Sunday, January 1, 2012

விழி வழி தேடுகிறேன்



புன்னகையுடன் ..
சிறு துளியோரப்பார்வை ..
பேசுகையில் சட்டென திரும்பி வரும் பார்வை ..
கவனிக்க வைக்கும் அந்த பார்வை ..
கை மறைத்து பார்க்கும் பார்வை ...
கோவமாய் பார்வை பார்க்க நான் ...
சட்டென திரும்பும் பார்வை ...
ஏங்குகிறேன் அதற்க்கு ....
நாளும் கடக்க மீண்டும் பார்வை..
தாக்குகிறது பார்வையால் என்னை...
கோபத்திலும் பார்வை..ரசிக்க
பார்வைக்காக ஆடுகிறேன் ...
பாடுகிறேன் தூங்க மறுக்கிறேன் ..
நமக்கான பார்வை இதுதானா என..
தேட தேட கிடைத்தது பார்வை..
உன் விழி என் பார்வை...நீ பார்த்த பார்வை ...
தேடுகிறேன் தேடுகிறேன் நான் இன்று
எதை தேடினேன்.... தேடுகிறேன்
புரியவில்லை...விழி வழி...............

நினைவுகளுக்கும் மரணம் .. மௌனம் ...




பேசுதலும் ........பார்த்தாலும் ..மௌனம்
எப்போதும் வரும் விழியோர கண்ணீரும் மௌனம்
எப்போதோ வரும் இதோழர புன்னகையும் மௌனம்
எப்போதும் தொட்டு செல்லும் காற்றும் மௌனத்தில் இன்று..
எப்போதும் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் மௌனம்
எப்போதோ நடந்த நிகழ்வுகள் ,விழி விரிந்த புன்னகையின் நினைவுகள்
எப்போதும் அங்கே கூட்டி செல்கிறது .
எப்போதும் உள் செல்லும் காற்று வெப்பமாய் இன்று
...மௌனமாய் இருக்க சொல்லிவிட்டு..
குளிர்ந்து மௌனமாய் மௌனமாகியது ..ம்... மௌனம்
இனி நினைவுகளும் மௌனமாகியது....
தொடர்வேன்..காற்றால் மௌனமாய் .. உன்னை

Friday, December 30, 2011




புதிதாய் நீ..

ஒவ்வொரு முறையும்
உன்னை அதிகமாய்
புரிந்து கொள்கிறேன் ..ஆழமாய்
நெருங்குகிறேன்
உன் சிறு சண்டைகளுக்கு பின்..
உன்னையும் என் போலவே எண்ணுகிறேன்
நீ கொண்ட அதீத பாசம் என்னை
சண்டைக்குள் இழுக்கிறதே ..அதனால் என்னவோ
மௌனமாய் உன் முன் ...உன் மூச்சு காற்றின்
நெருக்கத்தில் இடை வளைத்து,
என் உயரம் வளைத்து ... உன்னை
என் இதழ் சேர்த்து ஆழமாய் நெருங்குகிறேன் ..சண்டைகளிணுடே..
புதிதாய் நீ ஒவ்வொரு முறையும் ....

Wednesday, August 24, 2011


குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட

..தனிமை...மட்டுமே யடி கண்ணே ....
நொடி பொழுதில் ,இவையனைத்தும் காணவில்லை...
விழித்தேன் ..அணைத்தபடி மகளே அருகினில் .. ....

Thursday, August 18, 2011



நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....
சிரித்து,,,,
துவண்டு...வாடி..உதிர்ந்து ..தனியனாய் .......
சிலிர்த்து ..தளிர்த்து புதியவனாய் ......
மழை ..


Tuesday, July 12, 2011


உயரங்களில் அளவில்லா வானம் ...
வானங்களில் மட்டுமே வசப்படும் ...மேகம்....
மேகம் மட்டுமே மெய்யாக ...
மெய்யான அன்பு மட்டும் ..வானத்தை போல ....

Tuesday, May 3, 2011

நீ அறிய முடியா நிலையில்...


எதை எதிர்பார்கிறேன்... வசந்தத்தை வாழும் காலங்களில் ....
துளிர்த்து அடர்ந்து ,விழுதுகளுடன் தோப்பாய்
....வாழ நினைய ..

...மழலை ரசித்து ...........தன்னை நினையாது..

உயிராய் வளர்த்தவளே..
உயிராய் மட்டுமே வாழ்கிறேனடி ..
உயிர் காதல் நினைய...
மறந்து உனை.....
தோப்பாகவில்லையடி நான்....
உயர் காதல்..உயிர் காதல் ..உடல் பொசுக்க கருக..............
-மறந்திருந்தால்..உன் உயிராய் இருந்திருப்பேன் ..
எனை ரசிக்கும் உனை ரசித்து ...
..உடல் துறந்து நிலையில்...
நான் ..நீ அறிய முடியா நிலையில்...
மீண்டும் வருவேனடி..
உன் மகளாய் மட்டும்...
வாழ்வேனடி
...
விழுதுகளுடன் தோப்பாய்....
மறு ஜென்மம் என்றிருந்தால்...