 
பிஞ்சு அடிமைகளின் குருதி 
கொண்டு சிவக்கிறது….!

விழி மூடிய முதலாளியின்
கனவில் குரூரமாய்
குதறிடும் நாய்கள்……!

பனைஓலையில் பாய்ந்தோடும் 
பல்லியை காட்டி 
விளையாடும் பிள்ளைகள் இருளில்…!

காய்ந்த தேங்காய் வட்டுக்களை
சுரண்டும் தாய்மை…!

காய்ந்து வற்றிய மார்பில் ஈரம்
தேடும் ஓர் உயிர்..!

கனத்த மழையில் பிசைந்த மண்ணும் 
பிரிந்துதான் போகிறது..!

பனை ஓலையில் சொட்டும் துளியின் 
ஒலியில் நாளை வேலைஇல்லை
என மகிழும் தாய்மை..!

மழையை சபித்தபடி 
விறைப்பாய் வெள்ளுடை அணிந்தவன்..! 


அடுக்கி வைத்த செங்கற்சுவர்கள் 
கலவைகளுக்கு இடையே 
வண்ணம் மாறித்தான் போனது..!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்